வணக்கம். இந்த இணையதளத்தில் கேள்வி பதில் என்ற பகுதியில காகம் தலையில் அடித்ததா? வீட்டிற்குள்ளே ஆந்தை வௌவால் வந்ததா? புறா கிளி இப்படியான பறவைகளை வீட்டில் வளர்க்கலாமா? கருடனை நாம் ஏன் வழிபட வேண்டும்? இப்படியான நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறோம். இன்றைக்கு மலைக்கோவில் சம்பந்தமாக அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய கடைப்பிடிக்க வேண்டிய சில தகவல்களை தெரிந்து கொள்வோம், மலைக்கோவிலுடைய மகத்துவங்களாக மலைக்கோவில் சென்று நாம் பெறக்கூடிய யோகங்களாக போக்கிக் கொள்ளக் கூடிய தோஷங்களாக நிறைய அம்சங்கள் இருக்கிறது அவற்றிலிருந்து சிலவற்றை தெரிந்து கொண்டு பலனடைவோம் வாருங்கள்
சிறுவர்களுக்கு இளைஞர்களுக்கு மலைக்கோவில் என்றாலே உற்சாகம் ஒரு பரவசம் சந்தோஷம் மத்திம வயதில் இருக்கக்கூடியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் என்றாலும் விருப்பமே வயோதிகர்களுக்கு நம்மால் மலை ஏற முடியவில்லையே என்ற ஆதங்கம் அதுபோல நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பஸ்திரீகள், இல்லத்தில் உள்ளவர்களோ நண்பர்களோ அக்கம் பக்கத்தில் வசிக்கக் கூடியவர்களோ மலைக்கோவிலுக்கு செல்லும்போது தன்னால் போக முடியவில்லையே என்று ஏங்குவார்கள். இப்படி மலைக்கோவில் என்று சொல்லும் போதே மனதிற்கு உற்சாகத்தை குதூகலத்தை தரக்கூடிய மகிழ்ச்சியான ஒரு பயணமாக எல்லோரும் விரும்பக்கூடியதாக இருக்கிறது. நிறைய பேருக்கு திருப்பதி என்றாலே பிடிக்கும் அதுபோல கிரிவலம் செல்வது சபரிமலை யாத்திரை செய்வது இதுவெல்லாம் நிறைய பேருக்கு பிடிப்பதற்கு அவர்கள் ஆத்மார்த்தமாக அதை செய்வதற்கு சொல்லக்கூடிய காரணம், அந்த மலை ஏறும் போதும் இறங்கும் போதும் ஏற்படக்கூடிய பரவசம் நல் அனுபவம் அந்த ஒரு இயற்கையான சூழல்…….. மலையப்பனுடைய தரிசனம்.
நம்முடைய புராணங்களின்படி மலையே கடவுளாகவும் இருக்கிறது, மலை மீது கடவுளுக்கு கோவிலும் இருக்கிறது. மலை என்று சொன்னால் இயற்கை அதோடு சேர்ந்து ஆன்மீகமும் அதிலே அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட இந்த மலைக்கோவில் மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் மிக முக்கியமான பலனாக நம்முடைய மனது லேசாகிறது மனதில் இருக்கக்கூடிய கவலை பயம் பாரம் இவை எல்லாம் இருந்த சுவடு தெரியாமல் போகிறது தெளிவு பிறக்கிறது மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கூட மலைப்பிரதேசங்கள் இயற்கை சார்ந்த பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வார்கள் இப்படியாக நம்முடைய மனநலம் நன்றாக இருக்க மலைக்கோவில் நமக்கு துணையாய் இருக்கிறது.
அடுத்து, மலைக்கோவில் மூலமாக நமக்கு தேக ஆரோக்கியம் கிடைக்கிறது அந்த மலையில் இருக்கக்கூடிய ஏராளமான மரம் செடி கொடிகள் மூலிகைகளாக இருந்து நமக்கு மூலிகை காற்றை தருகிறது. மலைகளிலே சுனைகள் அருவிகள் இருக்கிறது அதன் மூலமாக கிடைக்கின்ற தண்ணீர் தாய்ப்பாலுக்கு இணையாக பவித்ரமாக இருக்கிறது அது நமக்கு அருமருந்தாகவும் அமிர்தமாகவும் இருக்கிறது. மேலும் மலை ஏறி இறங்கும்போது உடலுக்கும் கூட சிறந்த பயிற்சியாக இருக்கின்றது தேகபலம் கிடைக்கிறது. இப்படியாக மனநலம் உடல் நலம் இரண்டையும் தரக்கூடிய இதோடு சேர்ந்து வழிபாட்டின் மூலமாக இறை அருளையும் தரக்கூடியதாக ஒரே கல்லிலே மூன்று மாங்காயாக மலைக்கோயில் வழிபாடு நமக்கு அமைகிறது
இவ்வளவு அற்புதமான பலன்களை தரக்கூடிய மலை கோவில்களுக்கு நாம் சென்று வரும்போது ஒரு முக்கியமான தத்துவத்தையும் புரிந்து கொண்டால் உணர்ந்தால் உண்மையான ஆன்மீகத்தை நோக்கி நம்முடைய மலைப் பயணமானது இருக்கும் “மனிதன் என்பவன் தெய்வமாகிறான்” என்று சொல்வதற்கான இலக்கணமாக நாம் இருப்போம் அப்படி நாம் இருப்பதனால் நமக்கு புண்ணிய பலன் உண்டாகும் நம்முடைய பாவங்கள் எல்லாம் போகும் இறைவனுடைய அருளுக்கு பாத்திரமாகி இறைவனை நெருங்கி நாம் செல்வோம். அப்படியான தத்துவம் என்னவென்றால்……
மலை ஏறுபவர்கள் அத்தியாவசியமானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வர், தேவைக்கு அதிகமாக எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தான் சுமக்கக்கூடிய எடை மிகவும் குறைவாக இருக்கும்படியும் அதையும் குறைத்துக் கொண்டே வரும்படியும் பார்த்துக் கொள்வர். அப்போதுதான் சிரமம் இல்லாமல் பிரச்சனை இல்லாமல் நல்லபடியாக மலை ஏறி இறங்க முடியும். தேவையற்றதையோ, வேண்டியதாகவே இருந்தாலும் கூட தேவைக்கு அதிகமாகவோ உடமைகள் இருந்தால், சுமக்க முடியாமல் கஷ்டப்படுவது அந்த பாரத்தினாலேயே கூட ஏதாவது தீங்கு நேருவது பின்தங்குவது இப்படியான இன்னல்கள் உண்டாகும்.
நிறைய வாகனங்களை வாங்கவேண்டும் அதிகமான மனைகளை வாங்க வேண்டும் பல வீடுகளை கட்ட வேண்டும் கிராம் கணக்கை தாண்டி கிலோ கணக்கில் நகைகளை வாங்க வேண்டும் லட்சம் கோடிகளை தாண்டி million billion trillion கணக்கில் பணம் சேர்க்க வேண்டும் இப்படியாக அதிகமான ஆசை கொண்டிருக்கின்றோம். இவை ஒவ்வொன்றும் சுமை பாரம் இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட வேண்டும் நாளடைவில் முற்றிலுமாக இவற்றையெல்லாம் தவிர்த்துவிட வேண்டும் இதை செய்யும்போது போது நாம் சுமையற்றவர்களாக கவலையற்றவர்களாக பயமற்றவர்களாக கடன் அற்றவர்களாக நோயற்றவர்களாக பகையற்றவர்களாக நிம்மதியான வாழ்க்கையை இங்கே வாழ முடியும். இந்த வாழ்க்கையை சுகமாக வாழ முடியும் ஆரோக்கியமாக இருக்கமுடியும் நல்ல மனநலனோடு இருக்க முடியும் முக்தியை மோட்சத்தை வீடு பேற்றை அடைய முடியும்.
நாம் புனிதமான மலையேற வேண்டுமென்றால் உச்சத்தை அடைய வேண்டுமென்றால் மலைமீதுள்ள இறைவனை தரிசிக்க வேண்டுமென்றால் அது அவ்வளவு சுலபமல்ல. கரடு முரடான பாதையில் நடக்கவேண்டும் பல ஏற்ற இறக்கங்களை கடக்கவேண்டும். எண்ணற்ற சவால்களை சந்திக்கவேண்டும். அதுபோல கல்வி, தேவையான செல்வம் தேகபலம் மனநலம் ஆரோக்கியம் பெற்று உன்னதமான உயர்ந்த நிலையை அடைய பாடுபடவேண்டும் உழைக்கவேண்டும் தியாகங்கள் பல செய்யவேண்டும்.
மலையேற (trakking ), மலைக்கடவுளை தரிசிக்க முற்படும்போது சவால்களை விரும்பி ஏற்கிறோம் மலைப்பயணங்களை thrill ஆக நல்ல அனுபவமாக ஞாபகார்த்தமாக கொள்கிறோம். ஆனால்…… படிப்பதற்கோ பணியாற்றுவதற்கோ உழைப்பதற்கோ கஷ்டப்படுகிறோம். முயற்சிக்க தயங்குகிறோம் தோல்வியைக்கண்டு அஞ்சுகிறோம் நெருக்கடிகள் வரும்போது தளர்ந்து போகிறோம். வியர்க்கவே கூடாது போட்டியே இருக்கக்கூடாது காத்திருக்க பிடிக்காது நினைத்தவுடன் எதையும் அடையவேண்டும் எல்லாமே எளிதாக இருக்கவேண்டும்…… என அன்றாட வாழ்க்கையிலே எதிரபார்க்கிறோம். கல்வியிலே தேர்ச்சியோ அதிக மதிப்பெண்களோ உத்தியோகத்திலே உயர்வோ சுயதொழில் வியாபாரத்திலே வெற்றியோ சுலபம் இல்லை. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவது எளிதல்ல. ஆனால், நீங்கள் மலைக்கோவில் தத்துவத்தை புரிந்துகொண்டால் அனைத்தையும் அடையலாம் சாதனைகளை சுலபமாக செய்யலாம் இலக்கை எளிதாக அடையலாம். அதாவது மலையேற்றத்திற்கு தயாராவதுபோலவே மலைப்பயண அனுபத்தை ரசிப்பதுபோன்ற மனநிலையிலேயே உங்கள் கல்வியை உத்தியோகத்தை பொறுப்புகளை கடமைகளை இலக்கை அணுகுங்கள். கஷ்டப்பட்டு செய்தால் எளிதானதையும் அடையமுடியாது இஷ்டப்பட்டு செய்தால் எதையும் அடையலாம். இதுவே மலைக்கோவிலின் தத்துவம்.
இதற்காகத்தான் கடவுள் மலை மீது எழுந்தருளி இருக்கிறார் கோவில் கொண்டுள்ளார். நம்முடைய முன்னோர்கள் மலை மீது கோயில் கட்டியது, ஸ்வாமியே வந்து மலையாக இருப்பது, மலையிலே சுயம்புவாக கடவுள் தோன்றியது இப்படியானவை எல்லாம் இந்த தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது. அதனால் நாம் ஒவ்வொரு முறை மலை ஏறும் போதும் இந்த தத்துவத்தை, மலைக்கோவில் பின்னே உள்ள சூக்ஷுமத்தை ரகசியத்தை நினைத்துப் பார்த்து, பிறருக்கும் எடுத்து சொல்லி மலை ஏறினால் நமது வாழ்க்கை மலைபோல் உயரமானதாக பலமானதாக புனிதமானதாக இருக்கும்.
மலை ஏறும் போது போவது எது? கிடைப்பது எது? மலையேறும் முன் தெரிந்து கொள்ள வேண்டியது எது? மலைக்கோவில் மகத்துவம் என்ன? ஓரளவிற்கு இன்றைக்கு தெரிந்து கொண்டோம் மலைக்கோவில் மகத்துவங்கள் இன்னமும் நிறைய இருக்கிறது ஒவ்வொரு மலையும், அந்த மலையில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான பலனை நமக்கு அருளுகிறார்கள் ஒவ்வொரு விதமான தோஷத்தில் இருந்து நம்மை காக்கிறார்கள் அவை அனைத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவற்றை எழுதுவோம்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், கிரக பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
சென்னையில் வசிப்பவர் கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் திதி / திவசம் செய்து வைக்க தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply