வணக்கம் , மங்களகரமான ஸ்ரீ சோபகிருது வருஷம் தக்ஷணாயன புண்யகாலம் வர்ஷருது கிருஷ்ணபக்ஷம் புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி ( 08.10.2023 ) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.36 மணி அளவிலே ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகுபகவான் காலபுருஷ தத்துவத்தின் தலையிலிருந்து காலிற்கு போகிறார், 12 ஆமிடமான விரய, அயன சயன போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மறைவிடத்திற்கு சென்று மறைகிறார். ராகு பெயரும் மீன ராசி குருவுடைய வீடு, இமிமீனத்திலே குரு ஆட்சிபலம் பெறுகிறார், சுக்கிரன் உச்சமடைகிறார், இது மோக்க்ஷ ராசி, ஜல ராசி, உபய ராசி, ரேவதி உத்திரட்டாதி பூரட்டாதி (4 ஆம் பாதம்) இந்த நக்ஷத்திர சாரங்களில் பயணிக்கவிருக்கிறார்.
மீன ராசிக்கு வரும் ராகு பகவான் மகர ராசி, கன்னி ராசி மற்றும் ரிஷப ராசிகளை 3 , 7 , 11 ஆம் பார்வைகளால் பார்க்கவிருக்கிறார்.
கேது பகவான் காலபுருஷ தத்துவத்தின் களத்திர ஸ்தானத்திலிருந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இவரும் மறைவிடத்திற்கு சென்று மறைகிறார். கேது பெயரும் கன்னி ராசி புதனுடைய வீடு, இக்கன்னியிலே புதன் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் அடைகிறார், சுக்கிரன் நீசம் ஆகிறார், இது அர்த்த ராசி, நில ராசி, உபய ராசி, சித்திரை 2,1 ஹஸ்தம் உத்திரம் 4,3,2 நக்ஷத்திர பாத சாரங்களில் பயணிக்கவிருக்கிறார்.
கன்னி ராசிக்கு வரும் கேது பகவான் கடக ராசி, மீன ராசி மற்றும் விருச்சிக ராசிகளை 3 ,7 , 11 ஆம் பார்வைகளால் பார்க்கவிருக்கிறார்.
மேற்கண்ட ஜோதிட நுணுக்கங்களின் அடிப்படையிலும், ராகு கேதுக்களின் ஒரு ராசி சஞ்சார காலமான ஏறக்குறைய அடுத்த ஒன்றரை ஆண்டு காலத்திலே – குரு பகவானின் மேஷ, ரிஷப ராசி சஞ்சாரத்தையும், சனி பகவானின் மகர, கும்ப ராசி சஞ்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு 12 ராசிகளுக்குமான ராகு கேது பெயர்ச்சி பலன்களை துல்லியமாக கணித்து இருககிறோம். இந்த பலன்களை படித்து, கடைபிடித்து பயனடைய வேண்டுகிறோம்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply