வணக்கம் money jewels wealth என்ற இந்த பகுதியிலே தங்கம் வெள்ளி வைரம் வாங்குவதற்கு உகந்த நாட்கள் எவை? எந்த நாளில் வாங்கவே கூடாது? கையிலே காசு தங்கவில்லை, செல்வம் சேரவில்லை என்பவர்களுக்குண்டான தீர்வு என்ன? லட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி? கோடீஸ்வரனாக குபேரனாக சூட்சுமங்கள் ரகசியங்கள் இப்படியான நிறைய தகவல்களை ஏற்கனவே எழுதி இருக்கிறோம். நம்முடைய youtube சேனலிலும் கூட லட்சுமி கடாட்சம் சம்பந்தமாக பயனுள்ள நிறைய குறிப்புகளை சொல்லி இருக்கிறோம். இன்றைய பதிவிலே தரித்திரம் இல்லாமல் எப்போதும் குடும்பத்திலே லட்சுமி கடாட்சம் இருக்க, குறிப்பாக நம்முடைய தங்கத்தை அடகு வைப்பதோ விற்பதோ இப்படியான நிலை ஏற்படாமல் எப்போதும் அந்த தங்கம் நிலையாக நம்மிடத்தில் தங்க, வைரம் வாங்குவது கனவாக இருக்கக்கூடியவர்கள், மிகப்பெரிய செல்வ சீமான்கள் கோடீஸ்வரர்களுக்கு தான் வைரம் வாங்குவது சாத்தியம் நமக்கெல்லாம் இந்த ஜென்மத்திலே வைரம் அணியை கொடுப்பினை இல்லை என்பவர்களும் கூட வைரம் வாங்க, வெள்ளி பாத்திரங்கள் வெள்ளி ஆபரணங்கள் நிறைய சேர ஒரு சுலபமான எளிய வழிமுறையை பார்ப்போம்.
ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறை தனியாக இருக்கும் அல்லது வரவேற்பு அறையிலோ அடுப்படியிலோ இருக்கும் அனைவரது வீட்டு பூஜை அறையிலும் ஸ்வாமி படங்கள் கட்டாயம் இருக்கும் சிலரது வீட்டில் விக்கிரகங்கள் இருக்கும் இவற்றோடு சேர்ந்து நம்முடைய வீட்டிலே இருக்க வேண்டிய ஒரு தெய்வீகமான புனிதமான லட்சுமி கடாட்சத்தை தரக்கூடிய மிக முக்கியமான ஒரு பொருள் இருக்கிறது. அது சங்கு. அந்த சங்கு இருக்கக்கூடிய இடத்திலே லட்சுமி வாசம் செய்வாள் அதனால் அந்த வீட்டிலே எப்போதும் லட்சுமி கடாட்சம் இருக்கும் இதுவரை வீட்டிலே சங்கு இல்லாதவர்கள் இந்த பதிவை பார்த்து படித்து சங்கை வீட்டிலே வைத்து முறைப்படி பூஜிக்க இதுநாள் வரை சேராத செல்வம் சேரும், தங்காத தங்கம் தங்கும், வாங்க முடியாத வைரத்தை வாங்க முடியும், சேராத வெள்ளி சேரும்.
லட்சுமி கடாட்சம் பெறுவதற்கான சுலபமான வழி நம்முடைய வீட்டிலே சங்கை வைத்து பூஜிக்க வேண்டும் என்பதை சொல்லிவிட்டோம். நம்முடைய வீட்டிலே இதுநாள்வரை சங்கு பூஜை அபிஷேகம் வழிபாடு பழக்கம் இல்லை , புதிதாக தொடங்கலாமா? புதிதாக சங்கை வாங்கி வைத்து பூஜிக்கலாமெனில் சங்கை எப்படி பூஜிக்க வேண்டும்? கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? தவிர்க்க வேண்டியது என்னென்ன? இப்படியான நிறைய கேள்விகள் வரும், சந்தேகங்கள் எழும், அதற்குண்டான பதில்களையும் விளக்கங்களையும் பார்த்து விடுவோம்.
முதலிலே வீட்டு பூஜை அறையில் இது நாள் வரை சங்கு இல்லை புதியதாக வீட்டிலே சங்கு வைத்து பூஜிக்கலாமா என்ற கேள்வி உங்களுக்கு இருந்தால் தயங்காமல் பயம் கொள்ளாமல் தாராளமாக நீங்கள் சங்கை வைத்து வீட்டிலே பூஜிக்கலாம். மகாலக்ஷ்மியுடைய அம்சமாகவே சங்கானது பாவிக்கப் படுகிறது. உலகிலேயே அதிக பக்தர்களை ஈர்க்கின்ற கடவுளாக, அதிகமான சொத்துக்களை கொண்ட தெய்வமாக, கலியுகத்தின் பொருள் தேவையை பூர்த்தி செய்கின்ற திருமலா திருப்பதி வெங்கடாஜலபதி கையிலே சங்கை வைத்திருக்கின்றார்.
சங்கு சமுத்திரத்திலிருந்து கிடைப்பது சில நதிகளில் இருந்தும் கூட வெளி தேசங்களில் இருந்து எடுக்கப்பட்டு சங்குகள் நம்முடைய தேசங்களுக்கு வந்து சேருகிறது இந்த சங்கிலே வலம்புரி சங்கு என்பது மிக அரிதானது கிடைத்தற்கு அரியது அதாவது கடலில் இருந்து கிடைக்கக்கூடிய உண்மையான வலம்புரி சங்கு என்று சொல்லக்கூடியது கோடியிலே ஒன்றுதான் அதனால் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சங்கு எனும்போது அது வலம்புரி சங்காக இல்லாது போனாலும் கூட பரவாயில்லை அதை நாம் நம்முடைய வீட்டில் வைத்து பூஜிக்கலாம்
வலம்புரி சங்கு தான் வேண்டும் அதை வைத்து தான் அபிஷேகம் செய்ய வேண்டும் அதுதான் பூஜைக்கு உகந்தது என்பவர்கள் வெளி தேசங்களில் இருந்தோ சில நதிகளில் இருந்தோ கொண்டு வந்து இங்கே விற்கக்கூடிய வலம்புரி சங்கை வைத்து வழிபடலாம். கடலில் இருந்து எடுக்கப்பட்ட வலம்புரி சங்கு இல்லாத வேறு சங்குகளை வைத்தும் கூட பூஜிக்கலாம் தவறு கிடையாது.
அடுத்து இந்த சங்கை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் நம்முடைய வீட்டின் பூஜை அறையிலே ஒரு தாம்பாளத்திலே பச்சரிசியை நிரப்பி அதன் மீது சங்கை வைக்க வேண்டும் சங்கினுடைய அடிப்பாகம் சுவாமியை பார்த்தவாரும் நுனி பாகம் சூரியனை (கிழக்கை) பார்த்தவாரும் இருக்கும்படியாக வைக்கவேண்டும் அல்லது வடக்கு பார்த்து நுனிப்பாகம் இருக்கும் படியாக வைத்தாலும் தவறு கிடையாது. இப்படி வைத்து நல்ல சந்தனம் குங்குமம் இட்டு மலர் தூவி அதை பூஜித்து பிரத்யேகமாக செய்யப்படக்கூடிய பிரசாதங்களோ பழங்களோ உலர் பழங்களோ அல்லது பசும்பாலோ இப்படியான நெய்வேத்தியங்களை செய்து தீப ஆராதனை செய்ய வேண்டும். நித்தியபடி பூஜை அறையில் விளக்கு ஏற்றி விக்ரகங்களை அபிஷேகம் செய்யும்போது இந்த சங்கிற்கும் பூஜை செய்யலாம் அப்படி தினசரி செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் வாரத்தினுடைய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை முக்கியமான விரத பண்டிகை விசேஷ நாட்களிலே பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக இந்த சங்கிலே புனித நீர் நிரப்பி இதைக் கொண்டு வீட்டில் உள்ள விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் செய்து முடித்த பிறகு இந்த சங்கிற்கும் சந்தனம் குங்குமம் இட்டு புஷ்பம் சாற்றி பிறகு விக்கிரகங்கள் ஸ்வாமி படங்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து நெய்வேத்தியங்கள் தூப தீப ஆராதனைகள் செய்ய வேண்டும்.
முதல் முறையை கடைப்பிடிக்கும் போது, சங்கை பச்சரிசி நிரப்பிய ஒரு தாம்பாள தட்டிலே வைத்து பூஜிக்கும்போது தினசரி பூஜை செய்பவர்கள் தினமுமோ அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறையோ அந்த பச்சரிசியை எடுத்து சாதம் வடித்து ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யவோ அல்லது சர்க்கரைப் பொங்கல் பாயசம் போன்ற இனிப்புகளை செய்யவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அந்த பச்சரிசியை அப்படியே அரிசி பானையில் போட்டுக்கொண்டு புதிய அரிசியை தட்டிலே பரப்பி அதிலே சங்கை வைக்க வேண்டும்.
இரண்டாவது முறையை கடைபிடிக்கும்போது, சங்கிலே புனித நீர் நிரப்பி அதைக் கொண்டு ஸ்வாமி விக்கிரகங்களை அபிஷேகம் செய்யக்கூடியவர்கள் சங்கை வெறும் தரையிலே வைக்காமல் அதற்கென்று ஒரு தாம்பாளம் வைத்துக்கொண்டு அதிலே வைக்க வேண்டும். சங்கு சுத்தமாக பளிச்சென்று இருக்கும் படியாக அதை பராமரிக்க வேண்டும் சங்கை கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது போல சங்கிற்கே கூட அபிஷேகம் செய்யலாம் அதை பளபளவென்று புத்தம் புதியதாக சுத்தமாக பவித்திரமாக பராமரிக்க வேண்டும்.
அடுத்து, தினசரி பூஜையோ வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமோ வெள்ளி செவ்வாய் இரண்டு நாளோ வாரத்தினுடைய விடுப்பு நாளான சனி ஞாயிறோ எப்படி நீங்கள் பூஜையை ஆரம்பிக்கிறீர்களோ வழிபாட்டை ஆரம்பிக்கிறீர்களோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஏகாதசி சரவணம் போன்ற விரத நாட்களில் பண்டிகை நாட்களில் தவறாது சங்கு பூஜை செய்யவேண்டும்.
நம்முடைய வீட்டிலே சங்கை வைத்து நாம் பூஜை செய்ய தொடங்கிய பிறகு பூஜை அறையும் நம்முடைய வீடும் பவித்திரமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சைவம் சாப்பிடக்கூடியவர்களுக்கு பெரிய நிர்ப்பந்தங்கள் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது, அந்த சங்கு இருக்கக்கூடிய இடத்தில் தீட்டுப்படாமல் இருந்தால் போதுமானது. அசைவம் சாப்பிடக்கூடியவர்கள் சங்கை வைத்து பூஜிக்க வேண்டும் என்றால் பூஜையறை தனியாக இருத்தல் நலம்.சமயலறையோடு பூஜையறை இருந்தால் சங்கை தவிர்க்கலாம். வேறு அறைகளில் பூஜை இருக்கும் பட்சத்தில், அசைவம் சாப்பிடும் நாட்களில் பூஜை நடையை மூடி திரையையும் போட்டு, மறுநாள் அடுப்படி வீடு சுத்தம் செய்து தலைக்கு குளித்து பிறகு சங்கு வழிபாட்டை செய்யலாம்.
இவ்விடத்திலே இன்னொரு சந்தேகமும் இருக்கிறது வீட்டிலேயே சங்கு இருக்கின்றது தாத்தா பாட்டியோ அல்லது தாய் தந்தையோ பூஜித்து இருக்கலாம். எங்களுக்கு அது பழக்கமாகவில்லை நாங்கள் செய்ததில்லை என்பவர்கள் புதிதாக சங்கை வாங்கவேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருக்கும் சங்கையே பூஜிக்கலாம். அதற்கே அபிஷேகம் செய்யலாம். அச்சங்கை கொண்டே விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாம். அந்த சங்கை இவ்வளவு காலம் பூஜிக்காமல் விட்டுவிட்டோமே இதன் பிறகு பயன்படுத்தலாமா என்று கவலைப்பட தேவையில்லை.
விக்கிரகங்களுக்கு கடைபிடிக்கக்கூடிய விதிமுறைகள் போன்று சங்கு பின்னமாகிவிட்டால், விரிசல் விட்டிருந்தால் தேய்ந்திருந்தால் அல்லது விரிசல் தெரியாமல் அதில் புனித நீர் நிரப்பும்போது கீழே சிந்துகின்றது என்றால் அந்த சங்கை வைத்து அபிஷேகம் செய்யக்கூடாது, புதிய சங்கை வாங்கி பூஜிக்க வேண்டும். அந்த சங்கையே நாம் மகாலட்சுமி ஆக பாவிக்க வேண்டும் அப்படி பாவித்து பூஜைகளை நாம் தொடர்ச்சியாக செய்யும்போது நம்முடைய வீட்டிலே லட்சுமி கடாட்சம் ஏற்படும் லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வாள் அதனால் தங்க நகைகள் வைரம் வெள்ளி இவை நம்முடைய வீட்டிலே வாங்குவதற்குண்டான சக்தி நமக்கு கிடைக்கும், வாங்கியவை நம்மிடத்திலே தங்கும்.
இந்த பதிவிலே சங்கு தரக்கூடிய பலன்கள் சங்கு வைத்து பூஜிக்க கூடிய வழிபாட்டு முறைகள் சங்கினுடைய மகத்துவம் இவற்றை ஓரளவிற்கு பார்த்தோம் இன்னும் கூட நிறைய தகவல்கள் இருக்கிறது மேலும் லட்சுமி கடாட்சம் பெற செல்வம் சேர சொத்துக்கள் வாங்க நிறைய விரத வழிபாட்டு முறைகள் சூட்சுமங்கள் ரகசியங்கள் எல்லாம் இருக்கிறது இவற்றை அடுத்தடுத்த பதிவிலே பார்ப்போம்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply