ஜோதிடர் பீமராஜா ஐயர் ஆகிய நான் ஆன்லைனில் ஜோதிட வகுப்புகளை தொடங்கப் போகிறேன்.
“குரு இல்லா வித்தை பாழ்” – குரு இல்லாமல், ஒருவரின் திறமை முழுமையடையாது புத்தகங்கள், Google, YouTube போன்றவற்றில் ஜோதிடம் கற்க பலவழிகள் உள்ளன.
மேற்கூறிய அனைத்து ஆதாரங்களிலிருந்தும் ஜோதிடம் கற்க முயன்ற பலரால் ஜோதிடத்தை நிறைவாக கற்க முடியவில்லை,
எனவே இவர்களுக்கும் மற்றும் புதியவர்களுக்கும் (அதாவது ஜோதிடத்தில் புதியவர் முதல் பலவழிகளில் கற்க முயற்சித்தவர் வரை ) குருவருள் திருவருள் துணைகொண்டு மிக எளிய முறையில் ஜோதிடத்தை கற்பிக்க உள்ளேன்.
கடந்த 25 ஆண்டுகளாக நான் ஜோதிட துறையில் இருக்கிறேன்.
குறிப்பாக தொலைக்காட்சியில் வரத்தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிடம் கற்பிக்க பலர் என்னை அணுகினர்.
ஜோதிடம் எனக்கு நற்பெயரையும் புகழையும் வாழ்வாதாரத்திற்கான பொருளையும் அருளியது, வாழ்க்கையையே கொடுத்தது. அப்படிப்பட்ட ஜோதிடம் மற்றும் சமூகத்திற்கு நான் திருப்பிச் செலுத்துவதற்கான பொன்னான நேரம் தற்போது வந்துள்ளது.
கால் நூற்றாண்டு கால ஜோதிட ஆராய்ச்சி மூலம் நான் பெற்ற அனுபவங்கள், அறிந்த சூக்ஷுமங்கள், உணர்ந்த ரகசியங்கள், எனக்கும், என் சந்ததிக்கும் மட்டுமே ??? என்ற சுயநல நோக்கத்திலிருந்து விடுபட்டு !!! எனது 25 ஆண்டுகால உழைப்பை உலகுக்கு அர்ப்பணிக்க வேண்டும், பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தை எனக்குள் விதைத்த எனது தந்தையும் முதல் குருவுமான தெய்வத்திரு ஜமீன் எண்டத்தூர் சுப்ரமணிய ஐயர் அவர்களுக்கு இப்பிறவி மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து பிறவிகளிலும் எனக்கு வரும் புண்ணியத்தை அளிக்கிறேன்.
யாருக்கு: ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், ஜோதிடத்தின் மீதும், என் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் ……
எப்படி: கற்றல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது, ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்விஅறிவு அனுபவஅறிவு கிரஹிப்புத்தன்மை ஞாபகசக்தி (கற்பூரபுத்தி, கரிபுத்தி, கதலிபுத்தி) இவற்றிற்கேற்பவும், ஆர்வம் ஈடுபாடு விடாமுயற்சி கடின உழைப்பு, குறிப்பாக நேரம் இவற்றிற்க்கேற்பவும் வித்தியாசம் இருக்கும்.
எனவே புத்தகங்களில் உள்ளவற்றை அப்படியே திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளை வகுப்புகள் போல இல்லாமல் நிஜ வாழ்க்கையின் உதாரணங்களுடன்…… படம் பார்த்து கதை சொல் என்பதுபோல…… சொல்லித்தர இருக்கிறோம். நம்முடைய மூளையிலே அனைத்தும் படமாக, காட்சியாக பதிவாகிறது. அதனால் நம்மிடத்திலே பயிலும் மாணவர்கள் சுலபமாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், கற்றுக்கொள்வதை எக்காலத்திலும் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும், t
heory முறையை முடிந்த அளவு குறைத்து practical ஆக பாடங்களை புரியவைக்க இருக்கிறோம்.
பரிகாரங்கள்: ஜோதிடம் அறிதல், பலன் உரைத்தல் இவற்றோடு கிரக பிரீதி/ ஷாந்திக்கான எளிமையான சுலபமான ஆனால் சக்திவாய்ந்த கைமீது பலன்தரக்கூடிய பரிகாரங்களையும் சொல்லித் தரப்கிறோம்.
இலக்கு: குறைந்தபட்சம் நான் 100 ஜோதிடர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் 100 ஜோதிடர்களை உருவாக்க முடியும், எனவே இந்த துறையில் எனது அனுபவமும் அறிவும் லக்ஷக்கணக்கானவர்களுக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள் : 1.இரட்டையர்களின் ஜாதகத்தை எப்படி வேறுபடுத்தி பலன் அறிவது என்ற ரகசியம் (பாடத்தின் முடிவில்).
2.ஜோதிட சாஸ்திரப்படி யாரேனும் இரண்டாவது திருமணம் செய்தால் அதை களத்திர தோஷம் என்று சொல்கிறார்கள். ஆனால் உலகில் சிலர் 3 முதல் 4 திருமணங்கள் செய்து கொள்கிறார்கள், அதை அவர்கள் சாதாரணமாக கருதுவார்கள். நம் முன்னோர்கள் கூட 2 திருமணங்கள் செய்திருக்கிறார்கள், ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் என்பது தோஷமா இல்லையா ?
3.இப்போது விவாகரத்து விகிதம் ஏன் அதிகமாக உள்ளது?
4.முன்பு ஒரு சிலர் மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் ஆனால் இன்று குடும்பத்தில் ஒருவர் என்ற அளவுக்கு ஏன் செல்கிறார்கள் ?
5.ஆரம்ப காலத்தில் குழந்தை பிறப்பது ஒரு பிரச்சினையாக இல்லை, மக்கள் பல குழந்தைகளை பெற்றனர், ஆனால் இன்று ஒரு குழந்தை பிறப்பது கூட பிரச்சனையாகிவிட்டது ஏன்?
இதற்கான காரணங்களை இன்றைய வாழ்க்கைமுறை, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் என்று சொல்லாமல், ஜோதிடரீதியாக சொல்லித்தரப்போகிறோம்.
ஜோதிடவகுப்பு / காலம்: குறைந்தபட்சம் 6 மாதங்கள் அதிகபட்சம் 1 வருட படிப்பு.
எப்போது: தினமும் 1 மணி நேரம் ஆன்லைனில். 14.04. 2024- சித்திரை 1 குரோதி தமிழ்ப்புத்தாண்டு அன்று தொடக்கம்.
நீங்கள் இந்த ஜோதிட வகுப்பில் இணைந்தால், அது நம் இருவருக்கும், நம்மால் பலருக்கும் பயனளிக்கக் கூடியதாக/ வாழ்வளிக்கக் கூடியதாக இருக்கும்.
விருப்பம் உள்ளவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் : 9884994508 (அழைப்பு அல்லது whatsapp)
ஆசிரியரை பற்றி : பீமராஜ ஐயர் சென்னை கொளத்தூரில் வசிக்கிறார், அவருடைய சொந்த ஊர் ஜமீன் எண்டத்தூர்.அவருடைய இரு தாத்தாக்களான, ஜமீன் எண்டத்தூர் துரைசாமி ஐயர் மற்றும் சிதம்பரம் நடேச கணபாடிகள் ஆகியோர் சிறந்த ஜோதிடர்கள் மற்றும் பிரஸ்ன சாஸ்திரத்தில் சிறந்தவர்கள்.பரிகாரங்கள் செய்தும், மந்திர ஜபம் செய்தும் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட பாரம்பரிய ஜோதிடக் குடும்பத்தைச் சேர்ந்த பீமராஜா ஐயர் அவர்கள், ஜோதிட துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.அவர் கொடுக்கும் பரிகாரங்கள் அதிக பொருள் செலவு வைக்காது. கோவில்களுக்குச் செல்வது, விரதம் இருப்பது மற்றும் அன்றாட வாழ்க்கைமுறை நடவடிக்கைகளில் எளிய மாற்றங்களை செய்வது மட்டுமே.
பீமராஜா ஐயருக்கு வாஸ்து சாஸ்திரத்திலும் தேர்ச்சியும் அனுபவமும் இருக்கிறது.
Beemaraja Iyer’s TV PROGRAMS —— 2013 POLIMER TV யில் குரு பெயர்ச்சி LIVE முதல் டிவி நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக செய்தார். பிறகு தினசரி ராசிபலன் நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
2014 PEPPERS TV யில் தினசரி ராசிபலன் வளம்தரும் வாஸ்து , நலம்தரும் நவரத்தினங்கள் பற்றிய அறிய தகவல்களை moon signs பகுதியில் அளித்தார்.
2015-2016 i TV யில் (Interactive TV) தினசரி காலை 6.00 to 07.30 ஒன்றரை மணிநேர LIVE/நேரலை நிகழ்ச்சியை செய்தார். இதில் அர்த்தமுள்ள நம்பிக்கைகள், நீதிக்கதைகள், இன்றைய ராசிபலன், ஜோதிட கேள்வி பதில்கள் கணபதி பூஜையுடன் பிரார்த்தனை ஆகிய பிரிவுகள் இருந்தன.
2017 IBC TAMIL TV யில் தினசரி ராசிபலன் வாரபலன் வருடபலன் பெயர்ச்சி பலன்களை வழங்கினார். இந்நிகழ்ச்சி LONDON UK யில் ஒளிபரப்பப்பட்டது.
2017-2020 CAPTAIN TV யில் தினசரி ராசிபலன், மாதபலன், வருடபலன் பெயர்ச்சி பலன்களை வழங்கினார்.
2020 செப்டம்பர் முதல் 2022 ஜூலை வரை JAYA TV யில் தினசரி ராசிபலன், வாரபலன்,மாதபலன்,வருடபலன்,பெயர்ச்சி பலன்கள் நிகழ்ச்சியை அளித்தார்.
(இந்த எல்லா சேனல்களிலும் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காக பீமராஜா ஐயர் அவர்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தவில்லை. ஒருசில தொலைக்காட்சி நிறுவனங்கள் பீமராஜா ஐயருக்கு மாதந்தோறும் சன்மானங்கள் கொடுத்தது.)
தற்போது JOTHI TV யில் 2023 சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 LIVE PROGRAM போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்.
WEBSITE / இணையதளம் : http://www.beemarajaiyer.com
நன்றி
உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்
Leave a Reply