ரிஷப ராசி அன்பர்களே வணக்கம் இதுநாள்வரை விரயத்திலும் ருன ரோக சத்ரு ஸ்தானத்திலும் இருந்த ராகு கேது 11 5 ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.
ராகு பலன்கள் ——
சாதக பலன்கள் – இதுநாள் வரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் இனி குறையத் தொடங்கும் அதிக கடன் வட்டி கட்டிக் கொண்டிருப்பவர்கள் பொருள் கிடைக்கப்பெற்று கடனை அடைக்க முடியும் செய்த வேலைகளையே மீண்டும் மீண்டும் செய்தும் வேலை நடந்தபாடில்லை என்றநிலை மாரி காரிய ஜெயம் ஏற்படும் அதிக பிரயாணங்கள் வீண் அலைச்சல்கள் குறையும் நிம்மதியாக தூங்கி பலநாள் ஆனது என்ற ஏக்கம் தீரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரியும் தம்பதியர் விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கப்பெறுவீர் வெளிநாட்டில் இருப்பவர் சொந்த ஊருக்கு திரும்ப எடுக்கும் முயற்சி நிறைவேறும்
விரும்பியதை அடையமுடியும் பலகால கனவு நனவாகும் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வுக்கு முயற்சி செய்ய பலன் கிடைக்கும் சுயதொழில் செய்வோர் லாபம் ஈட்டும் வழி அறிய முடியும் சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு வில்லங்கம் தீர்ந்து சொத்துக்களை அனுபவிக்க முடியும் நல்ல நண்பர்களால் வழிகாட்டப்பட்டு ஏற்றம் காண்பீர்கள் மூத்த சகோதர வழியில் மனக்கசப்பு பகை விரோதம் தீர்ந்து நல்லிணக்கம் உண்டாகும் வாழ்க்கைத்துணையை பிரிந்தவர் இழந்தவர் மறுமணம் சம்பந்தமான முடிவெடுப்பது வரன் கிடைக்கப்பெற்று புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சாத்தியமாகும்
பாதக பலன்கள் – புகை மது இத்யாதிகளை அறவே தவிர்க்க வேண்டியது அவசியம் சிற்றின்ப நாட்டத்தால் பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படலாம், எச்சரிக்கை தேவை திருமணமானவர்கள் குறிப்பாக வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்யும் எண்ணத்தை கனவிலும் வரவிடக்கூடாது ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அடையமுடியும் ஆனால்……..பேராசை கூடவே கூடாது. ‘பாதகம் செய்பவரைக் கண்டால்’ என்ற பாரதியின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும்
கேது பலன்கள் ——–
சாதக பலன்கள் – கொடுக்கல் வாங்கலிலே ஏற்பட்ட குளறுபிடிகள் அகலும் கடனால் ஏற்பட்ட பகை விரோதம் முடிவுக்கு வரும் விவாகரத்து சம்பந்தமான வழக்கு உத்தியோக ரீதியான வழக்கு தொழில் வியாபாராம் நிமித்தமான வழக்குகள் முடிவுக்கு வரும் உடல் உபாதை வியாதிகளுக்கு வைத்தியம் செய்து கொள்ள முடியாத அளவுக்கு நேரமின்மை விடுப்பு கிடைக்காமை பொருள் பற்றாக்குறை அல்லது பயம் இப்படியானவை சரியாகி நோய்களை போக்கிக்கொள்ள முடியும்
புண்ணிய காரியங்களிலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும் குலதெய்வம் தெரியாதவர்கள் முயற்சித்து தெரிந்துகொள்ள முடியும் குலதெய்வம் தெரிந்தும் சென்று வழிபட முடியாதவர்களுக்கு வழி கிடைக்கும் பூர்வீகத்திற்கு செல்லவேண்டும் சொந்த ஊரிலே நிலம் வாங்க வேண்டும் வீடு கட்டவேண்டும் என்ற கனவு நனவாகும் கல்வியிலே நாட்டம் உண்டாகும் பிடித்த துறையிலே படிக்க வாய்ப்பு கிடைக்கும் ஆராய்ச்சி கலவி ஆர்வம் பூர்த்தியாகும் புத்திரப்பேறு சம்பந்தமான தடை தாமதம் விலக பரிகாரங்களை அறிந்து செய்ய முடியும் பிள்ளைகள் சம்பந்தமான பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியவரும் புண்ணிய பலனும் தெய்வ நம்பிக்கையும் துணையாக இருக்கும்
பாதக பலன்கள் – உணர்வு பூர்வமாக முடிவெடுப்பதை தவிர்த்து அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டியது மிக முக்கியம், ஆனால் சில சமயத்தில் உள்ளுணர்விற்கு முக்கியத்துவம் தரவேண்டியிருக்கும் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டே செய்ய வேண்டும் பிறரை மட்டுமே நம்பி எதிலும் இறங்கக்கூடாது பூர்வீக சொத்து சம்பந்தமாக பாகப்பிரிவினை செய்து கொள்வதிலோ, விற்றுவிடலாம் என்பதிலோ மெத்தனப்போக்கு அலட்சியம் அவசரம் கூடாது பிள்ளைகளின் உடல்நலத்திற்கு தரும் முக்கியத்துவம் போல மனநலம் நன்நடத்தை ஒழுக்கத்திற்கு பலமடங்கு முக்கியத்துவம் தரவேண்டும் குழந்தைகள் வளரும் சூழ்நிலை சகவாசம் போன்றவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பரிகாரம் – மகாலக்ஷ்மி வழிபாட்டை வெள்ளிக்கிழமை தோறும் செய்து வாருங்கள். இயன்றால் பௌர்ணமி விரதம் இருங்கள். இயன்றபோது கும்பாபிஷேகங்களுக்கு சென்று வாருங்கள். சக்திக்கேற்ற தர்மத்தையும், விதிமுறைக்கு உட்பட்ட தானத்தையும் செய்து வாருங்கள் , நல்லதே நடக்கும்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை (அமாவாசை, மஹாளய பகக்ஷம் ) பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
உதாரண ஜோதிடர் பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply