திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியமா? பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தி வைத்தாலும் கூட நிறைய விவாதங்கள் ரத்து ஆகிறதே ? தம்பதிகள் பிரிகிறார்களே ? புத்திரப்பேரிலே தடை ஏற்படுகிறததே ? இப்படி இருக்க பொருத்தம் பார்த்து செய்தால் என்ன? பார்க்காமல் செய்தால்தான் என்ன? அப்படியே பார்க்க வேண்டுமென்றால் பத்து பொருத்தம் என்று சொல்லக்கூடிய நட்சத்திரம் ராசி பொருத்தம் பார்க்க வேண்டுமா? ஜாதகத்தை வைத்து பார்க்க வேண்டுமா? பெயர் ராசி பெயர் பொருத்தம் பார்க்க வேண்டுமா? மன பொருத்தம் இருக்க வேண்டுமா? இதில் எதை கடைபிடிப்பது? மேலும் இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்தாலும், ஒவ்வொரு ஜோதிடர் ஒவ்வொரு விதமாக பலன் சொல்கிறாரே ? பெண் வீட்டிலே இருக்கு என்றால், பிள்ளை வீட்டிலே இல்லை என்கிறார்களே? இப்படியான குழப்பமான விஷயத்திற்கு நாம் ஏன் மெனக்கெட வேண்டும்? இதில் ஏதாவது பலன் இருக்கிறதா? தாத்தா பாட்டிக்கு பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள்? அவர்கள் நன்றாக தானே வாழ்ந்தார்கள்? அதனால் திருமண பொருத்தம் பற்றிய தெளிவு தேவை….
பொருத்தம் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடங்கி, ஏன் பார்க்க வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும்? எப்படியான பொருத்தம் இருந்தால் தாத்தா பாட்டி காலம் போல 60, 70, 80 ஆம் கல்யாணம் என்பதெல்லாம் செய்து கொண்டு வயோதிக காலம் வரை, வாழ்நாள் காலம் வரை ஒன்றாக இருக்க முடியும்? இப்படியாக திருமண பொருத்தம் பற்றி நிறைய பெற்றோருக்கு, மணவயது வந்தும் கூட சரியான வரன் அமையாமல் திருமணம் தாமதம் ஆகின்ற பிள்ளைகளுக்கு நிறைய கேள்விகள், சந்தேகங்கள் அதைவிட ஆதங்கங்கள் வருத்தம் கவலை இருக்கிறது. அவற்றையெல்லாம் போக்கும் விதமாக எல்லோருக்கும் திருமணம் நடக்க வேண்டும். அப்படி திருமணம் செய்து கொள்ளக் கூடிய தம்பதிகள் இன்புற்று அன்யோன்யமாக வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக ஒன்றாக ஜீவிக்க வேண்டும். அதற்கு கடைபிடிக்க வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? அக்காலத்திலே எப்படி திருமண பந்தத்தை அமைத்தார்கள்? ஒரு வரன் வதுவை எப்படி சேர்த்தார்கள் ? தாத்தா பாட்டி காலத்திலே திருமண பொருத்தம் பற்றிய நிலை எப்படி இருந்தது? கருத்து எப்படி இருந்தது? ஆய்வு எப்படி இருந்தது ?
இப்படியான தகவல்களை எல்லாம் உங்களுக்கு நான் சொல்லவிருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் இதையெல்லாம் படித்து, புரிந்து கடைபிடித்து பயன் பெற வேண்டும். இந்த பதிவிலே தாத்தா பாட்டி காலத்திலே திருமண பொருத்தம் பற்றிய புரிதல் நிலை ஆய்வு எப்படி இருந்தது என்பதை பார்ப்போம்.
ஏன் பொருத்தம் பார்க்க வேண்டும்? இந்த திருமண பொருத்தம் பற்றி மிக அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதிலே கட்டாயம் தெரியாமல் கூட தவறு நேர்ந்து விடக்கூடாது ஏனென்றால் வேறு எந்த ஒரு விஷயமும் தனிநபரை பாதிக்கும் அல்லது அவர் சார்ந்த அவருடைய குடும்பத்தை பாதிக்கும். அதாவது ஒருவருடைய கல்வியோ அந்த கல்வியிலே தேர்ச்சியோ தோல்வியோ குறைவான மதிப்பெண்ணோ வேலை கிடைப்பது கிடைக்காமல் போவதோ தொழிலிலே நஷ்டமோ அல்லது பகையோ வழக்கோ தண்டனையோ களவு கொடுப்பதோ நோய் ஏற்படுவதோ விபத்துகளோ அகால மரணமோ எதுவாக இருந்தாலும் தனிநபரையோ அவர் சார்ந்த குடும்பத்தையோ பாதிக்கும். ஆனால்…. திருமண விஷயத்தை பொறுத்த வரைக்கும் வரன் வது இருவரில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் ஒருவர் தவறாக இருந்தாலும் இவர்கள் நியாயமான அநியாயமான காரணங்களுக்காகவோ , பெரிய சிறிய சண்டைகளுக்காகவோ பிரிந்தாலும் வேறு தவறான முடிவுகள் எடுத்தாலும்……..அது கணவனுடைய பெற்றோர் உடன் பிறந்தவர்கள் குடும்பம் உறவினர்கள், மனைவியுடைய பெற்றோர் உடன் பிறந்தவர்கள் குடும்பம் உறவினர்கள் இவர்களை பாதிக்கிறது. இதையும் தாண்டி…. குழந்தைகள் பெற்றெடுத்திருந்தால் அந்த குழந்தைகளுடைய வாழ்க்கையையே, எதிர்காலத்தையே இந்த கணவன் மனைவியுடைய பிரச்சனைகள் பாதிக்கிறது. அடுத்த சந்ததியை, அடுத்த தலைமுறையை பிரச்சனைக்குள்ளானதாக மாற்றுகிறது. அதனால் திருமண பொருத்தம் பற்றி கட்டாயம் நாம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த விஷயத்திலே நாம் கவனம் எடுத்துக் கொள்ளும் போது கணவன் மனைவி அவர்களுடைய குடும்பம் அவர்களுடைய சந்ததிகள் குழந்தைகள் இவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் கிடைக்கும்.
இப்படியான மிக முக்கியமான திருமண பொருத்தத்தை எப்படி பார்க்க வேண்டும்? எந்த ஒரு புரிதலுக்கும் உதாரணம் துணையாக இருக்கும். அப்படியாக நல்ல விஷயங்களை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை உதாரணங்களோடு சொல்லுவது எம்முடைய பழக்கம். பசுமரத்தாணி போல மனதிலே ஒரு கருத்து பதிய வேண்டும் என்றால் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி நமக்குத் தெரிந்த நல்ல உதாரணங்களோடு அதை சொல்லிவிட்டால் போதுமானது என்பது என்னுடைய குருமார்களுடைய, ஆசிரியர்களுடைய அறிவுரை. அதை இதுநாள் வரை நான் கடைபிடிக்கிறேன். அப்படியாக, மிகப்பெரிய விஷயமான, ஆயிரம் காலத்து பயிரான இந்த திருமண வாழ்க்கை பற்றி திருமண வாழ்க்கைக்கான ஆதாரமா இருக்கின்ற பொருத்தம் பற்றி ஒரு உதாரணத்தை சொல்லும் போது அது உங்களுக்கு மிக எளிதாக புரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் சரியான பொருத்தம் தேர்ந்தெடுப்பது, நல்ல மண வாழ்க்கையை பெறுவது சுலபமாகிவிடும்.
நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் திருமண பொருத்தத்தில் கடைபிடித்த விஷயம் என்னவென்றால், ஏர் உழும்போது அந்த ஏரிலே எருது பூட்டுவார்கள் அப்படி பூட்டும்போது சம உயரம் உள்ள சம பலம் உள்ள இரண்டு எருதுகளை, ஒன்றுபட்டு செயல்படக்கூடிய இரண்டு எருதுகளையே தேர்ந்தெடுப்பார்கள். அப்போது அந்த உழவனால் சரியாக உழ முடியும். அந்த நிலம் பண்படும். அதிலே செய்யப்படக்கூடிய விவசாயம் அமோகமான விளைச்சலை தரும். ஆனால் அந்த ஏரிலே பூட்டப்படக்கூடிய எருதுகள் ஒன்று உயரமாக ஒன்று குட்டையாக இருந்தாலும் ஒன்று பலமானதாக இன்னொன்று பலமற்று சக்தி இல்லாது இருந்தாலும் இரண்டுமே ஒன்றுபட்டு செயல்பட முடியாத பகை குணம் கொண்டதாக இருந்தாலும் எப்படி உழ முடியும்? சரியாக உழாத போது அதில் எப்படி நாற்று நடமுடியும்? எப்படி அது விளைந்து வரும்? எப்படி நமக்கு அறுவடை நல்லபடியாக இருக்கும்? ஆதலால் ஒரு விவசாயிக்கு இரண்டு எருதுகள் ஒரே தன்மையிலே உயரத்திலே பலத்திலே குணத்திலே தேவைப்படுகிறது. இதுதான் திருமண பொருத்தம்.
அதாவது உழுவதற்கு ஜோடி எருதுகள் இருப்பது போல, வண்டி இழுப்பதற்கு ஜோடி எருதுகள் தேவை. மாட்டுவண்டி கட்டைவண்டி என்று நாம் சொல்லுவோமே அதற்கு இரண்டு காளை மாடுகள் உயரத்தில் சரியானதாக அந்த வண்டி இழப்பதற்கு உண்டான திரன் சக்தியில் சரியானதாக பலத்தில் சரியானதாக இருக்க வேண்டும் அதுபோல ஏற்றம் இறைப்பதற்கு எருதுகளை பயன்படுத்துவர். செக்குமாடு என்போமே செக்காட்டுவதற்கு கூட மாடுகள் இருக்கிறது. இப்படி இந்த காளை மாடுகளை கொண்டு நிறைய காரியங்கள் செய்யப்படுகிறது. இன்னென்ன காரியத்திற்கு இப்படிப்பட்ட ஜோடி இருக்க வேண்டும். சேர்ந்து செயலாற்ற கூடியதாக இருக்க வேண்டும். அடங்கும் குணம் கொண்டதாக இருக்க வேண்டும். கட்டுப்பட வேண்டும் இப்படி எல்லாம் எருதுகளை வகைப்படுத்தி, அதற்கேற்றவாறு அதை பழக்கி, பயனடைந்தார்கள். அதுபோல திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இன்னார்க்கு இந்த மாதிரியான வரனை பார்க்க வேண்டும், அப்போதுதான் இந்த ஜோடி சரியாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் கட்டுப்படுவர், ஒத்துப்போவர், விட்டுக் கொடுத்துப் போவர், அடங்கியிருப்பர், அன்பாக இருப்பர், சேர்ந்து இயங்குவர். இல்லையென்றால் சரியாக வராது. முன்னுக்கு பின்னே முரணாக போய்விடும் என்பதாக நம்முடைய முன்னோர்கள் அக்காலத்திலே திருமண வாழ்க்கைக்கான வரன்களை ஜோடி எருதுகளை தேர்ந்தெடுப்பது போல தங்களுடைய அறிவு ஆராய்ச்சி அனுபவத்தால் தேர்ந்தெடுத்தார்கள், அதற்கு ஜோதிட சாஸ்திரம் சாமுதரிகா லட்சணம் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால் தான் பெரும்பாலும் நம்முடைய தாத்தா பாட்டியுடைய ஜோடியானது, வாழ்நாள் இறுதிவரை பிரியாது சேர்ந்து இருந்தது. ஆதர்சன தம்பதிகளாக வாழ்ந்து, 60, 70, 80 ஆம் கல்யாணம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் வரைக்கும் ஒன்றாக ஒற்றுமையாக அன்யோன்யமாக இருந்தார்கள், வாழ்ந்தார்கள். இப்படியாக நம்முடைய முன்னோர் வழியை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு இந்த இணையை எப்படி இணைப்பது? எது பொருந்தும்? எது பொருந்தாது? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி சரியாக ஒத்துப் போகின்ற இரண்டு நபர்களை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து விட்டால் போதுமானது. சரியான பொருத்தத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். திருமண வாழ்க்கை நிறைவாக இருக்கும். மிகச்சரியான இரண்டு நபர்களை அந்த காலத்திலே நம்முடைய முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள் அதனால் தான் தாத்தா பாட்டி காலத்திலே அவர்கள் அன்யோன்யமாக வாழ்நாள் இறுதிவரை ஒன்றாக வாழ்ந்தார்கள் விவாகத்தை ரத்து செய்யவில்லை பிரிந்து போகவில்லை புத்திரப்பேறு சம்பந்தமான தடை தாமதம் மருத்துவமனை தோஷம் பரிகாரம் என்று அவர்கள் போகவில்லை அதனால் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
பொருத்தம் பார்க்கும் போது இரண்டு நபரும் சமமான பலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் ஒரே குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய லக்னம் நட்சத்திரம் ராசி அவர்களுக்கு நடக்கக்கூடிய திசை அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் யோகம் இது சரியாக பொருந்த வேண்டும். (ஒரே நட்சத்திரம் ஒரே ராசி ஒரே திசை என்பதாக இதை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது, ஒத்துப்போகக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்) இப்படி திருமண பொருத்தத்திற்கு உண்டான முக்கியத்துவத்தை, ஒரு ஆரம்பத்தையும் ஏன் பொருத்தம் பார்க்க வேண்டும்? திருமண பொருத்தத்தை எப்படி பார்க்க வேண்டும்? என்பதற்கான ஒரு உதாரணத்தையும்,இப்போது பார்த்தோம். ஆரம்பத்திலேயே கேட்ட நிறைய கேள்விகள் சந்தேகங்களுக்கான விளக்கங்களை, புரிதலை, சரியான வழிகாட்டுதலை அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம்.
லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.
SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .
TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW
YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg
(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )
YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ
( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )
ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க
கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க
தொடர்பு கொள்ளவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply