ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? வெந்நீர் குடிப்பது நல்லதா? ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? பச்சை தண்ணீரே போதுமானதா?எப்போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும்?

clean clear cold drink

தண்ணீர் அருந்துவது சம்பந்தமாக நிறைய சந்தேகங்கள் கேள்விகள் இப்போது நிலவுகிறது. சமூக வலைத்தளங்களிலே எண்ணற்றவர்கள் அவரவருடைய மனம் போன போக்கிலே, அல்லது எங்கேயோ கேட்டதை பார்த்ததை படித்ததை அப்படியே காப்பி பேஸ்ட் ஆக எழுதுகிறார்கள், சொல்கிறார்கள். அதனால் இவற்றில் எது சரி? எதை கடைபிடிப்பது? என்ற ஒரு குழப்பம் நிலவுகிறது. அந்த குழப்பம் பயத்தை தருகிறது. ஒருவேளை நாம் சரியான வழிமுறையை கடைபிடிக்காத போது நோயாளியாக மாறுவோமோ? நம்முடைய ஆரோக்கியம் போய்விடுமோ? நம்முடைய உடல் பலம் போய்விடுமோ? நமக்கு பிரச்சனைகள் உண்டாகுமோ? என்ற கவலை நிறைய பேருக்கு இருக்கிறது. அதை எல்லாம் போக்க வேண்டும், நல்ல தெளிவை உண்டாக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பதிவு.

“கண்ணால் பார்ப்பதும் பொய்’ ‘காதால் கேட்பதும் பொய்’ ‘தீர விசாரிப்பது மெய்” என்று சொல்லி ஒரு வாக்கியம் இருக்கிறது. “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாமும் கூட மேலே கேட்ட கேள்விகளுக்கு உண்டான பதில்களை இங்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். பத்தோடு பதினொன்றாக தானே இதுவும் இருக்கும்? என்ற ஒரு சந்தேகம் படிப்பவர்களுக்கு எழலாம். ஆனால் இந்த இணையதளத்திலே நாம் எழுதக்கூடிய விஷயங்கள் எதுவாக இருந்தாலும், இந்த ஒரு கேள்விக்கு இதுவே பதில். இதை நம்பி தான் ஆக வேண்டும். நம்பினால் தான் சோறு…. என்பதாக எங்கும் சொல்வது இல்லை. கேள்விக்குண்டான விளக்கங்களையும், மிக முக்கியமாக உதாரணங்களையும் தருகிறோம். அவற்றை புரிந்து கொண்டு நீங்களாகவே இதை கடைபிடியுங்கள் என்பதாகத்தான் உங்களுக்கு வழிகாட்டுகிறோம். அப்படித்தான் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை இப்போது சொல்லப் போகிறோம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு லிட்டரில் இருந்து ஐந்து லிட்டர் ஆறு லிட்டர் வரைக்கும் கூட தண்ணீர் அருந்த வேண்டும் என்பதாக ஒவ்வொரு மருத்துவர் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள். ஆனால் இங்கே மருத்துவ ஆலோசனைகளோ மருந்துகளோ உடற்பயிற்சியோ எல்லோருக்கும் பொதுவாக இருப்பது இல்லை. ஒவ்வொருவரும் இங்கே தனித்துவமாக படைக்கப்பட்டு இருக்கிறோம். இதிலே பெரும்பான்மையை எடுத்துக்கொண்டு தான் இங்கு எல்லா விஷயங்களும் பார்க்கப்படுகிறது. இதைக்கூட 80 சதவீதத்திற்கு 20 சதவீதம் என்பதாகத்தான் சொல்கிறார்கள் . எந்த ஒரு பெரிய ஆராய்ச்சியுடைய முடிவும் கூட, எந்த ஒரு புள்ளி விவரமும் கூட 80 சதவீதம் சரியாக இருந்தாலே பெரிய விஷயம். அதுவே நம்பகம் வாய்ந்தது, அதுவே சரியானது என்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்க, நாம் அந்த 80 சதவீதத்தில் வருகிறோமோ? பாக்கி இருக்கக்கூடிய 20 சதவீதத்தில் வருகிறோமா? இது நமக்கு தெரியாதல்லவா…. அதனால் பொதுவான விஷயங்கள் எதையுமே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இங்கு இல்லை.

ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும், காலை எழுந்தவுடன் குமட்டுகிறதோ வாந்தி வருகிறதோ வயிறு கலக்குகிறதோ அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை கட்டாயம் ஒரு பாட்டில் தண்ணீரை குடித்தே ஆக வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும், சாப்பிட்டு அரை மணி கழித்து தான் குடிக்க வேண்டும். எங்கு சென்றாலும் கையிலே தண்ணீர் பாட்டில் இருந்தாக வேண்டும், தாகம் எடுக்கிறதோ இல்லையோ அவ்வப்போது தண்ணீர் அருந்தி கொண்டே இருக்க வேண்டும். இப்படியாகவெல்லாம் நிறைய சொல்லப்படுகிறது. இதில் எந்த ஒன்றையும் நீங்கள் அப்படியே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு எதை கடைபிடிப்பது/ எது சரியானது? எது ஆரோக்கியம் தரக்கூடியது? எது நோயை தவிர்க்கக் கூடியது? எது தீர்க்க ஆயுளை தரக்கூடியது? எது பலத்தை தரக்கூடியது? என்றால்…. இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் கொஞ்சம் பின்னோக்கி போய் தேட வேண்டும்.

நம்முடைய விளக்கங்கள் பெரும்பாலானவை நம்முடைய முன்னோர் வாழ்வியல் முறை சார்ந்ததாக தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் முன்னோர்கள் அந்த காலத்தில் அப்படி இருந்தார்கள், இப்படி இருந்தார்கள் என்று இந்த அறிவியல் காலத்திலே பழைய பஞ்சாங்கமாக இருக்கிறீர்களே? என்றால், கேள்வி எதைப்பற்றியது இந்த டாபிக் எதைப் பற்றியது என்று பார்த்து, ஒருவேளை அது அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தால், இந்த காலத்திலே தயாரிக்கப்பட்ட கணினியோ மடிக்கணினியோ தொலைபேசியோ ஸ்மார்ட் போனோ மின்சாதன பொருளோ வாகனமாகவோ இருந்தால், இதை தயாரித்த அறிவியல் அறிஞர்கள் இதை தயாரித்த பொறியியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம். இதைத்தான் பார்க்க வேண்டும். இதற்கு அந்த காலத்திலே ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என்று தேட வேண்டிய அவசியம் இல்லை. தேடவும் போவதில்லை. ஐபோன் சிறந்ததா ஆண்ட்ராய்டு சிறந்ததா? பெட்ரோல் வாகனம் சிறந்ததா டீசல் வாகனம் சிறந்ததா? என்ற ஒரு கேள்வி வரும்போது அந்த காலத்திலேயே எப்படி இருந்தது என்று எப்படி பார்ப்பது? இதற்கு இந்த காலத்தில்தான் தேடல் இருக்க வேண்டும். பதிலை இங்குதான் எடுக்க வேண்டும். ஆனால் சில விஷயங்களுக்கு, நம்முடைய உடல் ரீதியான மன ரீதியான வாழ்வியல் விஷயங்களிலே அந்த கால நடைமுறைகளை தாராளமாக நாம் முன்மாதிரியாக, உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது….

அந்த காலத்திலே நம்முடைய முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு பலவான்களாக பலசாலிகளாக நல்ல உயரத்தோடு நல்ல எடையோடு நிறைய நடக்கக் கூடியவர்களாக உழைக்கக் கூடியவர்களாக எதிரி நாடுகளிலிருந்து காத்துக் கொள்ள போர் புரியக்கூடியவர்களாக விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ள வேட்டையாடக் கூடியவர்களாக இயற்கை சீற்றங்களில் இருந்து காத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அது போல நாமும் பலமாய் இருப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு துணிவோடு இருப்பதற்கு அவர்கள் கடைபிடித்ததை கடைபிடிக்கலாம்.

அந்த காலத்திலே நம்முடைய முன்னோர்கள் யாரும் கையிலே தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு எங்கும் போகவில்லை வரவில்லை. டப்பர்வேர் பாட்டில் செல்லோ வாட்டர் பாட்டில் அப்போது இல்லை அதனால் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் துணி பைகளை தான் பயன்படுத்தினார்கள் அதில் எப்படி நீர் நிற்கும்? அதனால் அவர்கள் கையிலே தண்ணீர் பாட்டில் இல்லை, வசதி இருக்கிறது நாம் பயன்படுத்துகிறோம் என்பதாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது . அந்த காலத்திலும் கூட தோல் பைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். கண்ணாடி பாட்டில்கள் அதன் பிறகு கொஞ்ச காலம் கழித்து வந்தது. செப்பு பித்தளை பாத்திரங்களை குடங்களை சொம்புகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். மண் பாண்டத்திலேயே குடுவை போல பானை போல டம்ளர் போல எல்லாம் அப்போது பயன்பாட்டிலே வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் நினைத்திருந்தால் அதிலேயே தண்ணீரை கொண்டு போய் இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

வீடுகளிலே பானைகளிலே செப்பு பித்தளை வெங்கல பாத்திரங்களிலே தண்ணீர் இருக்கும் தேவையான போது எடுத்து குடித்தார்கள். அதிகமாக உழைத்தவர்கள் உழைத்து களைத்தவர்கள் நீரை அருந்தி தாகத்தைப் போக்கிக் கொண்டார்கள். பலம் பெற்றார்கள். தண்ணீரிலே எல்லா விதமான மருந்துகளும் இருக்கிறது. தண்ணீர் தான் உலகத்தினுடைய மிகச் சிறந்த அமிர்தம். அப்படியாக அந்த தண்ணீர் மூலமாகவே பசியை கூட தீர்த்துக் கொண்டார்கள். இப்போது கூட நாம் அதிக நேரம் விளையாடும்போது விளையாட்டை முடித்துவிட்டு வந்த உடனே தண்ணீர அருந்துவோம். நமது தாகம் போகும். நமக்கு புத்துணர்ச்சி உண்டாகும். அப்படியாக உழைத்தவர்கள் நீரை அருந்தினார்கள். சாப்பிட்டவுடன் ஜீரணம் ஆவதற்காக தண்ணீரை அருந்தினார்கள். மற்றபடி குறிப்பிட்ட நேரங்களில் தண்ணீரை அருந்திய ஆக வேண்டும், ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அக்காலத்திலே நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடிக்கவில்லை.

அதனால் அவர்களைப் போன்று, எப்போது தேவையோ? எவ்வளவு தேவையோ? அப்போது தேவையான அளவிற்கு தண்ணீரை குடித்தால் போதுமானது. சரி இதை எப்படி தெரிந்து கொள்வது? இதை நம் உடலே (மனமே மூளையே) நமக்கு அறிவுறுத்தும். அது நமக்கு பசியை தெரிய வைக்கிறது, தாகத்தை தெரிய வைக்கிறது, மலஜலம் கழிக்கக்கூடிய உணர்வை ஏற்படுத்துகிறது, தூக்கத்தை ஏற்படுத்துகிறது விழிப்பை ஏற்படுத்துகிறது, அப்படி தாகத்தை எப்போதெல்லாம் நம்முடைய உடல் நமக்கு தெரியப்படுத்துகிறதோ அந்த சமயத்தில் எல்லாம் நாம் தண்ணீரை அருந்தலாம்.

எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்? நாம் ஆகாரம் சாப்பிடும்போது போதும் இந்த ஆகாரம் வயிறு நிறைந்து விட்டது என்பதாக உணர்கிறோமோ, ( எடை போட்டு அளந்து சாப்பிடுவது இல்லையோ அதைக் கூட இப்போது எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதாக எல்லாம் பார்க்கிறார்கள் அது தனியாக ஒரு சப்ஜெக்ட்) அப்படி நாம் தண்ணீரையும் கூட தாகம் எடுக்கும் போது தாக உணர்வு வரும்போது அருந்த வேண்டும் ,அந்த தாகம் தீர்ந்துவிட்டது போதும் என்று தோன்றும்போது நிறுத்த வேண்டும். இதை கடைபிடித்தால் போதுமானது.

அதுபோல ஆகாரத்திற்கு பிறகு, சாப்பிட்ட ஆகாரத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது நமக்கு அனுபவத்திலே தெரியும். நம்முடைய உடல் நமக்கு உணர்த்தும். அந்த அளவிற்கு தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதுதான் தண்ணீர் குடிக்க வேண்டிய முறை. மற்றபடி நாம் அதிகமாக விளையாடி முடித்து அதிகமாக உழைத்து களைத்து இருக்கும் போது நல்ல தாகம் எடுக்கும். அப்போது நிறைய தண்ணீர் குடிக்கலாம். அதுபோல எப்போதெல்லாம் ஏதாவது உணவு சாப்பிடுகிறோமோ, நொறுக்குத்தீனியோ சிற்றுண்டியோ சாப்பிடுகிறோமோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்.

காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதோ இரவு படுக்கப் போகும்போது தண்ணீர் குடிப்பதோ அவருடைய பழக்கத்திற்கு ஏற்றது, வழக்கத்திற்கு ஏற்றது, தேவைக்கு ஏற்றது. தண்ணீர் எப்போது வேண்டும் என்ற உணர்வு வருகிறதோ அப்போது அருந்திவிட வேண்டும். அதிகபட்சம் அந்த தாக உணர்வு ஏற்பட்டதிலிருந்து நா வரண்டு போகிறது அல்லவா? அந்த காலத்திற்குள்ளாக அருந்தி விட வேண்டும். தாக உணர்வு ஏற்பட்ட பிறகு கூட நாம் அந்த உணர்வை கட்டுப்படுத்திக்கொண்டு நா வறட்சி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது தவறு. அது நமக்கு பிரச்சனைகளை நோயை ஏற்படுத்தும். அதுபோல தாகம் எடுக்காமலேயே நாம் அவ்வப்போது தண்ணீரை அருந்திக் கொண்டிருந்தாலும் கூட அது தவறு. அது நமக்கு பிரச்சனைகளை நோயை ஏற்படுத்தும். “மிகிணும் குறையினும் நோய் செய்யும்” என்ற வள்ளுவரின் வாக்கை தண்ணீர் குடிப்பதிலும் கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் உடலுடைய ஜீரண சக்தியையோ அல்லது உடல் இயங்கக்கூடிய தன்மையையோ சீரற்றதாக மாற்றி விடும். சருமவறட்சி, வயிற்றுவலி, சோர்வு, சிறுநீரக கோளாறு, மாரடைப்பு இப்படியானவை ஏற்பட நேரலாம்.

எப்போதும் கையிலே தண்ணீர் பாட்டில் வைத்துக்கொண்டு அவ்வப்போது தண்ணீரை குடித்து, உதடுகளை ஈரப்படுத்திக் கொள்வது தொண்டைய நனைத்துக் கொள்வது இது தவறு. நாளடைவில் இது பழக்கமாக போகலாம். ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற ஒரு கணக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கப் போவது இல்லை. இத்தனை லிட்டர் தண்ணீர் அருந்தியே ஆக வேண்டும் என்ற ஒரு நிலை பொதுவானதாக இல்லை. ஒவ்வொருவருடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு, உடல் நமக்கு அறிவுறுத்தும் படியாக, நா வறட்சி வருவதற்குள்ளாக, தாக உணர்வு ஏற்படக்கூடிய ஆரம்பத்திலேயே தண்ணீர் அருந்தினால் போதுமானது. அருந்தும் போது போதும் என்ற உணர்வு வரும்போது நிறுத்திக் கொண்டால் போதுமானது. இது பொதுவானது. மற்றபடி நோயுற்றவர்களுக்கு, வந்த நோய்க்கு ஏற்றவாறு அவர் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைப்படி கடைபிடிக்கலாம்.

ஐஸ் வாட்டரா ? ஹாட் வாட்டரா? சரும பிரச்சனைகள் வயிற்றுப்புண் இருந்து சூடாக தண்ணீர் அருந்தக் கூடாது பச்சை தண்ணீரை அருந்த வேண்டும், பானையில் வைத்து அருந்தலாம் என்பவர்கள் அதை செய்யலாம். மற்றபடி ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சளி சுவாச பிரச்சனை மூச்சு பிரச்சனை அலர்ஜி தும்மல் இப்படி இருக்கக்கூடியவர்கள் பச்சை தண்ணீரை, பானை தண்ணீரை தவிர்த்து தேவையான அளவிற்கு தண்ணீரை சுட வைத்து கதகதப்பாக வெந்நீராக அருந்தலாம். அதாவது உடல் சூடு வயிற்றுபபுண் சரும வியாதிகள் இருக்கக்கூடியவர்கள் பானைத் தண்ணீரை சில்லென்று அருந்தலாம். சளி வீசிங் ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருக்கக் கூடியவர்கள் வெதுவெதுப்பான வெந்நீரை அருந்தலாம். மற்றபடி ஐஸ் வாட்டர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை தான் உலகத்தில் சிறந்தது. அந்த இயற்கையோடு நாம் இணைந்து வாழ்ந்தாலே ஆரோக்கியமாக நீடித்த ஆயுளோடு இருக்கலாம் . இயற்கையில் நமக்கு குளிர்ந்த தண்ணீர் கிடைக்கிறது. கிணற்றிலிருந்து குளத்திலிருந்து ஆற்றிலிருந்து நாம் தண்ணீரை எடுக்கும்போது அது குளிர்ந்து இருக்கும். பானை மண்ணால் தான் செய்யப்பட்டது, மண்ணிலிருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை மறுபடியும் மண்பாண்டத்திலேயே விட்டுக்கொடுக்கிறோம் சரி . கொஞ்சம் வெதுவெதுப்பாக தண்ணீர் குடிக்க கூடிய ஒரு பழக்கமும் கூட பிற்காலத்தில் தான் வந்தது. ஆரம்பத்தில் நெருப்பே கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு தான் நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகுதான் நாம் உணவு பண்டங்களை நெருப்பிலே இட்டு சமைத்து சாப்பிட பழகினோம். வெந்நீரும் கூட அப்போதுதான் வந்திருக்கும். அதனால் அது பிற்காலத்திலே வந்தது. நோயுற்றவர்களுக்கு இது பொருந்தும். காய்ச்சல் கண்டவர்களுக்கு இது பொருந்தும். மற்றபடி சாதாரணமாக பச்சை தண்ணீர் தான் சிறந்தது. இன்னும் சில்லென்று தேவையென்றால் பானையிலே வைத்து அருந்தலாம். பூமியிலிருந்து எடுத்து அப்படியே அருந்தலாம். இக்காலத்திலே பூமியிலிருந்து எடுக்கப்படக்கூடிய நீரிலே கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு அதனால் வியாதிகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தினால் அதை சூடு படுத்தும் போது அந்த கிருமிகள் இறந்து விடும். சூடு படுத்தி வடிகட்டி பிறகு அதை வெந்நீராக அருந்தலாம்.

மற்றபடி இயற்கையான நல்ல தண்ணீர் பச்சை தண்ணீர், இதுவே சிறந்தது. தாகம் ஏற்படும்போது அருந்த வேண்டும். அதிகபட்சம் நா வறண்டு போவதற்கு உள்ளாக அருந்தி விட வேண்டும். தேவையான அளவிற்கு அருந்த வேண்டும். காலை எழுந்தவுடன் மலம் கழிப்பதற்கு சிரமப்படக் கூடியவர்கள் தேவையான அளவு தண்ணீரை குடித்து கொஞ்சம் காலார நடக்கும்போது மலம் கழிப்பது சுலபமாக இருக்கும். அதுபோல இரவு தாமதமாக சாப்பிடக்கூடியவர்கள் அது ஜீரணமாக வேண்டும், அல்லது வயிற்று வலி சில சமயத்திலே மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையான தண்ணீரை குடித்துவிட்டு அதன் பிறகு படுக்கலாம். என்பன போன்ற விஷயங்களை அவரவருடைய உடல் நிலைக்கு ஏற்ப, எழந்து கொள்ளக்கூடிய நேரம், உறங்கச் செல்லக்கூடிய நேரம், உணவு நேரம், உணவு இதையெல்லாம் பொருத்து கடைப்பிடித்துக் கொள்ளலாம்.

யாருக்கும் எதுவும் இங்கு பொதுவானது கிடையாது. எல்லோரும் ஒரே மாதிரி எதையும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி கடைபிடிக்க வேண்டிய விஷயம் நம்முடைய சட்ட திட்டங்கள் தான். அதுதான் எல்லோருக்கும் பொதுவானது. மற்றபடி நம்முடைய உடல் மொழி, நம்முடைய ஐம்புலன்கள் நமக்கு தெரியப்படுத்தக் கூடிய உணர்வுகள், இதன்படி நாம் தண்ணீர் அருந்துவது மிகச்சிறந்ததாக இருக்கும். அதுவே ஆரோக்கியம் தரும். தீர்க்க ஆயுளை தரும்.

இந்த பதிவிலே ஒரு நாளைக்கு நாம் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்? வெந்நீர் அருந்த வேண்டுமா? ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? பச்சை தண்ணீர் போதுமானதா? எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்? எவ்வளவு குடிக்க வேண்டும்? என்ற நிறைய பேருடைய சந்தேகம் கேள்விக்கு உண்டான விளக்கத்தை, முன்னோருடைய வாழ்வியல் முறையிலிருந்து பார்த்தோம். அதாவது முன்னோர்கள் எப்படி இதை கடைப்பிடித்தார்கள்/ அவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் அருந்தினார்கள்? என்பதைகிக்கொண்டு பார்த்தோம்.

தண்ணீரிலே அனைத்து விதமான மருந்துகளும் இருக்கிறது என்கிறார்களே அப்படி என்ன மருந்துகள் இருக்கிறது? தண்ணீரே உலகத்தின் சிறந்த மருந்து தண்ணீரை அமிர்தம் என்கிறார்களே அதுவெல்லாம் எப்படி? தண்ணீர் எப்படி நமக்கு பலத்தை தரும்? பசிக்கும் போது கூட தண்ணீர் குடித்து பசியை ஆற்றிக் கொள்கிறார்களே தண்ணீர் குடித்தால் பசி அடங்குமா? உடலுக்கு சத்துகள் கிடைக்குமா? முன்பெல்லாம் தண்ணீர் பூமியிலிருந்தது, கீழே இருந்தது. இப்போது வீட்டினுடைய உயரத்திலே ஆகாயத்திலே மேல்நிலை நீர் தேக்க தொட்டி (ஓவர் ஹெட் டேங்க்காக இருக்கிறது) இது சரியா? இப்படியாக இந்த தண்ணீர் அருந்துவது சம்பந்தமாக நிறைய சந்தேகம் கேள்விகள் இருக்கிறது. இப்படியான விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் இதை அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம்.


லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading