திருமணத்தடை விலக வம்சம் விருத்தியாக வாரிசுயோகம் கிடைக்க தரும் தீராத நோய் தீர தொடர்ச்சியான கண்டங்களை முடிய பித்ருக்கள் ஆசிபெற என்ன செய்யவேண்டும்?

green tree

பித்ரு தோஷங்கள் ஏற்பட்டவர்களுக்கு, வம்சம் விருத்தி ஆவதிலே தடை உண்டாகும் வம்சம் விருத்தி ஆக வேண்டுமென்றால் திருமணம் நடக்க வேண்டும் அதனால் திருமண தடை முதலிலே உண்டாகும் நிறைய பரிகாரம் செய்து திருமணம் ஆகிவிட்டாலும் கூட புத்திரப்பேறு கிடைப்பதிலே தடை தாமதங்கள் உண்டாகும் புத்திரர்கள் கிடைத்துவிட்டாலும் கூட அவர்களுக்கு மனரீதியாக உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுவது அல்லது அவர்கள் வளர்ந்து குடும்பத்தினுடைய செல்வத்தை கௌரவத்தை அழிப்பது பிள்ளைகளால் அந்த குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுவது அதுபோல குடும்ப நபர்களுக்கு மாற்றி மாற்றி நோய் நொடிகள் ஏற்படுவது விபத்து கண்டங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பது இப்படியானவை எல்லாம் உண்டாகும்.

பித்ரு தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது? இதற்கான தீர்வுகள் பரிகாரங்கள் எவையெவை? இறந்தவர் படங்களை வீட்டிலே வைத்துக் கொள்ளலாமா? மஹாளய அமாவாசை கேள்வி பதில் இப்படியான தகவல்களை இந்த வலைதளத்திலே எழுதி இருக்கிறோம் நம்முடைய youtube சேனலிலும் கூட நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறோம். இன்றைக்கு பித்ரு தோஷத்தை போக்கும் அற்புதமான ஒரு நாளைப் பற்றிய தகவல்களை அந்நாளின் விரத வழிபாட்டு முறையை சொல்லப் போகிறோம்.

கார்த்திகை மாதத்தின் அமாவாசை நாள் மிகச்சிறந்த விசேஷமான அமாவாசை நாளாக அமைகின்றது பித்ரு தோஷங்களுக்கு உண்டான அற்புதமான தீர்வை தரக்கூடிய அரிய நாளாக இருக்கின்றது பித்ரு தோஷங்களால் மிக முக்கியமாக திருமணம் புத்திரப்பேறு தடைப்படும் என்பதை பார்த்தோம் கால புருஷ தத்துவத்தினுடைய அமைப்பிலே திருமணத்திற்கு இரண்டாம் இடம் குடும்பஸ்தானம் என்றும் ஏழாம் இடம் களத்திர ஸ்தானம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது இந்த வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரன் இந்த கார்த்திகை மாதத்திலே கால புருஷ தத்துவத்தின் எட்டாம் இடத்தில் இருப்பார். சூரியனோடு சேர்ந்திருப்பார் அடுத்து கால புருஷ தத்துவத்தினுடைய புத்திர ஸ்தான அதிபதியாக சிம்ம ராசிக்கு உண்டான சூரியன் இருக்கின்றார் இவர் இந்த கார்த்திகை மாதம் முழுக்கவே கால புருஷ தத்துவத்தின் அஷ்டமஸ்தானமான விருச்சிக ராசியில் இருப்பார் புத்திர ஸ்தான அதிபதி குடும்ப களத்திர ஸ்தான அதிபதி இவர்கள் கால புருஷ தத்துவத்தின் அஷ்டமஸ்தானத்திலே சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களோடு சேர்ந்து சந்திரன் வந்து சந்திக்கின்ற நாளாக இந்த கார்த்திகை மாதத்தில் அமாவாசை நாள் இருக்கிறது அந்த நாளிலேயே சந்திரன் குரு உடைய நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார் இந்த அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற சூரியன் சுக்கிரன், சந்திரன் மேலும் புதன் இவர்களை குரு பார்க்கிறார் புதனோடு இந்த ஸ்தான அதிபதியான கால புருஷ தத்துவத்தின் தலையான செவ்வாய் பரிவர்த்தனை செய்திருக்கிறார். இந்த கிரகங்கள் உடைய இணைவின்படி இந்த கார்த்திகை மாத அமாவாசை வரக்கூடிய நாள் பித்ரு தோஷங்களுக்கான தீர்வை தருகின்ற அமைப்பாக இருக்கிறது.

இவற்றைத் தாண்டி கால புருஷ தத்துவத்தினுடைய கர்மஸ்தானமான 10ஆம் இடத்தில் சனி இருக்கின்றார் அதனால் இந்த அமாவாசை பித்ரு தோஷங்கள் அனைத்தையும் போக்கக்கூடிய அற்புதமான நாள் இந்த கார்த்திகை மாத அமாவாசை நாளை பயன்படுத்திக்கொண்டு எப்படிப்பட்ட பித்ரு தோஷங்கள் குடும்பத்தில் இருந்தாலும் போக்கிக் கொள்ளலாம். மண வயதில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு வரன் கிடைத்து திருமணம் ஆக, மணமாகி சந்தான பாக்கியம் வேண்டுபவர்கள் வம்சம் தழைக்க வாரிசு உற்பத்தியாக வீட்டிலே மழலைச் செல்வம் கிடைக்க இந்நாளிலே தான தர்மம் செய்து பிரார்த்திக்கலாம் கைமீது பலன் கிடைக்கும்.

இந்த அமாவாசை கார்த்திகை 7ஆம் தேதி 23.11 புதன்கிழமை வருகிறது. இந்நாளின் விரத வழிபாட்டு முறையை இப்போது பார்ப்போம். பொதுவாக அமாவாசை என்று சொன்னால் தந்தை இல்லாதவர்கள் தந்தை தாய் இல்லாதவர்கள் அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும் தலைக்கு பச்சை தண்ணீரிலே நீராட வேண்டும் வயோதிகர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் தாமதமாக எழுந்தாலும் பரவாயில்லை பச்சை தண்ணீரிலே குளிக்க முடியாத போது வெந்நீரிலே குளிக்கலாம் தலைக்கு குளிக்க முடியாது போது உடம்பிற்கு குளித்தாலும் பரவாயில்லை.

ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் நதிகளின் பெயரைச் சொல்லி கங்கா யமுனா கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி இப்படியாக நதிகளின் பெயரை உச்சரித்து தண்ணீரை புரோக்ஷணம் செய்து கொள்வது தலையிலே தெளித்துக்கொண்டாலும் போதுமானது அதுவும் முடியாத போது கொஞ்சம் திருநீறு எடுத்து தலையிலே போட்டுக் கொண்டாலும் கூட போதுமானது ஸ்நானம் செய்த ஒரு பலனானது கிடைத்துவிடும்.

அடுத்து இறந்து போன பெற்றோருக்காக தர்ப்பணம் விட வேண்டும் எள்ளும் தண்ணீரும் விட வேண்டும் என்பார்களே இதை செய்ய வேண்டும் இதை ஒரு பிராமணரை வைத்து வைத்து செய்யலாம் வீட்டு புரோகிதரோ அருகில் இருக்கக்கூடிய ஆலய அர்ச்சகரோ யாராவது செய்து வைக்கலாம் நீங்களாகவே கூட செய்து கொள்ளலாம் இல்லத்தில் செய்யலாம் அல்லது புண்ணிய தீர்த்தக் கரைகளிலே செய்யலாம். சமைத்து சாப்பிடுவதற்கு தேவையான பச்சரிசி பயறுகள் பருப்புகள் தானியங்கள் மளிகை சாமான்கள் காய்கறிகள் கீரை பால் தயிர் நெய் வாழை இலை இப்படியானவற்றை வைத்து இயன்றால் ஒரு வஸ்திரத்தையும் வேட்டி துண்டு வைத்து சக்திக்கேற்ற தட்சணையை வைத்து கொடுக்க வேண்டும்.

பிறகு வீட்டிலேயே மடியாக சமைத்து காக்கைக்கு அன்னம் வைக்க வேண்டும் பசுவிற்கு கீரை பழங்கள் தீவனங்களை தர வேண்டும் இதையெல்லாம் செய்து முடித்து அதன் பிறகு மதிய உணவை அருந்த வேண்டும் காலை நேரத்தில் சிற்றுண்டி சாப்பிடக் கூடாது இயன்றவர்கள் இதை கடைபிடிக்கலாம் பிறகு மாலையிலும் ஏதும் சாப்பிடக்கூடாது பழ ரசங்களும் அல்லது தேநீர் காபி போன்றவற்றையும் கூட வெளியில் அருந்தலாகாது. இரவு பால்பழம் சாப்பிடுவது அல்லது அரிசி இல்லாத பதார்த்தத்தில் சிற்றுண்டி செய்து சாப்பிடலாம்.

இந்நாளிலே ஏழை எளியவர்களுக்கு இல்லாதவர்களுக்கு வரிய நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு என்ன முடியுமோ அதை தர்மம் செய்யலாம் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்களால் இயன்ற தானங்களை செய்யலாம் முதலிலே முன்னோர் வழிபாடு அதன் பிறகு ஆலய தரிசனம் இவற்றையும் இந்நாளில் செய்ய வேண்டும். கார்த்திகை மாதம் என்று சொல்லும்போது சிவபெருமானுக்கு உகந்த ஒரு மாதம் அருகில் உள்ள சிவாலயம் சென்று வரலாம்.

அமாவாசை அன்று கோவிலுக்கு போகலாமா? முன்னோர் வழிபாடு என்று சொல்லும்போது அந்த இடத்திலே பெருமாளுக்கு மகாவிஷ்ணுவிற்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. தன்னுடைய பக்தனுக்காக முன்னோர் வழிபாட்டை திதி கொடுக்கக் கூடியதை கோவில் நகரமான கும்பகோணம் சார்ங்கபாணி கோவிலிலே அந்த கோவிலின் பெருமாளே செய்கிறார் . இன்றைக்கு முன்னோர் வழிபாட்டை செய்து முடித்து பெருமாளையும் சென்று தரிசித்து விட்டு வரலாம். இந்த கார்த்திகை மாதத்தில் விளக்கு எறிய பூஜைகள் நடக்க இயன்ற கைங்கரியங்களை ஆலயத்திற்கு செய்யலாம்.

கார்த்திகை மாத அமாவாசை மகத்துவங்கள் இந்நாளின் விரத வழிபாட்டு முறை போகக் கூடிய தோஷங்கள் கிடைக்கக்கூடிய யோக பலன்கள் இப்படியான தகவல்களை மேலே பார்த்தோம் நம்முடைய இந்த வலைதளத்தில் எல்லோருக்கும் பயன்படக்கூடிய நிறைய தகவல்களை தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கின்றோம். எல்லாவற்றையும் நீங்கள் படித்து கடைப்பிடித்து நற்பலனை பெற வேண்டும். சென்னையில் வசிக்கக் கூடியவர்கள் தங்களுடைய வீட்டிலே இதுபோல இறந்து போன பெற்றோருக்கு திதி கொடுக்க வேண்டும் என்றாலோ கணபதி ஹோமம் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் என்றாலோ அணுகலாம் திருப்தியாக சிறந்த முறையில் செய்து தரப்படும்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

One response to “திருமணத்தடை விலக வம்சம் விருத்தியாக வாரிசுயோகம் கிடைக்க தரும் தீராத நோய் தீர தொடர்ச்சியான கண்டங்களை முடிய பித்ருக்கள் ஆசிபெற என்ன செய்யவேண்டும்?”

  1. 7.11.2022 புதன் கார்த்திகை அமாவாசை

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading