மேஷம் சனிப்பெயர்ச்சி 2023 MESHAM SANI PEYARCHI PALANGAL 11 ஆமிட சனி பாதக சனியா? லாப சனியா?

மேஷ ராசி அன்பர்களே.. ராசிக்கு பத்தாம் இடத்திலே இருந்து பதினோராம் இடத்திற்கு சனிபகவான் வருகின்றார். இந்த சனிப்பெயர்ச்சியை நீங்கள் தாம்பூலம் கொடுத்து வரவேற்கலாம். இக்காலத்திலே சனிக்கு ரசிகனாகவே நீங்கள் மாறப் போகிறீர்கள். முடிந்தால் சனி பகவானுக்கு கோவிலே கட்டுவீர்கள். அந்த அளவிற்கு அமோகமான பலன்களை தரப்போகின்றார் சனி பகவான்.

11 ஆமிட சனி பாதக சனியா? லாப சனியா? – 11ஆம் இடத்திலே வரக்கூடிய கிரகம் எதுவாயிருந்தாலும் அது பலனை தர வேண்டும் அதிலும் குறிப்பாக இயற்கை சுப கிரகத்தை விட இயற்கை அசுபக்கிரகம் வரும்போது இன்னும் சிறந்த பலன் கிடைக்கும். அதிலும் உங்களுடைய ராசியை பொறுத்த வரைக்கும் பதினோராம் இடத்திற்கு அதிபதியாக சனி பகவான் இருக்கின்றார், ஆதாய பலனை தர வேண்டிய இடத்திலே ஆட்சி பலம் பெறுகின்றார்.

மாணவ மணிகளுக்கு படிப்பது சுலபமாயிருக்கும். படித்து முடித்து அதன் மூலமாக பெறக்கூடிய பலனை நினைத்துப் பார்த்து உற்சாகமாக படிப்பீர்கள். சலுகைகள் ஸ்காலர்ஷிப் பாராட்டு முதலிடம் இப்படியானவை கிடைக்க வேண்டும் என்பதற்காக கல்வியில் உங்களுடைய ஆர்வத்தை அதிகரித்து கொள்வீர்கள். படிப்பதற்காக கூடுதல் நேரத்தை உங்களால் ஒதுக்க முடியும். விரும்பிய துறை எடுத்து படிக்கக்கூடிய யோகமானது அற்புதமாக இருக்கிறது. வெளிநாடு சென்று படிக்க விரும்பக் கூடியவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். தொழிற்கல்வி பயிலக் கூடியவர்களுக்கு மிகச்சிறந்த நற்காலமாக இந்த காலம் அமையவிருக்கிறது. உடல்நிலை அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் போனவர்கள், படிப்பிலே தடை ஏற்பட்டவர்கள் விரும்பியதை தொடர்ந்து படிக்கக்கூடிய அனுகூலம் ஏற்படும். இதற்கு முன்னே படிப்பதற்காக நிறைய கஷ்டப்பட்டீர்கள், இனிமேல் விளையாட்டாக படிக்கப் போகிறீர்கள், வெற்றி நிச்சயம்.

உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வைத் தருகின்ற உன்னதமான காலமாக வரக்கூடிய காலம் அமையப் போகின்றது. உத்தியோக ரீதியாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் உயர்வு அங்கீகாரம் மதிப்பு மரியாதை கௌரவம் அந்தஸ்து இவை எல்லாம் உங்களைத் தேடி வரப் போகின்றது. வேலை நேரத்திலே உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு shift மாற்றங்களுக்கான அனுமதி கிடைக்கும். இடமாற்றம் தேவை என்றால் முயற்சிக்கலாம் கிடைக்கும். பணி நிரந்தரம் permanent ஆவது எவரையும் எதிர்பாராமல் உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பது, விரும்பிய துறையில் விரும்பிய நிறுவனத்தில் உத்தியோகம் கிடைக்க கூடிய யோகம் ஏற்படுவது இப்படியான சாதக பலன் இருக்கிறது. வேலை இல்லாதவர்கள், சரியான வேலை அமையாதவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்திலே பணிபுரிய முடியாமல் போனவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த காலத்திலே நல்ல உத்தியோகம் கிடைப்பது இப்படியாக மிகச்சிறந்த சாதக பலன் உண்டு.

சுயதொழில் வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஏற்படக்கூடிய பொன்னான காலமாக அமையப் போகின்றது. நல்ல திறமைசாலியான நம்பகத்தன்மை வாய்ந்த விசுவாசம் உள்ள வேலையாட்கள் கிடைப்பார்கள். நல்ல ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். தனித்து உங்களுடைய தொழில் வியாபாரத்தை பெரிய அளவிற்கு வளர்க்க முடியவில்லை என்றால் நல்ல கூட்டாளிகள் கிடைப்பார்கள். கடன் தேவை என்றால் எளிதாக கிடைக்கும். அரசாங்க அனுமதி பெற்று செய்ய வேண்டிய காரியங்கள் சுலபமாய் நடந்தேறும். உங்களுடைய வியாபாரத்தை வளர்ப்பதற்காக கூடுதல் முதலீடுகள் செய்வது, புதிய கிளைகள் தொடங்குவது, வியாபார ஸ்தலத்தை பெரிது படுத்துவது இப்படியான அம்சங்கள் எல்லாம் ஏற்படும். இதற்கு முன்னே தொழில் நல்லபடியாய் நடந்தும் கூட லாபம் பெரிய அளவிற்கு இல்லை என்ற ஒரு நிலை மாறி லாபம் கணிசமாக உயரும். வாங்கிய கடனை எல்லாம் அடைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். வியாபாரம் சம்பந்தமாக மனதிலே ஏதாவது குழப்பமோ பயமோ இருந்தால் அதுவெல்லாம் போய் நல்ல நம்பிக்கையோடு நீங்கள் துணிந்து பெரிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதற்கு பலன் பெறக்கூடிய காலமாக இந்த காலம் அமைகின்றது. புதிதாக சுயதொழில் வியாபாரம் தொடங்க வேண்டும் ஒரு கடை வைக்க வேண்டும், அலுவலகம் திறக்க வேண்டும், தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பவர்களும் கூட இந்த காலத்திலே இதற்கான முயற்சிகளை செய்யலாம், உதவிகளை கேட்கலாம் தாராளமாக கிடைக்கும். அற்புதமான லாபத்தை பெறக்கூடிய நல்ல காலமாக இந்த காலம் உங்களுக்கு அமையப் போகிறது.

கலைத்துறை விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் . கிடைக்கக்கூடிய வாய்ப்பு சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். திறமையை வெளிப்படுத்த முடியும். நல்ல நிலையை அடைவது, அடைந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வது, பெயர் புகழ் பிரபல்YA யோகம் கிடைப்பது, கொண்டாடப்படுவது, கௌரவ பட்டங்கள் பதவிகள் இப்படியானவை ஏற்படுவது சாத்தியம். போட்டிகளில் சுலபமாக வெற்றி கிடைக்கும். தடை இடையூறு எதிரிகளை எல்லாம் கடந்து நீங்கள் முன்னேறக்கூடிய அற்புதமான காலமாக இந்த காலம் அமையும்.

திருமணம் மணவாழ்க்கை குடும்பம் குழந்தைகள் பிள்ளைகளுக்கு வயது கூடிக் கொண்டே போகின்றது வரன் அமைந்த பாடில்லை, திருமணம் நடக்குமா நடக்காதா? இப்படிப்பட்ட பயம் கவலையிலிருந்து பெற்றோர் விடுபடப் போகிறீர்கள். எதிர்பார்ப்பதை விட மிகச்சிறந்த வரன் கிடைக்கக்கூடிய யோகம் ஏற்படுகிறது. நிச்சயதார்த்தம் திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக அமையும். திருமணத்திற்கான பொருளானது சுலபமாக கிடைக்கும். பிள்ளைகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட இப்போது நீங்கள் பேச சம்மதம் தெரிவிப்பார்கள். திருமண சம்பந்தமாக தோஷங்கள் அதிகமாக இருந்தால் அதற்குண்டான சரியான பரிகாரங்களை செய்து பலன் பெறக்கூடிய யோகமும் இருக்கிறது.

மணமான தம்பதிகள் எலியும் பூனையமாக இருந்திருந்தால் இப்போது அன்னோன்யம் ஏற்படும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது விட்டுக் கொடுத்த போவது சமாதானம் இப்படியான விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. வெவ்வேரிடத்திலே பணிபுரியக்கூடியவர்களுக்கு ஒன்றாக சேர்ந்து வசிக்க transfer கிடைக்கும். வெளிநாட்டிலே ஒருவர் இங்கே ஒருவர் இருந்தால் வாழ்க்கை துணையை வெளிநாட்டிலே குடி அமர்த்திக் கொள்ள அனுமதி கிடைக்கும்.

குடும்ப நபர்கள் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். இல்லத்திலே ஒற்றுமை சந்தோஷம் இருக்கும்.

புத்திரப் பேறு சம்பந்தமான தடை தாமதம் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல தீர்வானது கிடைக்கும். வைத்தியம் பலன் தரும், பிரார்த்தனை பலன் தரும். நற்புத்திரப்பேறு ஏற்படக்கூடிய நல்ல காலமாய் இருக்கிறது.

பொருளாதாரம் லாபஸ்தானம் வலுத்திருக்கின்ற இந்த காலத்திலே பண வரவு தாராளமாய் இருக்கும். குடும்ப செலவுகள் கடமைகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக உங்களால் செய்து முடிக்க முடியும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க முடியும். பணத்தட்டுப்பாடு, சுப காரியம் தொடங்க முடியாமல் தள்ளிப் போட்டது வறுமை இப்படியான நிலை எல்லாம் மாறி பண வரவு சீராக கிடைக்க பெற்று, செலவுகள் குறைந்து சேமிப்பு கூடி கடமைகளை செய்ய துணிவு வருவது, மனைவீடு வண்டி வாகன யோகங்கள் கிடைப்பது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது, வாழ்க்கைத் துணை, பிள்ளைகளுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பது இப்படியான யோக பலன்கள் எல்லாம் ஏற்படும். லட்சுமி கடாட்சம் உங்களுடைய இல்லத்தில் நிலைத்திருக்கின்ற காலமாக இந்த காலம் இருக்கும். சாதாரண நிலையில் இருக்கக்கூடியவர்கள் லட்சாதிபதியாகவும், லட்சாதிபதியாக இருக்கக்கூடியவர் கோடீஸ்வரனாகவும் கோடீஸ்வரனா இருக்கக்கூடியவர் குபேரனாகவும் ஆகக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மனநலம் உடல் நலம் சனி பகவானை ஆயுட்காரகன் என்கின்றோம் அவர் இப்போது சாதகமான பலனை தர வேண்டிய காலமாக இந்த காலம் இருப்பதினால் ஆயுள் பயம் இருக்கக் கூடியவர்களுக்கு அதிலிருந்து விடுபடக் கூடிய ஒரு பலன் இருக்கிறது. ஆயுள் பயம் எப்போது வருகிறது ? நோய் அதிகமாக இருக்கும் போது, அவ்வப்போது கண்டங்கள் விபத்துகள் ஏற்படும் போது, வயோதிகத்திலே… சனி சாதகமாக இருப்பதால் நோயெல்லாம் தீரும். தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டவர்கள் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடுவீர்கள்., வயோதிகராக இருந்தாலும் கூட இந்த வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களிலே ஈடுபட்டு உற்சாகமாக சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மேலும் வருமுன் காப்போம் என்ற அளவிலே உடற்பயிற்சி குறிப்பாக நடை பயிற்சியை இந்த காலத்திலேயே தொடங்க முடியும். உணவு கட்டுப்பாடு என்று சொல்லக்கூடிய diet ஆரம்பிக்க முடியும். நல்ல உடல் உழைப்பு அதன் மூலமாக நல்ல தூக்கம் உங்களுக்கு ஏற்படும். .

அடுத்து மனநலம் – கடுமையான மன உளைச்சல் குழப்பம் சஞ்சலம் பயம் விரக்தி வெருப்பு இப்படியான நிலை இருக்கக்கூடியவர்களுக்கு முற்றிலுமாக அதிலிருந்து நிவர்த்தி ஆனது கிடைக்கும். மனதிலே நல்ல ஒரு தெளிவு குறிப்பாக தைரியம் துணிவு தன்னம்பிக்கை உற்சாகம் நம்பிக்கை, தன்னுடைய கல்வியின் மீது நம்பிக்கை தன்னுடைய கைத்தொழிலின் மீது நம்பிக்கை, தர்மத்தின் மீது நம்பிக்கை இறை நம்பிக்கை பெரியவர்கள் மீது நம்பிக்கை இப்படியானவை ஏற்பட்டு அதன் மூலமாக நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். தெளிவாய் இருப்பீர்கள்.

பரிகாரம் வழிபாடு 11ஆம் இடமான லாப ஆதாய ஸ்தானத்திலே சனி பகவான் இருக்கக்கூடிய இந்த காலத்திலே, சனிப்ரீதி சனி பரிகாரம் இப்படியானவை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது . அதனால் அதிர்ஷ்ட வழிபாடாக பலன் தரக்கூடிய பிரார்த்தனை என்பதாக பார்க்கும்போது, சுப காரியங்களில் கலந்து கொள்வது. வரிய நிலையிலே இருக்கக்கூடியவர்கள் வீட்டுப் பெண் பிள்ளைக்கு திருமணம் செய்யும்போது இயன்ற உதவியை செய்வது. முகூர்த்தப்பட்டு மாங்கல்யம் எடுத்து தருவது. கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்வது. கும்பாபிஷேகங்கள் நடக்கும்போது சென்று கலந்து கொள்வது இயன்ற கைங்கரியம் செய்வது இப்படியானவற்றை முடியும் போதெல்லாம் செய்யலாம். பழனி சென்று தண்டாயுதபாணியை தரிசித்து வரலாம். இதை செய்ய இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனை ஏற்படுத்தும். வாழ்த்துகள்….

குறிப்பு 1. இவையெல்லாம் பொதுப்பலன்களே, நடக்கின்ற தசா புக்தி, சுய ஜாதக சனிபலம் இவற்றிற்கு ஏற்றவாறு பலன்கள் கூடக் குறைய இருக்கும்.

குறிப்பு 2. கோச்சார குரு ராகு கேது இவர்களுடைய நிலைக்கு ஏற்றவாறு பலன்கள் அமையும். ( கோச்சார) குரு சனி ராகு கேது சஞ்சரிக்கின்ற ஒட்டுமொத்த பலன்களையும் தமிழ் வருட ( சோபகிருது) புத்தாண்டு பலன்களிலே பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்களை அடுத்த பதிவிலே பார்ப்போம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. தினசரி பஞ்சாங்கம் இன்றைய / நாளைய விசேஷம் போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading