என்ன செய்யும் ராகு கேது? எல்லா கிரகங்களையும் விட பலமானதா ராகு கேது? ராகு கேது இரண்டு கிரகங்களா? ஒரு கிரகமா? உண்மையில் இவை கிரகங்களா நிழலா?

eclipse digital wallpaper

தேவர்கள் அசுரர்கள் பாற்கடலை கடைந்த பிறகு அமிர்தம் அருந்த தேவர்கள் வரிசையிலே ஸ்வர்பானு என்ற அசுரன் தேவர்களைப் போன்று உரு மாற்றிக் கொண்டு இடம் பெற மோகனி அவதாரத்தில் இருந்த விஷ்ணு அசுரனை தண்டிக்க தலைவேறு உடல் வேராக துண்டிக்கப்பட்டு உடலோடு பாம்பின் தலையும் தலையோடு பாம்பின் உடலும் ஏற்பட்டு இரண்டு கிரகங்களாக ராகு கேதுக்களாக ஆனார்கள் என்பது நமக்கு புராணத்திலே சொல்லப்படக்கூடிய விளக்கம்.

ராகு கேதுக்கள் சாயா கிரகங்கள் சர்பகிரகங்கள் இவர்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது அதனால் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டை ஆக்கிரமிப்பார்கள் எந்த கிரகத்தோடு சேருகிறார்களோ அந்த கிரகத்தின் சக்தியை எடுத்துக் கொள்வார்கள் பாம்பானது இறையை விழுங்குவது போல இந்த சர்பகிரகங்கள் மற்ற கிரகங்களுடைய வீட்டையும் அந்த கிரகத்தினுடைய சக்தியையும் விழிங்கி விடுகிறது அதாவது உள்வாங்கிக் கொள்கிறது ஆக்கிரமிக்கிறது அதனால் இவை வலிமையானவை என்று ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது

மேற்சொன்ன புராண கதையும் ஜோதிட விளக்கமும் புரிந்து கொள்வதற்காக நமக்கு சொல்லப்பட்டது ராகு கேதுக்கள் பலத்தைப் பற்றியும் தாக்கத்தை பற்றியும் புரிந்து கொள்வதற்காக நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது அதை இன்னும் நாம் நேரடியாக பார்த்தோமேயானால் பூமி சூரியனை சுற்றி வருகிறது சந்திரன் பூமியை சுற்றி வருகிறது இப்படி சுற்றும் போது இரண்டு இடத்திலே சந்திப்பு நிகழ்கிறது அந்த இடங்களிலே ஒன்று அசெண்டிங் நோட் எனப்படுகிறது மற்றொன்று டிசெண்டிங் நோட் எனப்படுகிறது இவை ராகு கேதுக்களாக இருக்கின்றது வட துருவ புள்ளி ராகு தென் துருவ புள்ளி கேது அதாவது அந்த சுற்றுப்பாதையில் ஏற்படக்கூடிய நிழல் ராகு மற்றும் கேதுவாக இருக்கின்றது

சரி ராகு கேதுக்கள் பற்றி புராண ரீதியாக ஜோதிட சாஸ்திர ரீதியாக அறிவியல் பூர்வமாக இவை பார்த்தோம் அடுத்து, இந்த ராகு கேது என்று சொல்லக் கூடியவை எல்லா கிரகங்களையும் விட பலமானது என்று சொல்லப்படுகிறது இவை நிழல் கிரகங்கள் தானே நிழலுக்கு எப்படி இவ்வளவு சக்தி ஏற்படுகிறது நிஜமாக இருக்கக்கூடிய கிரகங்கள் அதிலும் பிரத்யட்சமாக கண்ணுக்குத் தெரியக்கூடிய கிரகங்கள் அதிலும் எல்லா கிரகங்களுக்கும் தலையாய கிரகமான சூரியன் இப்படிப்பட்டதை விட…. கிரகமே இல்லை ஒரு நிழல் என்று சொல்லப்படக்கூடிய சாயா கிரகங்கள் எப்படி வலிமையானதாக இருக்க முடியும் இந்த சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

சாதாரணமாக நமக்கு பிரச்சனைகள் தரக்கூடிய வேதனையை தாக்கத்தை விட பிரச்சனை நேருமோ என்ற எண்ணம் தருகின்ற பயமே அதிகம் பெரிய நோய் தொற்று ஏற்பட்டபோது கூட நோய் தொற்று எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியதோ அதைவிட நமக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் நிறைய பேருக்கு பாதிப்பை உண்டாக்கியது அதனால் சில சமயத்திலே நிஜத்தை விட நிழல் சக்தி வாய்ந்ததாக இருக்கும்

கனவு பலன்களை பெரும்பாலானவர்கள் மிகவும் எதிர்பார்த்து கேட்கிறார்கள் கனவு பலன்களை பார்க்கிறார்கள் படிக்கிறார்கள் கனவு கண்டு பயந்து எழக்கூடியவர்கள் அந்த கனவில் கண்ட காட்சிகள் நடந்து விடுமோ என்று அடுத்த சில காலங்கள் பயப்பட கூடியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கனவு என்று தெரிந்தும் கூட அது பலன் தரும் என்று நம்புகிறோம் பலனும் தருகிறது பலிக்கவும் செய்கிறது இப்படிப்பட்ட கனவுகள் இப்படிப்பட்ட பலன்களை தரும் என்று நம்முடைய முன்னோர்கள் கனவுகளுக்கு பலன் சொல்லியிருக்கிறார்கள் அப்படி நிஜத்தை விட கனவுக்கும்கூட சக்தி இருக்கிறது அதுபோல ராகு கேதுக்களுக்கு சக்தி அதிகம்

இன்னமும் கூட நேரடியாக நாம் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தை பார்ப்போம் பெரும்பாலானவர்கள் திரைப்படங்களை பார்க்கிறோம் சினிமா பார்க்காதவர்கள் என்று மிகச்சிலரையே பார்க்க முடியும் நாம் பார்க்கின்ற திரைப்படத்திலே வரக்கூடிய கதாநாயகர்கள் நமக்கு பிடித்த மாணவர்களாக இருக்கிறார்கள் ஹீரோக்கள் என்று சொல்லக்கூடிய நிலையத்தாண்டி சூப்பர் ஹீரோக்களாக இப்போது மாறிக்கொண்டு வருகிறார்கள் படத்தில் அவர்கள் செய்வது அனைத்துமே பொய்யானது கற்பனையானது அந்த திரைப்படத்தில் வருவது போல அவர்களிடத்தில் எந்த ஒரு சக்தியும் கிடையாது ஒரு குடும்பத்தையோ ஊரையோ நாட்டையோ ஏன் உலகத்தையோ கூட காப்பாற்றுபவர்களாக சூப்பர் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுகிறார்கள் அது திரைப்படம் என்று நமக்குத் தெரிகிறது ஆனாலும் கூட நாம் அவர்களுக்கு விசிறிகளாக இருக்கிறோம் அப்படி நிஜத்திலே இல்லாத ஒன்று பொய்யான ஒன்று எப்படி நமக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறதோ நம்மை கவரக்கூடியதாக இருக்கிறதோ அதுபோல நிஜத்தை விட பொய்யான ஒன்று மாயையான ஒன்று அதிக சக்தியை பெறுகிறது நிஜத்திலே எவ்வளவோ பேர் நம்முடைய தேசத்தை காக்கிறார்கள் மருத்துவர்கள் உயிரை காக்கிறார்கள் காவல்துறையினர் ஊரை காக்கிறார்கள் ராணுவத்தினர் தேசத்தை காக்கிறார்கள் ஆனால் நமக்கு பிடித்த நபர் என்றால் நாம் ஹீரோவை தான் சொல்கின்றோம் இவர்கள் நம்முடைய மனதையும் ஆட்சி செய்கிறார்கள் அதுபோல ராகு கேதுக்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள்

ராகு கேதுக்களுடைய பலம் என்ன நிஜ கிரகத்தை விட சாயா கிரகமான இவை எப்படி பலம் தெரிகிறது என்பதற்கான சில உதாரணங்களை நாம் மேலே பார்த்தோம் தலைப்பிலே கேட்டது போல ராகு கேதுக்கள் இரண்டு கிரகமா என்றால் இல்லை அதை ஒரு கிரகமாக கொள்ளலாம் அதன் பிறகு இவை நிஜகிரகங்களா என்றால் இல்லை சாயா கிரகம் நிழல் என்று கொள்ளலாம் அதன் பிறகு இவை எல்லா கிரகங்களையும் விட வலிமையானதா என்றால் ஆம் இவை வலிமையானது பலமானது.

ராகு கேது என்று சொல்லக்கூடிய இரண்டு கிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்திலே எப்படி இருக்கிறது? சுப கிரகங்களோடு சேர்ந்து இருக்கிறதா அசுப கிரகங்களோடு சேர்ந்து இருக்கிறதா? சுகஸ்தானத்தில் இருக்கிறதா அசுபஸ்தானத்தில் இருக்கிறதா லக்னம் ராசி இவற்றிலே இருக்கிறதா இவற்றை பார்க்கிறதா ராகு கேதுவுடைய திசை நடக்கின்றதா ராகு கேதுக்களுக்கு இடையிலே எல்லா கிரகமும் இருக்கிறதா இப்படியானவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் அவரவருக்கு முடிந்த வழிமுறைகளை கையாளும்போது எல்லா கிரகங்களையும் விட வலிமையான ராகு கேதுக்களால் பாதிப்பு அடைவதை தவிர்த்து அந்த கிரகங்களுடைய பலத்தை பயன்படுத்திக்கொண்டு சாதக பலனை பெறலாம்.

அது எப்படி ராகு கேதுக்கள் சாதக பலனையும் தருமா யோகத்தை ஏற்படுத்துமா? ராகு கேதுக்களுடைய தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கு உண்டான வழி என்ன? இப்படியான நிறைய தகவல்கள் இருக்கிறது இவற்றையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம்.

உங்களுடைய ஜாதகத்தில் ராகு கேதுக்கள் யோகத்தை ஏற்படுத்துகிறதா? தோஷத்தை ஏற்படுத்துகிறதா? உங்களுக்கு ராகு கேது தோஷம் உள்ளதா? இல்லையா? உண்டென்றால் பரிகாரம் என்ன? இப்படியான பலனை தெரிந்துகொள்ள நேரிலோ அலைபேசி வாயிலாகவோ அணுகவும்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading