திருமண பொருத்தத்தில் தசா புக்தி பொருத்தம், ஏக திசை பொருத்தம், பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே திசை நடக்கலாமா? நடக்கக் கூடாதா? விதிகள்/விதிவிலக்குகள் என்னென்ன?

saraswati puja

திருமணத்திற்கு பொருத்தம் பார்த்து தான் ஆக வேண்டுமா? பொருத்தம் இல்லாத வரன்களுக்கு மணமுடித்து வைக்கும் போது ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன? பொருத்தம் பார்க்கும் போது கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்னென்ன? எத்தனை விதமான பொருத்தங்களை பார்க்க வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும்? இப்படியான நிறைய தகவல்களை இதற்கு முன்னே நிறைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அதிலே தசா புத்தி பொருத்தம் பற்றியும் சொல்லி இருக்கிறோம். இன்றைக்கு ஏக தசை சம்பந்தமாக கூடுதல் தகவல்களை பார்க்கலாம் வாருங்கள்.

பொருத்தம் பார்க்கக்கூடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே திசை நடந்தால் அது ஏகதிசை எனப்படும் இப்படி இருந்தால் பொருத்தம் இல்லை இது தவிர்க்கப்பட வேண்டியது இவர்களுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது, இது பொதுவான விதி. விதிகளுக்கு விதிவிலக்குகள் தரப்பட்டிருக்கும் அல்லது அந்த விதிகளிலேயே கூடுதல் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். மேலோட்டமாக பார்க்கும் போது நமக்கு தெரியக்கூடிய விஷயங்களை விட ஆராய்ச்சி செய்யும் போது அனுபவப் படும்போது நிறைய நூல்களை வாசிக்கும் போது கூடுதல் விஷயங்கள் தெரியவரும். அவ்வகையில் பொருத்தம் பார்க்கக்கூடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே திசை நடந்தாலும் கூட சில சமயத்திலே அது பெரிய பாதிப்பை தருவது கிடையாது. ஏனைய திருமண பொருத்த விதிகள் அம்சங்கள் அனைத்தும் கூடி வரும் போது ஏகதசை என்ற காரணத்திற்காக நாம் அந்த ஜாதகத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணம் 1 மிக குறைவான ஆண்டுகள் இருக்கக்கூடிய திசை சூரிய திசை இதனுடைய காலம் 6 ஆண்டுகள் மிகப்பெரிய திசை சுக்கிரமஹா திசை இது 20 ஆண்டுகள் இருக்கும். இதிலே பொருத்தம் பார்க்கக்கூடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் சுக்கிர திசை நடக்கிறது என்று எடுத்துக் கொள்வோம் சுக்கிர திசை இருபது ஆண்டுகள் அல்லவா? ஒருவருக்கு சுக்கிர திசை அப்போதுதான் ஆரம்பிக்கிறது ஒருவருக்கு சுக்கிர திசை அப்போது முடிய போகிறது, ஒருவருக்கு சுய புக்தி மற்றொருவருக்கு சுக்கிர திசையிலே புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது என்றால் ஒரே திசை என்ற காரணத்திற்காக இந்த ஜாதகத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனைய விதிகள் பொருந்தி வந்தால் அந்த வரன் வதுவிற்கு திருமணம் செய்யலாம்.

உதாரணம் 2 பொருத்தம் பார்க்கும் பெண் ஆணிற்கு குரு தசை நடந்து கொண்டிருக்கிறது என்றால் குரு திசை 16 ஆண்டுகள், ஒருவருக்கு குரு திசை அப்போதுதான் ஆரம்பம் ஒருவருக்கு 8 ஆண்டுகள் முடிந்து விட்டது அதாவது குரு தசைனுடைய ஒரு பாதி முடிந்துவிட்டது இரண்டாவது பாதியில் இருக்கிறார் என்று சொல்லும்போது ஏனைய விதிகள் கூடி வந்து இரு வீட்டாருக்கும் ஒத்துப் போகிறது என்றால் மணமுடித்து வைக்கலாம்.

ஏக திசை நடக்கக்கூடிய சமயத்திலே கூட திருமணம் செய்யலாம் தவறு இல்லை என்பதற்காக மேலே ஒன்றிரண்டு உதாரணங்கள் சொல்லப்பட்டது ஆனால் இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் தசா புத்தி பொருத்தத்தை தாண்டி கிரகப் பொருத்தம் தோஷப் பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ராசிப் பொருத்தம் லக்ன பொருத்தம் இப்படியானவை எல்லாம் இருக்கிறது இவை எல்லாம் இருந்து அந்த பெண்ணுக்கும் அந்த மணமகனுக்கும் பிடித்திருந்து இரு வீட்டாருக்கும் அனைத்தும் சரியாக வரும் போது திருமணம் செய்யலாம். இதிலே சுக்கிரனோ குருவோ (இருவருக்கும் ஒரே சமயத்தில் நடத்துகின்ற தசைக்குண்டான அதிபதி கிரகம்) அந்த இரண்டு ஜாதகர்களுக்கும் மாரகாதிபதியாக அஷ்டமாதிபதியாக பாதகாதிபதியாக ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதியாக விரையாதிபதியாக இல்லாமல் இருப்பது விசேஷம் இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்ப்பதிலே ஏக திசை சம்பந்தமான ஒரு சில தகவல்களை இப்பதிவிலே பார்த்தோம் மேலும் திருமண பொருத்தத்தில் கடைப்பிடித்தாக வேண்டிய விதிமுறைகள் அதற்குண்டான விதி விலக்குகள் இப்படியானவை நிறைய இருக்கிறது இவற்றை அடுத்தடுத்த பதிவிலே அறிந்து கொள்வோம். ஜாதகம் பார்க்கவோ திருமண பொருத்தம் பார்க்கவோ நேரிலோ அலைபேசி வாயிலாகவோ என்னை நீங்கள் அணுகலாம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading