கருடனை ஏன் வழிபட வேண்டும்? எந்த நாளில் வழிபட, தரிசிக்க எந்த பலன் கிட்டும்? கருட சேவை கருட தரிசனம் இதனுடைய சிறப்புகள் யாது? பல்லாயிரம் பறவை இனங்கள் இருக்க அதிலே கருடனுக்கு மட்டும் என்ன சிறப்பு?

sea jump peace mexico

நம்முடைய சனாதன தர்மத்திலே எண்ணற்ற தெய்வங்கள் இருக்கிறது அதிலே முழுமுதற் கடவுள் விநாயக பெருமான் போல, மும்மூர்த்திகளாக பிரம்மா விஷ்ணு சிவபெருமான் இருக்கிறார்கள் இதிலே பிரம்மா நம்மை படைத்து விட்டார் சிவபெருமான் நாம் சென்று ஐக்கியமாக கூடியவர். அதாவது ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முடிந்து இறந்துவிட்டால் இன்னார் சிவலோக பதவி அடைந்தார் என்பதாக பத்திரிக்கை அடிப்பார்கள். நாமெல்லாம் ஜீவாத்மா, அந்த பரமாத்மாவிடத்திலே ஒடுங்க போகிறோம் அதனால் சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்பதாக இருக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வாழும் வரை நம்மை காக்கக்கூடிய கடவுளாக விஷ்ணு இருக்கிறார். அனைத்து துன்பங்களிலிருந்தும் தீய சக்திகளில் இருந்தும் எதிர்மறையான விஷயங்களில் இருந்தும் காமம் குரோதம் மதம் மாச்சரியம் இப்படியான விஷயங்களில் இருந்தும் காக்க வேண்டும், அதனால் எப்போதும் நாம் ஸ்ரீமன் நாராயணனை வழிபடுவோம் இவருடைய வாகனமாக கருடன் இருக்கிறார். இந்த கருட வாகனத்திலே விஷ்ணுவாகப் பட்டவர் கருட சேவை சாதிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளி நமக்கு தரிசனம் தருகிறார்.

1) நாம் இருக்கும் இடத்திற்கு சட்டென்று விஷ்ணு வநது நம்மை காப்பதற்கு இந்த கருட வாகனத்திலே ஏறி விரைவாக வருகிறார். அதனால் கருடணை பார்க்கும் போதெல்லாம் அவர் மீது சாட்சாத் ஸ்ரீமன் நாராயணன் எழுந்தருளி இருப்பதாக நினைத்து நாம் வழிபட வேண்டும். 2) கருடணை பார்க்கும் போதெல்லாம், கருடாழ்வாரே என்னுடைய துன்பங்களில் இருந்து காக்க விஷ்ணுவை நீதான் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று அவரிடத்திலே கோரிக்கை வைப்பதாக அவரை வழிபட வேண்டும்.

எப்போதெல்லாம் கருடணை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் வழிபட வேண்டும் இந்த கருட தரிசனம் கிடைப்பதே ஒரு பாக்கியம். புண்ய பலன் இருந்தால் தான் அது கிடைக்கும்.

மிகவும் எளிமையான வரை மிகவும் தியாகம் செய்யக்கூடிய மனோபாவம் கொண்டவரை நாம் கடவுளாக வழிபடுவோம் அப்படித்தான் எளிமையான கடவுளாக விநாயகர் பெருமானை நாம் வழிபடுகிறோம் எல்லோருக்கும் பிடித்த கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார் தியாகம் செய்தவராகவும் இருக்கிறார். எளிமையானவர் என்று சொல்லும்போது ஒரு அருகம் புல்லை எடுத்துப் போட்டாலும் மகிழ்வார் ஒரு எருக்கம் பூவை எடுத்துப் போட்டாலும் ஒரு தும்பை பூவை எடுத்து அவர் மீது போட்டாலும் அர்ச்சித்தாலும் நமக்கு அருளை பொழிவார் ஒரு வெல்ல துண்டை ஒரு கரும்பு துண்டை அவருக்கு நைய்வேத்தியம் செய்தாலும் கூட ஏற்றுக் கொள்வார் சாணத்திலே பிடித்து வைக்கலாம் களிமண்ணிலும் பிடித்து வைக்கலாம் மஞ்சளிலும் பிடித்து வைக்கலாம் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் புரிகிறார். யானைக்கு தந்தம் அழகு என்பார்கள் அந்த தந்தத்தையே உடைத்து அசுரனை அழித்து நம்மை காத்தார். அந்த தந்தத்தை உடைத்து எழுதி பாரதத்தை நமக்கு அருளினார் தன்னுடைய தாய் தந்தையே உலகமாக நினைத்தார். அவர்களுக்கு அனுதினமும் பாதை பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக கையில ஒரு தங்க குடம் வைத்திருக்கிறார். அதுபோல கருடனும் கூட தன்னுடைய தாயை துன்பத்திலிருந்து காக்க, தேவலோகம் சென்று தேவாதி தேவனான தேவேந்திரனிடத்திலே போர் புரிந்து அமிர்தத்தை கொண்டு வந்தார்.

கருடனுடைய தந்தைக்கு இரண்டு மனைவிகள் அதிலே சிற்றன்னை கருடனுடைய தாயாரை கொடுமைப்படுத்துகிறாள் அவரை அடிமையாக வைத்திருக்கிறாள் அந்த அடிமை தளத்திலிருந்து தாயை மீட்க வேண்டும் என்றால் அமிர்தம் வேண்டும் என்று கூறுகிறாள். அந்த சமயத்திலே கருடன், பகீரத பிரயத்தனமான மிகப்பெரிய விஷயமான அந்த அமிர்தத்தை கொண்டு வருவதற்காக தேவலோகம் சென்று போர் புரிந்து கஷ்டப்பட்டு அந்த அமிர்தத்தை கொண்டு வருகிறார் இது ஒரு பெரிய கதை. அதை நாம் சுருக்கமாக இங்கே சொல்லியிருக்கிறோம். அப்படி கையிலே அமிர்தம் இருந்தும் கூட அருந்தாமல் தாயாருடைய வாக்கிற்கு இணங்க சிற்றன்னைக்கு கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறார் அப்படிப்பட்ட ஒரு தியாகி தன்னலம் கருதாதவர் அதுபோல பராக்கிரமசாலியாகவும் இருக்கிறார். தேவாதி தேவரான தேவேந்திரனிடத்திலிருந்து அமிர்தத்தை கொண்டு வந்தவராக இருக்கிறார். அதுபோல நாமும் கருடனைப் போல தன்னலமற்றவராக இருக்க வேண்டும் நம்முடைய தாயாருக்காக தந்தையாருக்காக பிள்ளைகளுக்காக வாழ்க்கை துணைக்காக நம்முடைய குடும்பம் நம் ஊர் நம்முடைய தேசம் நம் மண்ணிற்கு நல்லதை செய்யக்கூடியவர்களாக தியாகிகளாக பராக்கிரமசாலிகளாக இருக்க வேண்டும் என்பதாக கருடனை வழிபடலாம். பலத்தையும் ஒழுக்கத்தையும் தன்னடக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தியாக உள்ளத்தையும் எனக்கும் தா என்பதாக நாம் கருடனை வழிபட வேண்டும். நம்முடைய குடும்ப பிரச்சனைகள் அனைத்தையும் போக்கக்கூடிய சக்தி நமக்கு கிடைக்க வேண்டும் அமிர்தம் போன்ற நல்ல விஷயங்கள் நமக்கு வாய்க்க வேண்டும், நமக்கு வந்து சேர வேண்டும். நமக்கு அதற்கான புத்தி இருந்து உடல் பலம் இருந்து உழைத்து அமிர்தம் போல தேவையான நல்ல விஷயங்கள் கிடைக்க வேண்டும். நன்றாக படித்து தேர்ச்சி பெறுவது மதிப்பெண் பெறுவது உயர்கல்வியிலே விரும்பிய துறை கிடைக்க பெறுவது உத்தியோகம் கிடைப்பது உயர் பதவிகள் கிடைப்பது சுயதொழில் வியாபாரம் பார்ப்பது அதிலே வெற்றி பெறுவது, கலை வித்தை கைத்தொழில் போன்றவற்றிலே சிறந்து விளங்குவது நம்முடைய நன்மை தாண்டி உலக நன்மைக்காக லோக க்ஷேமத்திற்காக நாம் திறமைசாலியாக பலசாலியாக இருக்க வேண்டும் என்பதாக கருடனை பிரார்த்தித்து இவை அனைத்தையும் நாம் பெற வேண்டும், ஒரு சாதனையாளராக நாம் வரவேண்டும் பிறந்த பயனை அடைய வேண்டும் பிறந்த காரணத்தை நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் இதற்காக கருடனை வழிபட வேண்டும்.

3. கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கொண்டு செல்கிறார் அல்லவா? எப்போதும் அவர் கையிலே அமிர்தம் இருக்கிறது. அவர் ஆகாயத்திலே வட்டமிடும்போது அந்த அமிர்தத்தில் இருந்து ஒரு துளியாவது நமக்கு தர வேண்டும் நமக்கு கிடைக்க வேண்டும் நம்மீது விழ வேண்டும் என்று கருட தரிசனம் வழிபாடு செய்யவேண்டும்.

4. கருடன் அமிர்தத்தை கையில் வைத்திருக்கிறார். அதை பார்க்கும் போதே நமக்கு அந்த அமிர்தத்தினுடைய பலன் கிடைக்கிறது. அவர் மூன்று முறை சுற்றி வரக்கூடிய, வட்டமிடக் கூடிய வரைக்கும் நாம் நின்று தரிசித்தாலே அமிர்தத்தை பார்த்த, அமிர்தம் கொண்டிருக்க கூடிய கருடனை தரிசித்த பலன் நமக்கு கிடைக்கும். அமிர்தமே உண்டது போல அமிர்தமே கிடைத்தது போல நமக்கு பாக்கியம் ஏற்படும். இப்படி நாம் ஆகாயத்திலே கருடனை தரிசிக்க கருடனை வழிபட நிறைய காரணங்கள் இருக்கிறது.

இதற்கு நம்முடைய முன்னோர்கள் இன்னமும் நிறை விளக்கங்களை அளித்திருக்கிறார்கள், அதிலிருந்து ஒரு சிலவற்றை உங்களுக்கு சொல்லி இருக்கிறோம். ஏனென்றால் உலகத்திலே எத்தனையோ இலட்சோப லட்ச ஜீவராசிகள் இருக்கிறது. ஓர் அறிவில் இருந்து ஆறறிவு கொண்ட வரைக்கும் இங்கே உயிரினங்கள் இருக்கிறது ஃபுல் பூண்டு பறவை விலங்கு ஊர்வன பரப்பன நடப்பன மனிதர்கள் இப்படியாக எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கிறது. அதிலே பறவை இனங்கள் மட்டுமே லட்சோப லட்சம் இருக்கிறது அப்படி இருக்க அந்த பறவை இனங்களிலே நாம் ஏன் கருடனை வழிபடுகிறோம்? எதற்காக வழிப்பட வேண்டும்? என்பதற்கான காரணங்களை ஓரளவுக்கு சொல்லி இருக்கிறோம். அதாவது பக்ஷிகளுடைய ராஜாவாக பக்ஷிராஜனாக கருடன் இருக்கிறார். ஒவ்வொரு உயிரினங்களிலும் அதற்கு தலைவனாக ஒருவர் கொண்டாடப்படுகிறார். நரர்களுக்கு இந்திரன் நரேந்திரன் தேவர்களுக்கு இந்திரன் தேவேந்திரன் விலங்குகளுக்கு சிங்கராஜா என்று சொல்கிறோம். மரங்களிலே அரசமரம் ராஜாவாக இருக்கிறது மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நமஹ என்று சொல்லி அரச மரத்தை நாம் வழிபடுவோம்.

ஊர்வனவற்றில் ராஜாவாக ஆதிசேஷன் இருக்கிறார். இவர் மீதே பெருமாள் சயனம் கொள்கிறார். .அதுபோல இந்த பறவை இனங்களிலே ராஜாவாக, பக்ஷிராஜாவாக கருடன் திகழ்கிறார் அதனால் அவரை வழிபடுகிறோம் இந்த கருடன் பெருமாளுக்கு வாகனமாக இருக்கிறார். பிரகலாதனை காக்கும் பொருட்டு ஹரி நரசிம்மமாக அவதரித்து ஹிரண்யாட்சனை சம்ஹாரம் செய்யும் போது கருடன் இல்லை.

அந்த ஒரு நரசிம்ம அவதாரத்தை தான் பார்க்கவில்லையே என்பதற்காக, கருடன் வேண்டி பலகாலம் தவமிருந்து நரசிம்ம அவதாரத்தை காணுகிறார். ஒன்றல்ல இரண்டல்ல நவ நரசிம்மர்களை அவர் பார்த்து பேறு பெறுகிறார். அவருடைய தவத்தின் பொருட்டு கிடைத்த வரத்தின் காரணமாக அப்படிப்பட்ட நவ நரசிம்மர் க்ஷேத்திரம் அஹோபிலத்தில் இருக்கிறது. அங்கு சென்று நவ நரசிம்மர்களை நாம் வழிபடலாம். மஹாவிஷ்ணுவிற்கு பிரியமான அவருடைய அருளுக்கு பாத்திரமான சதா சர்வ காலமும் எதிரிலிருந்து தரிசித்துக் கொண்டிருக்க கூடிய கருடனை நாம் வழிபடுகிறோம் அது நமக்கு பலன் தரக்கூடிய வழிபாடு.

ஒரு பெரிய மனிதர் விஐபி விவிஐபி இருக்கிறார் நேரடியாக அவரை தொடர்பு கொள்ள முடியாது அவருடைய பிஏ வோ அவருடைய உறவினரோ அவருடைய வீட்டுப் பிள்ளையோ நண்பரோ ஒருவர் நமக்கு வேண்டியவராக, தெரிந்தவராக இருந்தால் அவரை காணும் போது அவரிடத்தில் எப்படி நடந்து கொள்வோம்? எவ்வளவு வரவேற்போம் உபசரிப்போம் அவர் மூலமாக நமக்கு அந்த பெரிய மனிதருடைய ஒரு தொடர்பு ஏற்படாதா என்பதற்காக…. அதுபோல நாம் கருடனை வழிபடும் போது தரிசிக்கும் போது, விஷ்ணுவுடைய அருளையும் பெற்று தருவார். மேலும் விஷ்ணு என்று சொல்லும் போது அவர் ஸ்ரீநிவாசனாக இருக்கிறார் அவருடைய இருதய கமலத்திலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே நமக்கு லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.

காக்கும் கடவுளான ஹரியுடைய அருளையும் சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடிய லட்சுமி உடைய அருளையும் நாம் பெறுவதற்கு இந்த கருட தரிசனம் நமக்கு துணையாக இருக்கிறது காரணமாய் இருக்கிறது வழியாய் இருக்கிறது அதனால் கருடனை தரிசிக்க வேண்டும் இப்படி கருட வழிபாட்டினுடைய சிறப்பாக மகத்துவங்களாக ஒரு சில விஷயங்களை இங்கே பதிவிட்டோம் நீங்கள் எப்போதெல்லாம் கருடனை பார்த்தாலும் வழிபாட்டை செய்ய வேண்டும்.

என்னென்ன கிழமையிலே கருடனை தரிசிக்கும் போது என்னென்ன பலன் கிட்டும்? அதுபோல பெருமாள் கோவிலில் கருடாழ்வார் இருக்கிறார் அவரை எப்போது எப்படி வழிபட வேண்டும்? இப்படியான தகவல்கள் நிறைய இருக்கிறது. அடுத்த அடுத்த பதிவுகளிலே கருட வழிபாடு கருட தரிசனம் கருட சேவை கருடாழ்வார் பற்றி இன்னும் நிறைய தகவல்களையும் பார்ப்போம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading