தீராத தலைவலி ஒற்றை தலைவலி குணமாக கண் நோய் அகல சரும நோய் விலக எலும்புமுறிவு முதுகெலும்பு பிரச்சினை சரியாக மாரடைப்பு ஹிருதய நோய் பாதிப்பு குறைய பயம் விலக துணிவு கிடைக்க தந்தை மகன்/மகள் அன்பு உறவு பலப்பட தந்தை ஆரோக்கியம் பெற வேலை கிடைக்க பதவி உயர்வு பெற சுயதொழில் வியாபாரத்தில் முதலிடம் முன்னேற்றம் பெற பெயர் புகழ் பிரபல்ய யோகம் கிடைக்க அரசாங்க அனுமதி ஆதாயம் சலுகை உண்டாக சூரிய சம்மந்தமான தோஷங்கள் அகல – ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு.
கிழமைகளும் விரதங்களும் – ஆதிவார விரதம் சோமவார விரதம் மங்களவார விரதம் குருவார விரதம் சுக்ரவார விரதம் சனிவார விரதம் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என கிழமைகளிலே விரதம் அனுஷ்டிக்கக்கூடிய பழக்கமானது இருக்கிறது. அதிலும் அக்கிழமைகள் குறிப்பிட்ட மாதங்களில் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. அவை
ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆவணி ஞாயிறு புரட்டாசி சனி கார்த்திகை சோமவாரம் தை வெள்ளி.
ஆவணி ஞாயிறா? சித்திரை ஞாயிறா? – ஞாயிறு சூரியனுடைய ஆதிக்கம் மிகுந்த நாள். ஆவணி மாதத்திலே சூரியன் சிம்ம ராசியிலே ஆட்சி பலம் பெறுகிறார். அதனால் ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷமானவை என்றால்? சித்திரை மாதத்திலே சூரியன் உச்சபலம் பெறுகிறாரே, ஆட்சிபலத்தை விட உச்சபலம் கூடுதல் அல்லவா? ஆதலால் சித்திரை மாத ஞாயிறு தானே விசேஷமானதாக இருக்கவேண்டும்? என்ற கேள்வி நிறையபேருக்கு ஏற்படுகிறது.
நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்ததை ,கடைபிடிக்கச் சொன்னவற்றை அப்படியே வழித்தொடர்வதே உத்தமம். ஏன் என்றால் பெரியோர் சொன்ன விஷயங்களுக்கு பின்னே பல காரண காரியங்கள் இருக்கும். அவற்றிலே நம்மால் ஒருசிலவற்றையே கண்டறிய முடியும். எனவே நம்மால் கண்டறிய முடியதனவற்றை சந்தேகப்படுவதோ கைவிட்டுவிடுவதோ கூடாது. ஒருவேளை சில காலத்திற்கு பிறகு காரணம் தெரியவந்தால் , இவ்வளவு நாள் இப்பலனை அடையாமல் விட்டுவிட்டோமே என வருந்த நேரிடும்.
ஆவணிமாத ஞாயிறு ஏன் விசேஷம் – நமக்கு தெரிந்த காரணத்தை சிந்திப்போம். சூரியன் ஒளிக்கடவுள். குறிப்பிட்ட அளவுக்கு மேலான ஒளியை காணவோ நெருங்கவோ முடியாது/கூடாது. சித்திரையில் அதிக ஒளி/வெப்பம். சொல்லப்போனால் அக்கினி நக்ஷத்திர தோஷம், கத்தரி தோஷம் ஏற்படுகிறது. மேலும் சூரியன் உச்சம் பெறக்கூடிய மேஷ ராசியிலே செவ்வாய் ஆட்சி, சனி நீசம் பெறுகின்றனர். ஆனால்
சூரியன் ஆட்சி பெறக்கூடிய சிம்மத்திலே எந்த ஒரு கிரகமும் உச்சமோ நீசமோ பெறுவதில்லை.மேலும் சூரியன் ஆட்சி பலத்தோடு மூலத்திரிகோண பலமும் பெறுகிறார். சிம்ம ராசி காலபுருஷ தத்துவத்தின் பூர்வ புண்ய ராசி. எனவே ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமை விரதம் பூஜை வழிபாடானது மிகச்சிறப்பு வாய்ந்ததது.
ஆவணி ஞாயிறு வழிபாட்டு முறை – ஆவணி மாத ஞாயிறன்று அதிகாலையில் எழவேண்டும். புண்ய தீர்த்தங்களிலோ, இயலாதபோது இல்லத்திலேயோ தலைக்கு ஸ்நானம் செய்து நித்யபடி பூஜைகளை செய்யவேண்டும். சிவாலயம் சென்றால் சிவசூரியனாகவுள்ள சிவபெருமானை செந்தாமரை சாற்றி வழிபட்டு நவக்ரஹ சூரியனையும் வழிபடவேண்டும். வைணவ ஸ்தலம் சென்றால் சூரியநாராயணராக உள்ள பெருமாளை செந்தாமரை சாற்றி வழிபட வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்யவேண்டியது அவசியம். முடிந்தவர்கள் ஆசனங்களுடன் கூடிய சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது மிக விசேஷம்.
வெள்ளைப்பசு, மாணிக்கக்கல்(RUBY), செப்பு (COPPER) பூஜை பொருட்கள், செப்பு பாத்திரத்திலே கோதுமை தானியம், கோதுமையில் பரிசுத்தமாக தரமாக செய்யப்பட்ட இனிப்புகள், சிவப்பு வஸ்திரங்கள் இவற்றில் சக்திக்கேற்றதை தானம் கொடுக்கவேண்டும்.
வீட்டு போஜையிலே நைவேத்யம் செய்ததை போஜனம் செய்யலாம். பகலில் தூங்கக்கூடாது. இவற்றோடு வீட்டு பெரியவர்களை கேட்டு முறைப்படி இந்நாளில் விரதமிருந்து
தீராத தலைவலி ஒற்றை தலைவலி குணமாகி கண் நோய் அகன்று சரும நோய் விலகி எலும்புமுறிவு முதுகெலும்பு பிரச்சினை சரியாகி மாரடைப்பு ஹிருதய நோய் பாதிப்பு குறைந்து பயம் விலகி துணிவு கிடைக்கபெற்று தந்தை மகன்/மகள் அன்பு உறவு பலமடைந்து தந்தை ஆரோக்கியம் பெற்று வேலை கிடைத்து பதவி உயர்வு பெற்று சுயதொழில் வியாபாரத்தில் முதலிடம் முன்னேற்றம் பெற்று பெயர் புகழ் பிரபல்ய யோகம் கிடைத்து அரசாங்க அனுமதி ஆதாயம் சலுகை உண்டாகி,
ஜெனன ஜாதக சூரிய தோஷம் அகன்று சூரிய பலம் அருள் கிடைக்கப்பெற்று பாக்கியசாலியாக சுகஜீவனம் செய்யவேண்டியது.
சூரியபகவான் பிரதிதினமும் காலையில் பிரம்மாவாகவும் பகலிலே விஷ்ணுவாகவும் மாலையிலே சிவபெருமானாகவும் உள்ளார்.
சூரியபகவான் ஒவ்வொரு ருதுவிலும் ஓவ்வொரு வர்ணத்தில் நமக்கு அருள்கிறார். அதில் வருஷ ருதுவிலே வரக்கூடிய இவ்வாவணி மாதத்திலே வெண்மை நிறத்திலே உள்ளார்.
சூரிய வம்சத்திலே உதித்தவர் இராமபிரான். ஆதித்ய ஹிருதய பாராயணம் செய்து இராவணனை எளிதாக வதம் செய்தார்.
தோல்வி பயம் கவலையிலிருந்து மீண்டு இராமச்சந்திர மூர்த்தியின் அருள் மூலம் நம்பிக்கை துணிவு கிடைக்கப்பெற்று வெற்றி பெற சூரியநாராயணரை வழிபடுவோம்.
சூரியபகவான், நவவியாகரண பண்டிதரான சொல்லின் செல்வரான புத்திபலம் கொண்டவருமான ஆஞ்சநேய சுவாமிக்கு குருவாக உள்ளார்.
சூரியபகவான் தந்தை இல்லாதவருக்கு தந்தையாகவும் நம் எல்லோருக்கும் தந்தை வழி முன்னோராகவும் பொதுவாக பித்ரு காரகனாகவும் உள்ளார்.
இப்படியாக ஏராளமான சிறப்புகளை கொண்ட சூரியபகவானுடைய கிழமையான
ஞாயிறு வாரத்தின் வாரக்கடைசி WEEKEND நாளல்ல – முதல் நாள்
ஞாயிறு விடுப்பு நாள் அள்ள – விரத நாள்
ஞாயிறு ஓய்ந்து போகின்ற ஓய்வு நாளல்ல – சூரிய வழிபாடு மூலம் சக்தி பெறவேண்டிய ஒப்பற்ற நாள்.
ஞாயிறு அசைவம் சாப்பிட ஒதுக்கப்பட்ட நாளல்ல – சூரிய நமஸ்கார ஆசனம் செய்யவேண்டிய நாள்.
ஞாயிறு மது அருந்தவேண்டிய நாளல்ல – மனதை (குடும்பத்தோடு கோவில்சென்று) செம்மை படுத்தவேண்டிய நாள்,
ஞாயிறு தாமதமாக எழவேண்டிய நாளல்ல – தரித்திரத்தை போக்கவேண்டிய நாள், முன்னதாக விழித்தெழ வேண்டிய நாள்.
ஞாயிறு பகலில் தூங்கவேண்டிய நாளல்ல – பத்தியில் ஈடுபட வேண்டிய நாள்.
ஞாயிறு அதிகநேரம் தூங்கவேண்டிய நாளல்ல – நல்லதை துவங்கவேண்டிய நாள்.
வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்த ஞாயிற்றுக்கிழமைகளிலே விரதம் வழிபாடு செய்து நற்பலனை அடைய வேண்டுகிறேன்.
அதிலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் பன்மடங்கு சிறப்பு பெற்றதால இவ்வாண்டு ஆவணிமாதம் 6, 13, 20, 27 ( AUGUST 22, 29, SEPTEMBER 5, 12 ) தவறாது விரதம் வழிபாடு செய்து சூரியநாராயணருடைய அருளுக்கு பாத்திரமாவோம்.
சுய ஜாதக பலாபலன் அறிய தோஷ நிவர்த்தி கிடைக்க அடியேனை தாரளாமாக அணுகலாம்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply