கோரிய வரம் அருளும் கோகுலாஷ்டமி DO’S & DON’TS OF KRISHNA JAJAYANTHI – PART 1

art travel statue market

கல்வியில் வித்தைகளில் பிரகாசிக்க சாந்தீபனி முனிவரிடத்தில் குறுகிய காலத்தில் நிறைவான கல்வி வித்தை போற்பயிர்சிகள் கற்றார்.

கலைகளில் தேர்ச்சிபெற புல்லாங்குழல் இசையால் மனிதரை மட்டுமல்ல மாடு கன்றுகள் மரம் செடி கொடி பறவைகள் என ஜீவராசிகள் அனைத்தையும் இன்பத்தில் ஆழ்த்தினார்.

விளையாட்டில் வெற்றிபெற கம்சனுடைய மிகச்சிறந்த மல்யுத்த வீரர்களை அனாயாசமாக வெற்றி கொண்டார்.

உத்தியோகத்தில் உயர்வுபெற பாரிலே சிறந்த சாரதியாக பார்த்தனுக்கு சாரதியாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பை செவ்வனே ஆற்றினார்.

நிர்வாகத்தில் நிகரற்றவராக யாதவர்களுக்கு நகரம் அமைத்து அவர்களை சிறப்பாக வழிநடத்தினார்.

சுயதொழிலில் சூரனாக வியாபாரத்தில் வெற்றிபெற பசுமாடு கன்றுகளை பாசத்தோடு பராமரித்து பால்வளத்தை (தயிர்,வெண்ணை,நெய்) பெற்றுத்தந்தார்.

அரசியலில் அசாத்திய திறமைபெற அசைக்கமுடியாத இடம்பெற அரசாங்க ஆலோசகராக சூழ்ச்சியில் சிறந்த சகுனியின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்தார்.

தோல்வியிலிருந்து மீண்டுவர குருக்க்ஷேத்ரப் போரிலே பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் தக்க உபாயத்தை கூறி பாண்டவர்களை பலப்படுத்தினார்.

தீர்க்கமுடியாத பிரச்சனையையும் சுலபாக தீர்க்க ஜராசந்தன் தொடர்ச்சியாக போர்தொடுப்பதால் ஏற்படும் இழப்புகளை தடுக்க தன் மக்களுக்காக புதிய நகரம் அமைத்தார்.

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக தங்கள் பக்கம் படைபலம் அதிகம் இருந்தபோதும் சகுனியும் துரியோதனனும் கண்ணன் எதிரணியில் நிற்கிறானே என அஞ்சியது.

தர்மசங்கடமான நிலையையும் சமாளிக்க சாதகமாக்க குந்திதேவி கர்ணனைப்பற்றிய உண்மையை கேட்க அச்சூழ்நிலையை சிறப்பாக கையாள்வது.

எதிராளி வெற்றிக்கான சூக்க்ஷுமத்தை அறிந்துவிட்டாலும் அவனை தடுக்க போர் தொடங்க பூஜை நேரத்தை சகாதேவன் துரியோதனனுக்கு உரைத்தபோதும் அமாவாசை நாளையே மாற்றினார்.

சமயோசித புத்தி கிடைக்க துரியனுக்கு உதவவேண்டிய சூழ்நிலையிலே தன்னை அவன் பக்கம் வர கோராதிருக்க தன் படைபலத்தை விவரித்து காட்டுவது.

வீண்பழி சுமத்தினாலும் விரக்தி அடையாதிருக்க சியாமந்தக மணியை அபகரித்தான் என்றபோது தான் களங்கமற்றவர் என நிரூபித்தார்.

பலமிருந்தும் பகைவருக்கு வாய்ப்பு தர ஏச்சு பேச்சு எள்ளி நகையாடுதல் அவமானப்படுத்துதல் என தொடர்ந்து செய்தபோதும் பற்பல வாய்ப்புகள் தந்து சிசுபாலனை பலமுறை பொருத்துக் கொண்டார்.பொருமைக்கும் எல்லையுண்டு தவறுக்கு தண்டனையுண்டு என்பதையுணர்த்த சிசுபாலனை முடித்தார்.

ஆயுதமிருந்தும் அறிவை பிரயோகிக்க முசுகுந்த சக்கரவர்த்தியைக்கொண்டு காலயவணனை அழித்தார்.

கொடியவன் கோமகன் (அரசன்) ஆனாலும் கொன்று நல்லாட்சி மலரச்செய்ய நல்லோரைக்காக்க கம்சனை கொன்று தாய் தந்தையரை மீட்டு தாத்தா உக்கிரசேனரை அரியணையில் அமர்த்தினார்.

மக்களைக் காக்க மகத்தான செயல் புரிய அஸ்வத்தாமனின் ஆயுதத்தால் ஏற்படவிருந்த பேரழிவை தடுத்து உலகை காத்தார்.

இயற்கை வளத்தை அனுபவிக்க தடையாயிருக்கும் இமய பலம் கொண்டவரையும் அடக்க யமுனா நதிக்கரை மரங்கள் , நதிநீர் அருந்தும் பசுக்கள் மனிதர்கள் காளிங்கனின் விஷத்தால் பாதிக்கப்படுவதை தடுக்க காளிங்கனை அடக்கி காளிங்க நர்த்தனம் புரிந்தார்.

காக்கவேண்டியவரே கஷ்டம் கொடுத்தால் அதை முறியடித்து அவருக்கு நற்பாடம் புகட்ட தேவேந்திரன் ஏற்படுத்திய புயல் மழையிலிருந்து மக்களை ஆவினங்களை காக்க கோவர்த்தன கிரியை தூக்கினார்.

செய்தொழிலில் உயர்வு தாழ்வு பாராதிருக்க பசுமாடு கன்று மேய்த்தலை ஆனந்தமாக செய்கிறார். மாடு கன்று மட்டுமா நம்மையும் இவ்வுலகத்தையும் காக்கும் கடவுள் அவர்தானே.

நல்லோர்க்காக தன்னிலையை தாழ்த்திக்கொள்ள தயாராக கௌரவர் தீயவராயினும் பாண்டவர்க்காக தூது சென்றார்.

எடுத்துக்கொண்ட பொருப்பிலே ஏற்றத்தாழ்வு பாராதிருக்க தர்மம் வெல்ல பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டியாக) இருக்கிறார்.

ஆபத்தில் இருப்போரை காக்க (நேரடியாக போகமுடியாத சூழ்நிலையிலும்) திரௌபதிக்கு அபயமளித்து ஆடையளித்து இரட்சித்தார்.

மிகப்பெரிய துன்பத்திலிருந்து மிகச்சிறிய உபாயம் மூலம் மக்களைக் காக்க அக்க்ஷய பாத்திரத்திலே ஒட்டிக்கொண்டிருந்த ஒரு பருக்கை சோற்றின் மூலம் துர்வாச முனிவரின் கோபத்திலிருந்து சாபத்திலிருந்து பாண்டவர்களை காத்தார்.

தன்னம்பிக்கை இழந்து தாழ்வு மனப்பான்மை கொண்டு தளர்ந்து போனவரை ஊக்கப்படுத்தி உற்சாகமாக்கி உன்னத காரியமாற்றவைக்க அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து அருள்கிறார்.

உலகை அச்சுறுத்தவல்ல அழிக்கவல்ல ஆயுதத்தையும் தடுக்கும், பலமிழக்க வைக்கும் உன்னத பலம்பெற அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்திலிருந்து பாண்டவரையும் பாரதத்தையும் இப்பூவுலகையும் காத்தார்.

தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போகவைக்க ரதத்தை பூமியிலே அழுத்தி கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து விஜயனை காத்தார்.

சூழ்ச்சியால் வீழ்த்த நினைப்பவரை வெற்றிபெற தூதுவனாக வந்த கண்ணனை பாதாளத்திலே விழச்செய்து சிறைபிடிக்க முயல விஸ்வரூபம் எடுத்தார் பாண்டவதூத பெருமாள்.

நல்லவர் உயிர்காக்க தீயவரை அழித்தொழிக்க சட்டத்தையே மாற்ற தனஞ்சயனை காக்க ஜெயத்ரதனை அழிக்க சூரியனையே மறைத்து பின் தோன்ற வைத்தார்.

திறமையிருந்தும் வெற்றிபெற முடியாதவருக்கு குருவாகவிருந்து சூக்க்ஷுமத்தை புரியவைத்து வெற்றிபெற வைக்க பீமன் எத்தனைமுறை ஜராசந்தனை தோற்கடித்து வீழ்த்தினாலும் கொன்று உடலையே இரண்டாக பிய்த்துப்போட்டாலும் மீண்டும் ஜராசந்தனின் உடல் ஒன்றாகி உயிர்பெற்று எழும்போது, மதுசூதனன் பீமனுக்கு இரகசியமாக வெற்றிக்கான உபாயத்தை அருளினார்.

நம் ஆதரவாளர்களை எதிரி தன்வசப்படுத்திக் கொண்டாலும் புத்திபலம் கொண்டு வெற்றிபெற சல்லியனை தந்திரத்தால் கௌரவர் தன்பக்கம் சேர்த்தபோதும், அதேபோன்ற தந்திரத்தை கையாண்டு சல்லியனிடம் வித்தை கற்று பாண்டவர்க்கு வெற்றி தந்தார் பரந்தாமன்.

எதிரியின் பலவீனம் அறிந்து அவன் பலத்தை அடைந்து வெற்றிபெற மாதவன் மாற்றுரு கொண்டு கர்ணனிடம் புண்ணிய பலனை தானமாகப்பெற்று பிறகு அர்ஜுனனை அம்பெய்த சொல்லுதல்.

வாக்கு சாதுரியத்தால் வஞ்சகனையும் தன்வசப்படுத்த துரியோதனனை இடுப்பிலே ஆடை அணியச்செய்து அவன் முழுதேகமும் வஜ்ராமாவதை தடுத்தார்.

எதிரியின் சூழ்ச்சியை யூகித்து முன்னெச்சரிக்கையாக இருக்க திருதிராஷ்டிரன் பீமனை கட்டியணைத்து எலும்பை முறித்து (மலைப்பாம்பு போல) கொல்ல நினைத்ததை அறிந்து பீமனை காப்பாற்றினார்.

எதிர்வரப்போகும் அழிவை உணர்ந்து தக்க உபாயத்தை கடைபிடிக்க உத்திரையின் கர்ப்பத்திற்கு ஆபத்து ஏற்பட குருவம்சமே அழிந்துவிடக் கூடாதென காத்தருளினார்.

வித்தைகளை பிறரிடமிருந்து லாவகமாக அறிந்துகொள்ள சல்லியனிடத்தில் இருந்து தேரோட்டும் கலையிலே குறிப்பிட்ட சிலவற்றை தந்திரமாக கற்ற தாமோதரன் போரின் முக்கியவிடத்தில் அதைக்கொண்டு சாதிக்கிறார்.

பாராட்டையும் விமர்சனத்தையும் சரிசமமாக பாவிக்கும் மனப்பக்குவம் பெற போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.என்ற வைர வரிகளை நினைவில் வைத்தல்.

வைராக்கியம் கொண்டவரையும் (நல்லதற்காக) நம்வழிக்கி கொண்டுவர பொய்யுரைப்பதில்லை என்ற யுதிஷ்டிரனின் தர்மத்தையும் காத்து அவர் மூலமாக பொய்யையும் வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

வல்லவனின் பலவீனமறிந்து அதைக்கொண்டே அவனை வீழ்த்த துரியோதனனின் பலவீனம் அறிந்து பீமனுக்கு உணர்த்தி தர்மத்தின் வெற்றிக்கு ஆதாரமாய் இருந்தார் கிருஷ்ணர்.

ஜகத்குருவான கிருஷ்ணரை வழிபட்டு கீதையில் காட்டிய வழியை பின்பற்றி பயனடைவோம்.

ஸ்ரீ கிருஷ்ணருடைய திரு அவதாரமும் லீலைகளும் அவர் அருளிய பகவத்கீதையும் நம்முடைய வாழ்நாள் முழுவதற்குமான வழிகாட்டியாகவும் அனைத்துவிதமான தீமைகளில் இருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ளவும் நல்லன எல்லாவற்றையும் நாம் அடையவும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றது.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பூஜை விரதம் வழிபாடு முக்கிய பிரார்த்தனை பலன்கள் பிரசாதங்கள் அவசியம் செய்யவேண்டியது கட்டாயம் தவிர்க்கவேண்டியது இப்படியான தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவிலே பார்ப்போம்.

சந்தானகோபாலக்ருஷ்ண ஹோமம் பூஜை செய்துவைக்க அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

One response to “கோரிய வரம் அருளும் கோகுலாஷ்டமி DO’S & DON’TS OF KRISHNA JAJAYANTHI – PART 1”

  1. Super

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading