மகர ராசியிலே சந்திக்கின்ற சனிபகவான் மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வருஷம் பங்குனி மாதம் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மங்களகரமான ஸ்ரீ சோபகிரது வருஷம் ஆவணி மாதம் கும்பத்தில் இருந்து மீண்டும் மகரத்திற்கு வக்ரகதியாக பெயர்ச்சி ஆகின்றார். ஏறக்குறைய ஐந்து மாத காலங்கள் கும்ப ராசியிலே சனி பகவான் இருந்து தருகின்ற பலாபலன்களை, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் தனித்தனியாக பார்க்கப் போகின்றோம். இந்த காலத்திலே ஏற்படக் கூடிய சாதக பலன்கள், பாதக பலன்கள், பாதக பலனை தவிர்க்க, குறைக்க வழிமுறைகள், இக்காலத்திற்கான வழிபாடு/ பரிகாரம் போன்றவற்றையும் தருகின்றோம்.
கும்ப ராசிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்து சனி பகவான் தரக்கூடிய பலன்களுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த ஐந்து மாத காலங்கள் அமையவிருக்கின்றது. அதனால் இந்த காலத்தை எப்படி கையாள வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது. இந்த ஐந்து மாத காலங்களிலே நீங்கள் பெறக்கூடிய பலன்களைக் கொண்டு, கும்ப ராசிக்கு சனி பகவான் வந்து தரக்கூடிய இரண்டரை ஆண்டுகால பலன்களை முழுமையாக பெறுவது, அந்த காலத்தில் கெடுபலனை தவிர்ப்பது குறைப்பது சாத்தியம்.
அதனால் இந்த சனி பெயர்ச்சி பலனானது மிக மிக முக்கியமானதாக ஆகிறது ஒவ்வொரு ராசி அன்பர்களும் பலன்களை மிகச் சரியாக கவனமாக படித்து பலன் பெற வேண்டும். வாழ்த்துகள்….
மேஷ ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply