வணக்கம். அடுக்குமாடி குடியிருப்பு ( apartment ) கலாச்சாரம் என்பது இக்காலத்திலே தோன்றியது அதனால் இதற்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லப்படவே இல்லை மாடி இல்லாமல் கட்டப்படக்கூடிய வீடுகளுக்குத்தான் வாஸ்து சொல்லப்பட்டு இருக்கிறது அதற்கு தான் வாஸ்து பொருந்தும் என்பதாக இக்காலத்தில் நிறைய பேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி நினைப்பதனால் வாஸ்து மூலமாக கிடைக்க வேண்டிய வளம் நலம் அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது மேலும் வாஸ்து சம்பந்தமான தோஷங்கள் ஏற்பட்டு அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் உண்டாகிறது.
அக்காலத்திலும் கூட பல தளங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டது அதற்கு உதாரணமாக இன்றளவிலும் பழங்கால கோவில்கள் அரண்மனைகள் இருக்கிறது அரண்மனை மட்டுமல்லாமல் பல செல்வந்தர்களும் வளமானவர்களும் பல தளங்களைக்கொண்ட பெரிய வீடுகளிலே வாழ்ந்திருக்கிறார்கள் கிராமப்புறங்களிலும் கூட பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பெரிய வீடுகளில் வசித்திருக்கிறார்கள் வீட்டிற்கு உள்ளே மாடிப்படிகள் அமைந்து மேல் தளத்திலே படுக்கை அறைகள் இருக்கும் கீழ்தளத்திலே வரவேற்பறை சமையலறை இருக்கும் அப்படியான வீடுகள் இன்றளவிலும் இருக்கிறது அதனால் மாடிப்படி போட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் வருவதற்கு ஒரே இடத்திலே நிறைய குடியிருப்புகள் இருக்கக்கூடிய அப்பார்ட்மெண்டுக்கு வாஸ்து இருக்கிறது அதை நாம் பார்த்து பயன்படுத்தி பலனை பெற வேண்டும்.
சரி. அந்த காலத்திலும் கூட மாடி படிக்கட்டுகள் இருந்தது மேல் தளங்கள் கட்டப்பட்டது அதற்கும் கூட வாஸ்து சாஸ்திரத்தினுடைய விதிமுறைகள் சொல்லப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது என்பதை எடுத்துக் கொண்டாலும், இன்றைய காலத்திலே அடுக்குமாடி குடியிருப்புகள் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான வீடுகளை ஒரே இடத்தில் கொண்டிருக்கக் கூடிய நிலை வந்து விட்டது. அதனால், அபார்ட்மெண்டிற்கும் கூட வாஸ்து இருக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் அதை கடைபிடிப்பதற்கு, வாஸ்துபடி கட்டுவதற்கு சாத்தியமே இல்லை என்று பெரும்பாலானவர்கள் இப்போது சொல்கிறார்கள். நினைக்கிறார்கள். அதன்படியே குடியிருப்புகளை கட்டுகிறார்கள்.
இப்போதும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது நாம் சில சதுர அடிகளை (square feet ) கணக்கு பார்க்காமல் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய பணத்தை விட்டுக் கொடுக்க முன்வரும்போது 100% முழுக்க முழுக்க வாஸ்துபடி கட்ட முடியாத போனாலும் கூட, பெரிய தவறுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தோஷங்கள் இல்லாமல் அப்பார்ட்மெண்ட் கட்ட முடியும். ஒவ்வொரு சதுர அடியையும் பணமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தால் இந்த காலத்திலும் கூட அப்பார்ட்மெண்ட்டை வாஸ்துபடி கட்டுவது சாத்தியமே. அரிதாக ஒரு சில இடங்களிலே இதுபோல இப்போதும் கூட பிளாட் சிஸ்டம் (flats ) அபார்ட்மெண்டுகள் வாஸ்துபடி கட்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறது
அபார்ட்மெண்டிற்கான வாஸ்து விதிவிலக்குகள் ஒரு விதியை அப்படியே கடைபிடிக்க முடியாத பட்சத்திலே, பரவாயில்லை இதற்கு இது மாற்று இன்னொரு வாய்ப்பு (option ) என்பதாக சொல்லி இருப்பார்கள் அதுபோல சமையலறை படுக்கையறை பூஜையறை வரவேற்பறை குளியலறை கழிவறை தலைவாசல் படிக்கட்டுகள் இதற்கு பிரதானமாக இன்னின்ன இடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கக் கூடியதை கடைபிடிக்க முடியாத போது, அதற்காக சொல்லப்படக்கூடிய சொல்லப்பட்டிருக்கக்கூடிய அடுத்த இடங்கள் இருந்தால் பரவாயில்லை. உதாரணமாக தென்கிழக்கிலே சமையலறை இல்லையென்றால் வடமேற்கிலே இருந்தால் பரவாயில்லை. ஆனால் தென்மேற்கில் சமையலறை வரவே கூடாது. ஒரு அறையோ நுழைவாயிலோ படிக்கட்டோ (lift டோ) வரவேண்டிய இடத்திலே வராது போனாலும் கூட பரவாயில்லை, வரக்கூடாத இடத்திலே வந்து விடக்கூடாது. வாஸ்து விதிகளையும் குறிப்பாக இக்காலத்திற்கு தேவையான விதி விலக்குகளையும் (2 nd option ) அடுத்த சில பதிவுகளிலே பார்ப்போம். இப்பதிவில் விதிமீறல்களை பார்த்துவிடுவோம்.
3 வகையான தவறுகள் 1. வாஸ்து சாஸ்திரம் தெரியாமல் செய்யும் தவறு 2. நம்பிக்கை இல்லை நான் பார்ப்பதில்லை என்பவர் செய்யும் தவறு. 3.எனக்கு நம்பிக்கை இருக்கிறது நான் வாஸ்து பார்க்கிறேன் ஆனால் கட்டும் அனைத்து வீடுகளையும் வாஸ்துபடி கட்டமுடியாது என்பது.
partiality மாவுக்கேற்ற பணியாரம் அதாவது, சிங்கிள் பெட்ரூம் டபுள் பெட்ரூம் ட்ரிபிள் பெட்ரூம் ( 3 bhk ) அதற்கு மேற்பட்டு நான்கு படுக்கை அறை ஐந்து படுக்கை அறை இப்படியாகவெல்லாம் இருக்கும்படியாக வீடுகளை அமைக்கிறார்கள். மேலே போகப் போக பெரிய வீடாக அமைகிறது. ஒரே தளத்திலும் கூட ஒரு பக்கத்திலே பெரிய வீடும் மற்றொரு பக்கத்திலே சிறிய வீடும் அமைக்கிறார்கள். இப்படி செய்யும் போது அதிக படுக்கை அறைகளை கொண்ட அதிக சதுர அடிகளைக் கொண்டு விலை அதிகமாய் உள்ள வீடுகளை சரியாக வாஸ்து படி பார்த்து பார்த்து அமைக்கிறார்கள். சதுர அடி குறைய குறைய விலை குறைய குறைய, இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு கட்டித் தருகிறார்கள்.
குறைவான சதுர அடிகளைக் கொண்ட ஒரு படுக்கையறை வீடாக இருந்தாலும் முடிந்தவரை அதை வாஸ்துபடி (100 % இல்லாவிட்டாலும்) பிரதானமான ( major mistakes ) பெரிய தோஷங்களை தரக்கூடிய அமைப்பு இல்லாதவராவது கட்டித்தர முயல்வதில்லை. இது பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய பிரதானமான தவறு.
illogical overhead tank ல் ஓட்டை ? ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வீட்டையும் சரியாக கட்டி விடுவது எல்லோருக்கும் சேர்ந்து பொதுவாக வரக்கூடிய அமைப்புகளிலே தவறு செய்து விடுவது. அதாவது, மேல்நிலை நீர் தேக்க தொட்டி வரக்கூடிய இடம் படிக்கட்டுகள் வரக்கூடிய இடம் லிஃப்ட் வரக்கூடிய இடம் பிரதானமான நுழைவு வாயில் வரக்கூடிய இடம் வாகன நிறுத்துமிடங்கள் ( parking ) வரக்கூடிய இடம் எல்லோருக்குமான ( park ) அல்லது பொதுவான காலி இடம் இப்படியானவற்றை சரியாக அமைக்காமல் நிறைய பேர் தவறு செய்து விடுகிறார்கள். வீடு மட்டும் வாஸ்துபடி இருந்தால் போதுமானது பொதுவான தவறுகள் தனிப்பட்ட ஒரு வீட்டையோ குடும்பத்தையோ பாதிக்கப் போவதில்லை எல்லோருக்கும் சேர்ந்த பாதிப்பு . அது (share / divide ) ஆகிவிடும், அதனால் அதனுடைய வீரியம் குறைந்துவிடும் என்பதாக நினைத்து செய்கிறார்கள். இதையும் தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டையும் ( flat ) தாண்டி பொதுவாக எல்லோருக்கும் சேர்ந்து வரக்கூடியவைகளையும், எங்கு இருக்க வேண்டுமோ அதன்படியேவோ அல்லது பரவாயில்லை என்ற இடத்திலேவோ அமைக்கவேண்டும்.
building strong basement weak ? அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்காக மனை தேர்ந்தெடுக்கும் போது, இந்த இடத்திலே இப்படிப்பட்ட ஒரு மனையிலேயே இப்படிப்பட்ட ஒரு பகுதியிலே கட்டாயம் வீடுகள் கட்டி வசிக்க கூடாது வசிப்பதற்கு தகுதியற்ற இடங்கள் இவை. தோஷமான பூமியென்று வாஸ்து சாஸ்திரம் அனுமதிக்காத இடங்களில், அடுக்குமாடிகுடியிருப்பை கட்டுகிறார்கள். உதாரணமாக சுடுகாடு இடுகாடு இதற்கு பக்கத்திலே மிக அருகாமையிலே இதை பார்த்தவாறு இருக்கக்கூடிய மனையிலே வசிக்க கூடாது. ( மனை வாங்க போறீங்களா? அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை ) இப்படிப்பட்ட மனையை தேர்ந்தெடுத்து விட்டு இங்கு என்ன ஒரே ஒரு வீடாக இருக்கப் போகிறது 100 வீடுகள் ஆயிரம் வீடுகள் கட்டுகிறோம் எல்லோரும் சேர்ந்து இருக்கப் போகிறார்கள் அதனால் இது தோஷத்தை தராது பாதிப்பை தராது அப்படியே பாதிப்பு ஏற்பட்டாலும் கூட எல்லோருக்குமாக அது பகிர்ந்து குறைந்த சதவீதமாக மாறி குறைந்த பாதிப்பையே உண்டாக்கும். இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு அல்லது சொல்லிக் கொண்டு சமாளித்துக் கொண்டு இது போன்ற இடங்களிலே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுகிறார்கள். இது பஞ்சமாபாதகம் போன்றது.
அடுக்குமாடி குடியிருப்பு சம்பந்தமான வாஸ்து விதிமீறல்கள் வாஸ்து தோஷங்கள் குற்றங்களில் பிரதானமான சில விஷயங்களை மேலே பார்த்தோம், அடுக்குமாடி குடியிருப்பை கட்டக் கூடியவர்கள் இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கட்டி முடித்து விட்டீர்கள் இப்போது உங்களுக்கு அது தெரிய வருகிறது என்றாலும் சரி செய்ய முடியும் என்பனவற்றையாவது சரி செய்யலாம், சிலவற்றை சரி செய்ய முடியாது ஆனால் முடிந்தவற்றை சரி செய்து கொடுக்கலாம்.
தனிப்பட்ட ஒருநபர் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்கள் குலதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு இப்படியானவற்றை கடைபிடிக்கவில்லை அல்லது இது சம்பந்தமாக தவறு செய்கிறார் என்றால் அது அவருக்கு பாவத்தை ஏற்படுத்துகிறது அதாவது ஒருவர் செய்த தவறு அவரையே பாதிக்கிறது அதற்கும் பரிகாரங்கள் இருக்கிறது பிராயச்சித்தங்கள் இருக்கிறது, ஆனால் ஒரு நபர் செய்யக்கூடிய தவறு மற்றவரை பாதிக்கிறது என்று சொல்லும்போது அது மிகப்பெரிய பாவம் தோஷம். அதற்கு பரிகாரங்கள் பிராயச்சித்தங்கள் இல்லை. தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். இதிலும் தெரியாமல் செய்த பாவங்கள் தெரிந்தே செய்தபாவங்கள் என்ற கணக்கு இருக்கிறது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஒருவர் கட்டித் தருகிறார் அதை தொழிலாக கொண்டிருக்கிறார் என்றால் அதுவும் கூட இந்த உலகத்திற்கு அவர் செய்யக்கூடிய உதவிதான் எல்லோருக்கும் வீடு தேவை அத்தியாவசிய தேவைகளிலே இருப்பிடம் ஒன்றாக இருக்கிறது அதை ஏற்படுத்தி கொடுக்கக் கூடியவராக ஒரு builder இருக்கிறார். முதலில் அவர் தன்னுடைய கைப்பணத்தை போட்டு ஒரு இடத்தை வாங்கி எவ்வளவோ இயற்கை சீற்றங்கள் பாதிப்புகள் இவற்றை எதிர்கொண்டு செயற்கையாக ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை கடந்து கடன்பட்டு வட்டி கட்டி apartment கட்டி பிறகு அதை விற்று பலனை அடைகிறார், அதுவும் ஒரு தர்மமான தொழில் தான். அப்படி செய்வதும் கூட ஒரு புண்ணியம். ஒருவருக்கு ஒரு வீட்டை கட்டி கொடுக்கிறார் என்று சொல்லும்போது ஒரு திருமணம் செய்து வைத்த உணவு சமைத்து பசியை தீர்த்த கல்வியை போதித்து அறிவுக் கண்ணை திறந்த செயல்களைப் போன்று இதுவும் கட்டாயம் பலனை தரும். அப்படிப்பட்ட ஒரு புண்ணியம் தரக்கூடிய துறையிலே தொழிலிலே இருந்து விதிகளின்படி தரமான வீடுகளை கட்டிக்கொடுங்கள். நீங்கள் கட்டிக் கொடுக்கக்கூடிய குடியிருப்புகளிலே வசிக்க கூடியவர்கள் வளமாக நலமாக இருந்தால் அதிலே ராமருக்கு அணில் போன்ற பங்கு உங்களுக்கு இருக்கிறது நீங்கள் புண்ணியத்தை பலனை வாழ்த்துக்களை பெறலாம். சந்தோஷப்படலாம் பெயர் எடுக்கலாம் புகழ் பெறலாம் லாபமும் பெறலாம் லட்சுமி கடாட்சமும் பெறலாம் நன்றாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கட்டக்கூடிய அந்த குடியிருப்பிற்காக மனையை தேர்ந்தெடுக்கும் போதோ கட்டும்போதோ விற்கும்போதோ தெரியாமல் தவறு செய்தாலும் கூட பரவாயில்லை ஆனால் தெரிந்து தவறு செய்யாதீர்கள். அப்படி செய்தால் பிறர் கஷ்டப்படுவதற்கு நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் அதற்கு பாப விமோசனமோ பரிகாரங்களோ பிராயச்சித்தமோ இல்லை. எவ்வளவோ பேர் கஷ்டப்படுவதற்கு நீங்கள் தெரிந்து காரணமாக இருந்து விட்டால் அது உங்களை பாதித்தாலும் கூட பரவாயில்லை, உங்களுடைய சந்ததிக்கு பாதிப்பை உண்டாக்கும். ( “மாதா பிதா செய்தது மக்களுக்கு” “தாத்தா சொத்து பேரனுக்கு” ) அப்படி நேரக்கூடாது, நீங்கள் பாடுபடுவது உழைப்பது போராடுவது கஷ்டப்படுவது உங்களுடைய சந்ததிக்காக தான். அதனால் விதிகளுக்கு தரத்திற்கு முக்கியத்துவமதாருங்கள். தெரியாமல் தவறு செய்யும் போது கட்டாயம் அதனுடைய பாதிப்பு பெரிய அளவுக்கு இருக்காது பயப்பட வேண்டாம் கவலைப்பட வேண்டாம் தெரிந்தே தவறு செய்யாதீர்கள்.
இப்பதிவின் கடைசியான ஆனால் முக்கியமான விஷயம் வாஸ்து ஜோதிடம் கடவுள் இவற்றிலே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அதை வீட்டிலே தனிப்பட்ட சொந்த விஷயங்களிலே செயல்படுத்துங்கள், ஆனால் பொதுவென்று வரும்போது, நீங்கள் கட்டித்தரக்கூடிய வீட்டை வாங்குபவர்கள் வசிப்பவர்களுக்கு நம்பிக்கை இருக்கும். அதற்கு குந்தகம் விளைவிக்காதீர்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாஸ்து விதிமுறைகள் விதிவிலக்குகள் விதிமீறல்கள் இப்படியானவற்றிலே ஒரு சில தகவலை இந்த பதிவிலே பார்த்தோம் தொடர்ச்சியாக வாஸ்து சாஸ்திரப்படி வீடுகள் கடைகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் கம்பெனிகள் இப்படியானவற்றுக்கான விதிகள் விதிவிலக்குகள் இவற்றை தொடர்ச்சியாக நாம் இந்த வலைத்தளத்திலே பதிவிடுவோம். அதை எல்லாம் நீங்கள் படித்து கடைப்பிடித்து நலம்பெற வேண்டும்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
சென்னையில் வசிக்கக் கூடியவர்கள்
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply