ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மேஷ ராசி – MESHA RASI RAGU KETHU PEYARCHI 2023-2025 Beemaraja Iyer

மேஷ ராசி அன்பர்களே வணக்கம் இதுநாள்வரை ஜென்மத்திலும் களத்திர ஸ்தானத்திலும் இருந்த ராகு கேது 12 6 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

ராகு பலன்கள் ——

சாதக பலன்கள் – ஜென்ம ராகு காலத்தில் ஏற்பட்ட வியாதிகளுக்கு தீர்வுகள் தெரிவரும் மனக்கவலை பயம் குழப்பம் சஞ்சலம் இவற்றிலிருந்து விடுபட முடியும் தீய பழக்கங்கள் சகவாசம் தீயவழியில் பொருளீட்ட வேண்டுமென்ற எண்ணங்கள் இவற்றிலிருந்து மீள முடியும் பயணத்தடை திருமணத்தடை நாற்காரியத்தடை இவையெல்லாம் விலகும் கோவில் பூஜை சடங்குகள் செய்யமுடியாத நிலை மாறும் அவநம்பிக்கை அகன்று தன்னம்பிக்கை தெய்வ நம்பிக்கை ஏற்படும் கட்டுபட்டு இருத்தல் சுதந்திரமின்மை சிறைவாசம் போன்றவற்றிலிருந்து மீண்டு வருவீர்கள்.

12 ஆம் இடத்திற்கு வரக்கூடிய ராகு தங்களது வெளிநாட்டு கல்விக் கனவை நிறைவேற்றி வைப்பார் நம்பிக்கையோடு நல்முயற்சியை தொடங்குங்கள் சிறந்த கல்வியை பெற்று எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள்.வெளிநாட்டு வேலைக்காக முயசித்துக் கொண்டிருக்கக்கூடிய அன்பர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோகம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் விரிவாக்கம் வெளிநாட்டில் புதிய கிளைகள் தொடங்குகுவது போன்ற காரியங்களை திட்டமிடலாம் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவீர்கள் தூக்கமின்மை மனோவியாதி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

பாதக பலன்கள் – அதிக கடன்கள் வாங்கக்கூடாது ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் சக்திக்கு மீறிய காரியங்களை செய்யக்கூடாது பொதுவாக நஷ்டங்கள் ஏற்படாமல் உங்களை தற்காத்துக் கொள்ளவேண்டியது அவசியம் பிரயானங்களில் அஜாக்கிரதை வேண்டாம் விபத்து ஏற்படாவண்ணம் பாதுகாப்பான பயணத்திற்கு முக்கியத்துவம் தாருங்கள் வெளிநாடு விஷயங்களில் தீர ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும் அறுவை சிகிச்சை, சிக்கலான பெரிய வைத்தியங்கள் சம்பந்தமான விஷயங்களில் நிபுணர்கள் அனுபவஸ்தர்கள் அறிவுரையை ஏற்கவேண்டும் . குறிப்பாக பருவ வயதில் இருக்கக்கூடியவர்கள், பொதுவாக நடுத்தரவயதில் இருப்பவர்கள் எதிபாலினத்தவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

.

கேது பலன்கள் ——–

சாதக பலன்கள் – களத்திர ஸ்தானத்தில் ( 7 ஆமிடம் ) இருந்த கேதுவால் காதல் தோல்வி, தவறான பொருந்தாத காதலன்/காதலியை தேர்ந்தெடுத்துவிட்டு பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரும். புரிந்துகொண்டவரை அன்பானவரை பிரிந்துவாடும்/ சேரமுடியாமல் தவிக்கும் நிலைமாறும். திருமணமானவர்கள் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட உபாதைகள் குணமாகும் வழியை, வைத்தியரை தெரிந்து கொள்வீர்கள். ஒருசிலருடைய வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்ட மனோவியாதிகள் கூட குணமாகும். விவாகரத்து சம்பந்தமான பிரச்சனைககள் முடிவுக்குவரும் எலியும் பூனையுமாக இருந்த தம்பதியர் ஒற்றுமையானவர்களாக மாறுவீர்கள்.

கூட்டுத்தொழில் செய்யக்கூடியர்களுக்கு லாபம் முன்னேற்றம் உண்டாகும் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள் பங்குதாரர்கள் பலனைடவார்கள் தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களில் இருந்து மீண்டுவர முடியும் வாழ்க்கைத்துணை சகோதரர்கள் பிள்ளைகள் பணியாளர்கள் முதலாளி உடன் பணியாற்றக்கூடியவர்கள் இவர்களில் யாரால் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலும் அதெல்லாம் சரியாகும்.

பாதக பலன்கள் – வழக்கு விஷயங்களில் ஓரளவிற்கு சுமுகநிலை ஏற்பட்டாலும் ஒப்புக்கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள் சமாதானம் சமரசத்திற்கு வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் வீன்பகை விரோதத்திற்கு இடம் தராதீர். “நோய்க்கு இடம் கொடேல்” ” நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பொன்மொழிகளை நினைவில் கொண்டு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தாருங்கள். நாவடக்கம் ( உணவு மற்றும் பேச்சு ) இருந்தால் நடப்பதெல்லாம் நலமே. கொடுக்கல் வாங்கலிலே மிகுந்த எச்சரிக்கை தேவை. அபாயம் விபரீதம் போன்ற விஷயங்களில் இருந்து விலகி இருங்கள். சுகம் சொகுசு போன்றவற்றிற்காக ஏங்காதீர், கட்டுபாடுகளை மீறாதீர். சுகவாசியை விட உழப்பாளியே ஆரோக்கியம் மற்றும் வலிமையானவனாக இருக்கிறான் என்பதை சிந்தித்து பாருங்கள்.

பரிகாரம் – ஷண்முகர் ( ஆறுமுக ஸ்வாமி ) வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வாருங்கள். இயன்றால் மாதத்தில் ஒரு சஷ்டி விரதம் இருங்கள். இயன்றபோது அறுபடையில் ஒரு படைவீட்டிற்கு சென்று வாருங்கள். சக்திக்கேற்ற தர்மத்தையும், விதிமுறைக்கு உட்பட்ட தானத்தையும் செய்து வாருங்கள் , நல்லதே நடக்கும்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading