TO GET JEWELS HOUSE கையில் காசு தங்க தங்க வைர வெள்ளி நகைகள் நிலைக்க பணம் பெருக செல்வம் சேர… 100% பலன்தரும் எளிய வழிமுறைகள் PART 1

gold plated accessories

வருமானமே இல்லை, வருமானம் வருகிறது ஆனால் கையிலே நிலைப்பதில்லை, சேர்த்து வைக்க முடியவில்லை. சேருகிறது பெரிய தொகையாக ஆவதற்கு முன்னதாகவே ஏதாவது செலவு வந்து விடுகிறது, அசுர வேகத்தில் சேர வேண்டும் என்ற எண்ணும்போது ஆமை வேகத்தில் சேருகிறது… இப்படி பணம் சேர்ப்பதிலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தடைகள் பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? எல்லோராலுமே பொருளை சேர்க்க முடியாதா? செல்வந்தர் ஆக முடியாதா? செல்வந்தரால்தான் மேலும் மேலும் செல்வத்தை சேர்க்க முடியுமா? இதுதான் நம்முடைய விதி தலையெழுத்து என்பதாக நாம் இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விட்டுப் போக வேண்டியதுதானா? ஆடம்பர வசதிகளை அனைவரும் அனுபவிக்க முடியாதா? சொந்த வீடு ஆபரணங்கள் வாகன யோகம் குறைவில்லாத செல்வம் இப்படியான நிலை எல்லோருக்கும் கிடைக்காதா? இப்படி நிறைய பேர் ஆதங்கப்படுகிறார்கள், கேட்கிறார்கள் அதனால் லட்சுமி கடாட்சம் என்று சொல்லப்படக்கூடிய செல்வம் சேரக்கூடிய நிலை யாருக்கு உண்டாகும்? அந்த செல்வ நிலையிலே உயர்வதற்கு செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? எப்படியான வீட்டிலே லட்சுமி வாசம் செய்வாள்? எங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்ய மாட்டாள்? குபேர யோகம் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டியது என்ன? எதனால் எல்லோருடைய இல்லத்திலும் கையிலும் பணப்புழக்கம் இல்லாமல் போகிறது? அப்படி பல புழக்கம் இருக்க வேண்டும் அப்படி வந்த பணம் நிலைக்க வேண்டும் மென்மேலும் சேர வேண்டும் என்றால் அதற்கு செய்ய வேண்டியது என்ன? இப்படியான லட்சுமி கடாட்சம் பற்றிய மிக விசேஷமான அரிய ரகசியங்களை, சூட்சுமங்களை உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கப் போகிறேன். இன்றைக்கு லட்சுமி நம்முடைய வீட்டிற்கு வர நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பார்ப்போம்.

நம்முடைய முன்னோர்கள் ஆண்டுகளை 60 ஆண்டுகள் கொண்ட சுழற்சி ஆகவும் ஓராண்டை இரண்டு அயனங்களாகவும் ஆறு ருதுக்களாகவும் 12 மாதங்களாகவும் ஒரு மாதத்திற்கு இரண்டு பக்ஷம் எனவும் நான்கு வாரங்கள் எனவும் ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் எனவும் ஒரு நாளைக்கு மொத்தம் எட்டு ஜாமங்கள் ஒரு நாளைக்கு பகல் பொழுது நான்கு ஜாமம் இரவு பொழுது நான்கு ஜாமம் எனவும் பிரம்ம முகூர்த்தம் விடியற்காலை காலை முற்பகல் நண்பகல், பிற்பகல் மாலை இரவு அந்தி சந்தி என்பதாக எல்லாம் பிரித்திருக்கிறார்கள். இதிலே ஒரு நாளிலே இவ்வளவு பிரிவுகள் இருக்கிறது அல்லவா? இந்த காலத்திலே எந்த நேரத்தில் லட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவாள்? இதை நாம் தெரிந்து கொண்டால் அந்த நேரத்திலே லட்சுமியை வரவேற்றால் கட்டாயம் நம்முடைய வீட்டிலே லட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி கடாட்சம் இருக்கும். அது எந்த நேரம்?

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறை லட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவதற்கு உண்டான ஒரு வாய்ப்பு நமக்கு ஏற்படுகிறது அதை விளக்கேற்றும் நேரம் என்பதாக சொல்லலாம் இதற்காக கடிகாரத்தை கொண்டு கூட நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை சூரியனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் சூரிய உதயம் சூர்ய அஸ்தமனம் இந்த காலத்தை நம்முடைய முன்னோர்கள் வழிகாட்டிய படி நாம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இந்த காலத்திலே செய்ய வேண்டிய கடமைகளை செய்தால் நமக்கு செல்வம் வரத் தொடங்கும், நிலைக்கும், மென்மேலும் சேரும். இந்த சூரிய உதய சூரிய அஸ்தமன காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்திற்கு முன்னதாக குடும்ப நபர்கள் அனைவரும் தூக்கத்தை விட்டு எழுந்து விட வேண்டும். எழுந்தவுடன் வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வாசலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வாசலிலே தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்னதாகவே ஸ்நானம் செய்துவிட வேண்டும். பிறகு வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். இயன்றால் வீட்டு வாசல் வாசக்கால் அருகில் விளக்கை ஏற்றி வைக்கலாம் பூஜை அறையில் நறுமணம் மிக்க மலர்களை சுவாமி படங்களுக்கு சூடி ( முன்னால் சூடிய மலர்கள் நிர்மால்யம் எல்லாம் எடுத்து அந்த பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து ) ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை மணி அடித்து காண்பித்து கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும்.

அதுபோல மாலை நேரத்திலே சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக அதாவது இருள் வீட்டிற்குள்ளே வருவதற்கு முன்னதாக சூரிய ஒளி இருக்கும்போதே வீடு வாசலை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து வாசலிலே தண்ணீர் தெளித்து கோலமிட்டு பூஜையறையில் விளக்கேற்றி தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி குறிப்பாக குழந்தைகள் இருந்தால் அவர்களை அமர வைத்து அவர்களுக்கு ஸ்லோகங்களை சொல்லிக் கொடுத்து மந்திரங்களை சொல்லி நல்ல கடவுள் பாடல்களை பாடல்களைப் பாடி விளக்கேற்றி நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு ஏதாவது பழமோ உலர் பழங்களோ வெல்லமோ கற்கண்டோ ஏதாவது ஒரு இனிப்போ சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.

அனுதினமும் இப்படி செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு தவறாது இதை கடைபிடிக்கும் போது, இந்த இரண்டு நேரத்திலும் கட்டாயம் லட்சுமி உடைய தொடர்பு நம்முடைய வீட்டிற்கு ஏற்படும். லட்சுமி நம்முடைய வீட்டிற்குள்ளே சந்தோஷமாக உரிமையாக வருவாள் அப்படி வரும்போது நம்முடைய வீட்டிலே லட்சுமி கடாட்சம் இருக்கும். வருமானம் வரத் தொடங்கும், வந்த வருமானம் நிலைக்கும், அது மென்மேலும் சேரும், பெருகும். நாம் செல்வந்தர் ஆகலாம். அனுதினமும் லட்சுமிதேவியை வரவேற்கும் விதமாக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பதிவில் பார்த்தோம். ஆரம்பத்திலே தலைப்பிலே நிறைய கேள்விகளை கேட்டோம் அல்லவா? அதாவது நிறைய அன்பர்கள் கேட்டார்கள் என்று சொன்னோம் அல்லவா? அந்த கேள்விகளுக்கு உண்டான பதில்களையும் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் என்னவெல்லாம் செய்யக்கூடாது ? என்பதையும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பதிவிலே பார்ப்போம். அதையெல்லாம் நீங்கள் பார்த்து தெரிந்து புரிந்து கடைபிடித்து எல்லோரும் வளம் பெற வேண்டும் லட்சுமி கடாட்சம் பெற வேண்டும் குபேர சம்பத்துகளை பெற வேண்டும் 16 விதமான செல்வங்களையும் பெறவேண்டும்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading