இறந்தவர் படங்களை வீட்டில் வைக்கலாமா கூடாதா? வைக்கலாம் எனில் எந்த அறையில்? எத்திசை பார்த்து வைக்க வேண்டும்?

framed picture on white table decorated with green succulents

இறந்து போனவர்களுடைய படங்களை வீட்டில் வைப்பதிலே நிறைய நண்பர்களுக்கு நிறைய சந்தேகங்கள் கேள்விகள் இருக்கிறது. முதலில் இறந்தவர் படங்களை வைத்துக் கொள்ளலாமா கூடாதா? பூஜையறையில் வைக்க வேண்டுமா? தனியாகத்தான் வைக்கணுமா? வீட்டின் எந்த அறையில் வைக்கலாம்? எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்? தினசரி சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி நெய்வேத்தியம் பூஜை செய்வது போல இறந்தவர் படங்களுக்கும் செய்ய வேண்டுமா? அவசியமில்லையா? அமாவாசை திவஷ நாளிலே இந்த படத்தை எடுத்து வைத்து வழிபடனுமா? துர்மரணம் ஏற்பட்டவர்களுடைய படங்களை வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? குடும்ப நபர்கள் தாய், தந்தை பாட்டி தாத்தா இவர்களை தாண்டி இறந்து போன உறவினர்களுடைய படங்களை வீட்டிலே வைத்துக் கொள்ளலாமா? அதுபோல நண்பர்கள் இறந்து போயிருந்தால் அவர்களுடைய படங்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா?

இப்படியாக இறந்தவர் படங்களை வீட்டில் வைத்துக் கொள்வது பற்றி நிறைய பேர் கேட்டு இருக்கிறீர்கள். அதிலே பிரதானமான முதல் கேள்வியாக, இறந்தவர் படங்களை வீட்டிலே வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? இது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இறந்து போனவர்களுடைய படங்களை வீட்டிலே வைக்க கூடாது என்பதாக சிலர் சொல்கிறார்கள் காரணமாக அவர்கள் சொல்வது, இது நடைமுறையில் இல்லை பழக்கத்தில் இல்லை அதாவது தாத்தாவுடைய காலத்தில் தாத்தாவுடைய அப்பா அவருடைய அப்பா தாத்தாவுக்கு தாத்தா காலத்திலே இதுபோல இறந்தவர் படங்கள் வீட்டிலே வைத்தது கிடையாது. அந்த காலங்களிலே பித்ரு கர்மாக்கள் செய்யும் போதும் கூட இவர்களுடைய படங்களை வைத்து எல்லாம் செய்யவில்லை. இன்னமும் சொல்லப் போனால் அந்த காலங்களிலே புகைப்படம் எடுக்கக் கூடிய வசதியே இல்லை. பிறகு புகைப்படக் கருவி (கேமரா) கண்டுபிடிக்கப்பட்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம் அப்படி எடுத்த புகைப்படங்களை அவர்கள் இறந்து போன பிறகும் கூட வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் இது இடையிலே வந்தது இதை நாம் தொடரக்கூடாது செய்யக்கூடாது இது பழக்கத்தில் இல்லை இதனால் கெட்ட விளைவுகள் உண்டாகும்.

இறந்தவர்கள் பித்ருலோகத்திற்கு போகிறார்கள், பித்ருக்களாக ஆகிறார்கள். அப்படி இருக்க வீட்டிலே எந்த பகுதி அவர்களுக்கானது கடவுளுக்கு ஒரு பகுதி இருக்கிறது அதுபோல சமையலுக்கு உண்பதற்கு தூங்குவதற்கு இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பகுதியானது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோல பித்துருக்களுக்கு இறந்து போனவர்களுக்கு என்று ஏதாவது பகுதி இருக்கிறதா? அதனால் எங்கே வைப்பது? இப்படியாக கேட்கிறார்கள். இதற்குண்டான விளக்கத்தை நாம் பார்த்தாலே, இவர்களுடைய கேள்விக்கு பதிலை சொன்னாலே நம்முடைய தலைப்புக்கு கேள்விக்கு தீர்வு கிடைத்துவிடும். அதாவது அந்த காலத்திலே புகைப்படங்கள் எடுக்கக்கூடிய வசதி இல்லை. புகைப்படம் எடுக்கக்கூடிய கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் கூட ராஜாக்கள் இருந்தார்களே மன்னர்கள் நம்மை ஆட்சி செய்தார்களே அவர்களை சித்திரமாக வடித்தார்கள். அவர்களுடைய அந்த சித்திரத்தை அந்த ஓவியத்தை படமாக துணிகளிலே திரைச்சீலைகளிலே வடித்தார்கள். அதை வைத்திருந்தார்கள். இப்போதும் கூட பழங்கால அரண்மனைகளிலே அந்த காலத்து ராஜாக்களுடைய வரையப்பட்ட தீட்டப்பட்ட ஓவியங்களாக இருக்கக்கூடிய படங்களை துணிகளிலே இருக்கக்கூடிய படங்களை நாம் பார்க்க முடியும்.

ஆரம்ப காலத்திலே இப்படி வசதி படைத்தவர்கள் மன்னர்கள் இவர்கள் இதுபோல தனக்கு பிடித்தமானவர்களை தன்னுடைய பெற்றோரை குழந்தைகளை வாழ்க்கைத் துணையின் படங்களை ஓவியரைக் கொண்டு வரைந்து அந்த படத்தை பத்திரப்படுத்தினார்கள். அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களுடைய ஞாபகார்த்தமாக அதை வைத்திருந்தார்கள், பராமரித்தார்கள். அதனால் புகைப்படக் கருவி வருவதற்கு முன்னதாகவே இதுபோல படங்கள் நம்முடைய புழக்கத்தில் இருக்கத்தான் செய்தது. அப்போது குறைவாக இருந்தது, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே அதற்குண்டான வாய்ப்பு இருந்தது. புகைப்பட கருவி வந்த பிறகு கூட ஆரம்ப காலத்திலே அது செல்வந்தர்களுக்கு மட்டுமாக இருந்தது. பிறகு பொது ஜனத்திற்கு அது புழக்கத்திற்கு வந்தது.

அதனால் அந்த காலத்திலே வெகு சிலர் கடை பிடித்ததை இப்போது வெகுஜனம் எல்லோரும் கடைபிடிக்கலாம். புகைப்படங்கள் இருக்கும்போது நமக்கு வேண்டியவர்களுடைய புகைப்படங்களை நாம் அவ்வப்போது எடுத்துப் பார்ப்போம் பத்திரப்படுத்துவோம் வைத்திருப்போம் அவர்கள் இறந்த பிறகும் கூட ஞாபகார்த்தமாக வீட்டிலே வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. மேலும் நம்மோடு வாழ்ந்தவர்கள் நமக்காக வாழ்ந்தவர்கள் நம்மை வாழ வைத்தவர்கள் இப்படிப்பட்டவர்களை இழந்த பிறகும் அவர்கள் இறந்த பிறகும் நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து நாம் பூஜிக்க கொண்டாட வேண்டும். அது நம் கடமை, உரிமை…

நம்முடைய தர்மப்படி இறந்தவர்களை பிதிருக்கள் என பிரதி மாத அமாவாசை, மஹாளய பக்ஷம், அவர்கள் இறந்த திதி, என ஓராண்டிற்கு 96 நாட்கள் விசேஷமாக வழிபடவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இது கடன் என சொல்லப்படுகிறது. வள்ளுவரும் இதை நீத்தார் கடன் என சிறப்பித்து சொல்லி இருக்கிறார்.

மேலும் இப்போது இருக்கக்கூடிய கருவிகள், சாதனங்கள் அறிவியல், மருத்துவ வளர்ச்சி என நமக்கு கிடைத்த நிறைய விஷயங்களை நாம் பயன்படுத்துகிறோம் அந்த காலத்திலே இவையெல்லாம் இல்லை, இது போல எந்த ஒரு கருவிகளையும் சாதனங்களையும் தாத்தாவுடைய தாத்தா பயன்படுத்த வில்லை என்பதற்காக நாம் பயன்படுத்தாமல் இருப்பது கிடையாது. அந்த வகையில் பார்த்தாலும் கூட நாம் இதுபோல இறந்தவர் படங்களை வீட்டிலே வைக்கலாம்.

எங்கே வைக்க வேண்டும்? அவர்களுக்கென்று ஏதாவது வீட்டிலே அரை இருக்கிறதா அக்னி மூலை என்று சொல்கிறோம் அங்கே சமையல் செய்கிறோம் அது போல குபேர மூலை என்று சொல்லி அங்கே பணத்தை வைக்கிறோம் அப்படி இறந்தவர்களுடைய படங்களை எந்த அறையில் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைப்பது? தினசரி பூஜை செய்ய வேண்டுமா? விளக்கேற்ற வேண்டுமா? பித்ரு காரியங்களின் போது அந்த படங்களை எடுத்து வைத்து வழிபட வேண்டுமா? தற்கொலை செய்து கொண்டவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள் இவர்களுடைய படங்களை வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? மேலும் ஆரம்பத்திலே தலைப்பிலே கேட்ட கேள்விகளுக்கு ( பூஜையறையில் வைக்க வேண்டுமா? தனியாகத்தான் வைக்கணுமா? வீட்டின் எந்த அறையில் வைக்கலாம்? எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்? தினசரி சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி நெய்வேத்தியம் பூஜை செய்வது போல இறந்தவர் படங்களுக்கும் செய்ய வேண்டுமா? அவசியமில்லையா? அமாவாசை திவஷ நாளிலே இந்த படத்தை எடுத்து வைத்து வழிபடனுமா? துர்மரணம் ஏற்பட்டவர்களுடைய படங்களை வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? குடும்ப நபர்கள் தாய், தந்தை பாட்டி தாத்தா இவர்களை தாண்டி இறந்து போன உறவினர்களுடைய படங்களை வீட்டிலே வைத்துக் கொள்ளலாமா? அதுபோல நண்பர்கள் இறந்து போயிருந்தால் அவர்களுடைய படங்களை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? ) உண்டான பதில்களை அடுத்த அடுத்த பதிவுகளில் அறிந்து கொள்வோம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading