சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் சுப காரியத்திற்கு செல்லலாமா? அசுபகாரியங்களில் கலந்து கொள்ளக் கூடாதா? முடி வெட்டுவது முக சவரம் செய்யலாமா? கூடாதா?

a child dressed as a hindu god

வணக்கம். சபரிமலை யாத்திரை விரதம் பூஜை வழிபாட்டு முறை பற்றிய இரண்டாவது பதிவு இது கடந்த முதல் பதிவிலே என்றைக்கு மாலை அணிந்து கொள்ள வேண்டும் எப்படி அணிய வேண்டும் என்பதை பார்த்தோம் தொடர்ச்சியாக சபரிமலை விரத வழிபாட்டு முறை பற்றிய பெரும்பாலான பக்தர்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகங்களின் விளக்கங்களை பார்ப்போம் அந்த வரிசையிலே மாலை போட்டவர்கள் திருமணம் கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு செல்லலாமா? தவிர்க்க வேண்டுமா? உறவினர்கள் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கக்கூடியவர்கள் அந்த பங்க்ஷனை அட்டென்ட் செய்து தான் ஆக வேண்டும் தவிர்க்க முடியாது என்ற பட்சத்திலே சென்று அவர்களை வாழ்த்தி, விருந்து சாப்பிடுவதை தவிர்த்து வீடு வந்து சாப்பிடலாம்.

திருமணத்திற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் முன்னாள் மாலை நடக்கக்கூடிய ரிசப்ஷனை தவிர்த்து மறுநாள் காலை முகூர்த்த நேரத்திலே சென்று மணமக்களை ஆசீர்வதித்து விட்டு வரலாம். ஏனென்றால்…. ரிசப்ஷன் என்று சொல்லும்போது அது ஒரு சடங்கு சம்பிரதாய விஷயம் கிடையாது அங்கு பூஜைகளும் இல்லை யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் அந்த இடத்திலே மடி ஆச்சாரம் விதிமுறைகள் அவ்வளவு சரியாக கடைபிடிக்க முடியாத நிலை இருக்கும் ஆனால் முகூர்த்த காலத்திலே பூஜைகள் ஹோமங்கள் நடந்து கொண்டிருக்கும் பெரும்பாலானவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வந்து கலந்து கொண்டிருப்பார்கள் அதனால் முகூர்த்தத்திற்கு செல்லலாம். இதே போல நீங்கள் போகக்கூடிய சுப காரியம் எதுவோ அதற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நேரத்தில் சென்று பங்கு கொண்டு வாழ்த்தி விட்டு வருவது உத்தமம். முடிந்து மட்டும் அங்கு விருந்து போஜனங்களை சாப்பிடுவதை தவிர்த்தால் போதுமானது.

மாலை அணிந்தவர்கள் அசுப காரியத்திற்கு செல்லக்கூடாதா? உறவுகளிலே இறப்பு நேர்ந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? பெரும்பாலானவர்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள். நல்லதற்கு போகாவிட்டாலும் கெட்டதற்கு கட்டாயம் போக வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் பல காலமாக கடைபிடித்து வருகிறார்கள் அதுபோல நற்காரியங்களுக்கு வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்து வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்போம் “மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்ற ஒரு வழியை நாம் கடைப்பிடிக்கிறோம். ஆனால் அசுப காரியங்களுக்கு இதுபோல அழைக்க வேண்டும் என்றோ அல்லது வேறு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தியை கேள்விப்பட்ட உடனே சென்று கலந்து கொள்வது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது அனைத்தையும் எடுத்துகக்கட்டி செய்வது இப்படியான விஷயங்களை கடைப்பிடிக்கிறோம்.

சபரிமலைக்கு மாலை அணிந்து இருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்கள் உறவு வட்டாரத்திலே இறப்பு நேர்ந்தால் செய்தியை கேள்விப்பட்ட உடனேயே மாலையை கழட்டி விட வேண்டும், பிறகு சென்று அந்த இறப்பு சடங்குகளிலேயே கலந்து கொள்ள வேண்டும் அடுத்த ஆண்டு மாலை அணியலாம். மாலை அணிந்திருக்கிறோம் என்பதற்காக இதுபோல உறவினர்களிலேயே இறப்பு நேர்ந்தாலும் கூட செல்லாமல் இருப்பது மலைக்கு சென்று விட்டு வந்து அதன் பிறகு போய் விசாரிப்பது இப்படியானதை செய்வதை தவிர்க்க வேண்டும். துக்கத்திலே துயரத்திலே இருக்கக்கூடியவர்களுக்கு அந்த சமயத்தில் போய் தான் உதவி செய்ய வேண்டும் ஆறுதல் அளிக்க வேண்டும். உறவினர் அல்லாதவர் மிக நெருங்கிய நண்பர் கிடையாது ஜஸ்ட் தெரிந்தவர் ஒரு காலத்திலே உடன் பணியாற்றியவர், ஒரு காலத்தில் உடன் படித்தவர், சொந்த ஊரிலே இருக்கக்கூடியவர் இப்படிப்பட்டவருடைய குடும்பத்திலே இறப்பு நேரும் பட்சத்திலே மாலை அணிந்து இருக்கக்கூடிய காரணத்தினால் அப்போது செல்லாமல் இருந்து பிறிதொரு காலத்திலே சென்று விசாரிக்கலாம். இது அவரவருடைய மனதை பொறுத்து பழக்க வழக்கத்தை பொறுத்து விருப்பு வெறுப்பை பொறுத்தது.

மாலை போட்டு இருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்கள் சிகை அலங்காரம் மீசை தாடி மழிப்பது ட்ரிம் செய்வது சரியா? தவறா? இந்த கேள்வியை நிறைய பக்தர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சில தவிர்க்க முடியாத நிர்பந்தத்தில் இருக்கக்கூடியவர்கள் தவிர, ஏனையவர்கள் அனைவரும் மாலை அணிந்த பிறகு சேவிங் செய்து கொள்வது ட்ரிம் செய்வது முடி வெட்டிக் கொள்வது இவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏன், நகங்களை கூட வெட்டக்கூடாது இன்னமும் சொல்லப் போனால் எண்ணெய் வைத்து தலை வாருவது முகத்திற்கு பவுடர் போடுவது அணிகலன்களை அணிந்து கொள்வது ஆடைகளை அயன் செய்து அணிந்து கொள்வது இதைக் கூட தவிர்க்க வேண்டும் அதுதான் உண்மையான சபரிமலை யாத்திரைக்குண்டான விரதமாக இருக்கும், இயன்றவரை இதை நாம் கடைபிடிப்பது நல்லது.

இந்த காலத்திலே இதுவெல்லாம் சாத்தியம் இல்லை இதை எல்லாம் பார்க்க முடியாது என்பதாக பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு இந்த விதிகளை மீறக்கூடாது கல்லூரிக்கு செல்கிறோம் அல்லது அலுவலகத்துக்கு செல்கிறோம் அங்கே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது யூனிபார்ம் என்று சொல்லக்கூடிய ஒன்று ஆடைகளை தாண்டி இது போல மற்ற விஷயங்களிலும் கூட இருக்கிறது அதை கடைபிடித்து ஆக வேண்டும் என்று சொல்லக்கூடியதை மறு பரிசீலனை செய்யலாம் அல்லது மேல் அதிகாரிகளிடத்திலே நிர்வாகத்திடத்திலே அனுமதி கேட்டு பார்க்கலாம் request செய்யலாம்.

கிளீன் ஷேவ் செய்து நாளை தொடங்கினால் தான் உற்சாகமாய் இருக்கும் சுறுசுறுப்பாய் இருக்க முடியும் புத்தி நன்றாக வேலை செய்யும் தெளிவாக இருக்க முடியும் அப்போதுதான் பார்ப்பதற்கும் கூட லட்சணமாக இருக்கும் அப்படி இல்லாமல் முடிவளர்த்து தாடிவைத்து இருந்தால் உற்சாகமாக இராது தோற்ற பொலிவை தராது மந்தமாய் இருக்கும் சோகமாய் இருப்பது போல கவலையிலே துக்கத்தில் இருப்பது போல காண்பிக்கும் என்பதாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். அப்படி கிடையவே கிடையாது. நாம் படிப்பதற்கும் நம்முடைய வேலைக்கும் ஆரோக்கியத்திற்கும் மனநலனுக்கும் மீசை தாடி வைத்திருப்பது தடை கிடையாது இடையூறு கிடையாது பின்னடைவு கிடையாது.

உலகத்தின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர்கள் சயின்டிஸ்ட்கள் அறிவியல் மருத்துவத்துறையில் நிறைய கண்டுபிடிப்புகளை செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் சேவிங் செய்யப்படாது மிக அதிகமாக நீண்டு வளர்ந்த தாடி மீசையோடு நிறைய தலைமுடியோடு தான் இருந்தார்கள் அவர்கள் சுறுசுறுப்பாக இல்லையா? அவர்கள் மந்தமாக இருந்தார்களா? தூங்கி வழிந்தார்களா? அவர்கள் சோம்பலா இருந்தார்களா? கிடையாது. அவர்கள் தான் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மிகக் குறைவாக மூன்று நான்கு மணி நேரங்களே தூங்கியவர்கள் மற்ற நேரம் முழுக்க ஆராய்ச்சி செய்தவர்கள் நிறைய படித்தவர்கள் தங்களுடைய மூளையை பெரும்பாலானவர்களை விட அதிக சதவீதம் பயன்படுத்தியவர்கள் சாதித்தவர்கள். அதனால்…. தாடி வைத்திருந்தால் மீசை வைத்திருந்தால் அது பின்னடைவு இடையூறு நம்முடைய முன்னேற்றத்திற்கு தடை சோகம் துக்கம் என்பதெல்லாம் சரியல்ல. இதிலிருந்து சொல்ல வருவது சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள் தங்களுடைய உத்தியோகம் கடமைகள் பாதிக்கப்படாத அளவிற்கு விதிமுறைகளை கடைபிடிப்பது நல்லது.

சபரிமலை யாத்திரை பற்றிய இந்த பதிவிலே சில முக்கியமான கேள்விகளும் அதற்குண்டான பதில்களையும் பார்த்தோம். தொடர்ச்சியாக மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எவையெவை? இப்படியான தகவல்களை அடுத்தடுத்த பதிவிலும் அறிந்து கொள்வோம்.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா…

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading