வாரத்தின் முக்கியமான நாள் ஞாயிறு விரதங்களில் விசேஷமான ஒரு விரதம் கிருத்திகை விரதம் வருடத்திலே உத்தராயண புண்ணிய காலம் விசேஷமானது அதிலே விவாகம் முகூர்த்தங்கள் செய்ய உகந்ததாக வைகாசி மாதம் இருக்கிறது இந்த வைகாசி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை விரதம் வருகிறது இந்த கிருத்திகை நாளின் மகத்துவத்தையும் இந்நாளிலே வழிபட வேண்டிய முறை பூஜை செய்ய வேண்டிய விதம் விரதம் இருக்க வேண்டிய விதிகள்.. யார் விரதம் இருக்க வேண்டும்? எதற்காக விரதம் இருக்க வேண்டும்? விரதம் வழிபாடு செய்து பெறக்கூடிய பலன்கள் என்னென்ன? இப்படியான தகவல்களை பார்ப்போம்.
கிருத்திகை விரதம் மாதந்தோறும் வரக்கூடிய விரத நாளாக இருக்கிறது. இது நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரக்கூடியது. நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு. அஸ்வினியில் தொடங்கி ரேவதி முடிகிறது. ரேவதி முடிந்த பிறகு மீண்டும் அஸ்வினி தொடங்குகிறது, இந்த சுற்றின் அடிப்படையிலே ஒரு மாதத்திற்கு ஒரு கிருத்திகை வந்துவிடும். ஒரு சில சமயத்தில் மாதத்தினுடைய ஆரம்பத்திலே ஒரு கிருத்திகையும் இறுதியிலே ஒரு கிருத்திகை விரதமும் வரும் இந்த கிருத்திகை விரதம் என்று சொல்லக்கூடியது முருகப்பெருமானுக்கு உகந்ததாக இருக்கின்றது முருகப்பெருமானுக்கு கிருத்திகை பூசம் விசாகம் உத்திரம் இந்த நட்சத்திரங்கள் விசேஷமானதாக இருக்கிறது.
கிருத்திகை கிரகங்களில் சூரியனுடையதாக இருக்கிறது ஒவ்வொரு கிரகத்திற்கும் மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது இதில் சூரியனுடையது கிருத்திகை உத்திரம் உத்திராடம் இந்த சூரியனுடைய நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக கிருத்திகை வருகிறது. மேலும் கிருத்திகை என்று சொல்லக்கூடியது முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாளாக இருக்கின்றது. முருகப்பெருமான் சிவனுடைய அம்சம். (சூரியனுடைய நட்சத்திரமாக கிருத்திகை இருக்கிறது) சூரியனை நாம் விஷ்ணுவாகவும் வழிபடுகிறோம் சிவனாகவும் வழிபடுகிறோம் சூரிய நாராயணா என்றும் சிவசூரியன் என்றும் வழிபடுகிறோம் அதனால் இந்த கிருத்திகை நாளிலே நாம் விரதம் இருக்க, சூரியனுக்கான பரிகாரமாக இந்த விரதம் அமைகிறது. சிவபெருமானுடைய அருளை தரக்கூடியதாக நம்முடைய தோஷங்களை குற்றங்களை பாவங்களை களைய கூடியதாக முருகப்பெருமானுடைய திருவருளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் இருக்கிறது.
மேலும் இந்த கிருத்திகை ஞாயிற்றுக்கிழமையிலே இந்த முறை வருகிறது அதாவது சூரியனுடைய நட்சத்திரமான கிருத்திகை சூரியனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது அதனால் கூடுதல் சிறப்பு. கிருத்திகை பற்றிய சில விஷயங்களை இதுவரை பார்த்தோம்.
இந்த கிருத்திகை விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும்? என்பதை இனி பார்ப்போம். படிக்கக்கூடிய பிள்ளைகள், இது தேர்வு காலமாய் இருக்கிறது தேர்வுக்காக தயாராவது தேர்வு எழுதுவது ஒரு வகுப்பை முடித்து அடுத்த வகுப்பிற்கு மாற்றம் பெறுவது கல்லூரிகளில் சேருவது ஒரு துறையை எடுத்து படிப்பது விரும்பிய துறை கிடைப்பதற்கான முயற்சி புதிய கல்லூரி வெளிநாடு சென்று படிப்பதற்கான காலம் அதனால் பிள்ளைகள் முருகப்பெருமானை இந்த கிருத்திகை நாளில் வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
முருகப்பெருமான் ஞானத்தைத் தரக்கூடியவராக இருக்கிறார் பொதுவாக கல்விக்காக நாம் சரஸ்வதி தேவியை ஹயக்ரீவரை தட்சிணாமூர்த்தியை வழிபடுவோம் விநாயகப்பெருமானை கூட வழிபடுவோம் அதுபோல முருகப் பெருமானை வழிபடவும் கல்வியில் சிறந்து விளங்கலாம். வேதங்கள் அனைத்தையும் கற்று பிரம்மாவிடம் அதுபற்றி கேட்டு அந்த நிகழ்வில் சிவபெருமானுக்கே உபதேசித்து தகப்பன் ஸ்வாமியாக முருகப்பெருமான் திகழ்கிறார் அதனால் கல்வியில் சிறந்து விளங்க முருகப் பெருமானை வழிபடலாம்.
அடுத்து திருமண தடை தாமதம் இருக்கக்கூடியவர்கள் அந்த தோஷம் போக நல்ல வரன் கிடைக்க திருமணம் நடக்க முருகப் பெருமானை வழிபடலாம். தேவர்களை சிறையிலிருந்து மீட்டு, பரிசாக தேவயானியை திருமணம் செய்து கொண்டவர் முருகப்பெருமான் அதுபோல் நமக்கும் கூட ஒரு வரன் கிடைக்க முருகப்பெருமானை வழிபடலாம்.
பிரிந்த தம்பதிகள் இணைய தம்பதிகளிடையே அன்யோன்னியம் ஒற்றுமை உண்டாக புத்திரப்பேறு கிடைக்க கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம் சத்ரு சம்ஹார மூர்த்தியாக முருகப் பெருமான் இருக்கிறார் அதனால் நோய் கடன் பகை இப்படியான பிரச்சனைகள் விலக பயம் விலக துணிவு தன்னம்பிக்கை கிடைக்க முருகப் பெருமானை வழிபடலாம். உத்யோகத்தில் உயர்வு பெற சுயதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற முருகப் பெருமான் வழிபாடு கைகொடுக்கும். இப்படியாக இன்னார் எல்லாம் இந்த பலனை எல்லாம் பெற வேண்டி இந்த கிருத்திகை நாளில் பூஜை வழிபாடுகளை செய்யலாம்.
எப்படி பூஜை செய்யவேண்டும் ? எப்படி விரதம் இருக்க வேண்டும் ? சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து ஸ்நானம் செய்து வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்து ஆலயம் சென்று முருகப் பெருமானை வழிபட வேண்டும் அங்கே முருகப்பெருமானுக்கு விசேஷமான அபிஷேகங்கள் நடந்து கொண்டிருக்கும் அபிஷேகப் பொருட்களைக் கொடுத்து நாம் அந்த அபிஷேகத்தை கண்டு களிக்க வேண்டும் இது கோடை காலமாக இருக்கிறது இப்போது தான் அக்னி நட்சத்திரம் (28.05.2022 ) முடிந்து இருக்கிறது அதனால் விசேஷமாக நிறைய அபிஷேகங்களை முருகப்பெருமானுக்கு செய்யலாம் அலங்காரங்கள் செய்யும் போது நம்மால் இயன்ற புஷ்பங்களை மாலைகளை சாற்றி திவ்யமாக அலங்காரத்தை கண்டு களிக்கலாம். சர்க்கரை பொங்கல் பஞ்சாமிர்தம் தேன் தினை மாவு கிழங்கு வகைகள் பழ வகைகள் கலந்த சாதங்கள் இப்படியானவற்றை மிகவும் சுத்தமாக மடியாக தரமாக தயார் செய்து முருகப் பெருமானுக்கு நிவேதனம் செய்து எல்லோருக்கும் விநியோகிக்கலாம்.
அபிஷேகம் நடந்து முடிந்து நெய்வேத்தியம் ஆனபிறகு நம்முடைய கோத்திரம் நட்சத்திரம் ராசி பெயர் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம் தீபங்களை ஏற்றலாம் இது வழிபாடு செய்யக்கூடிய முறை. விரதம் இருக்கக் கூடியவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டலாம் விரதம் இருக்கக் கூடியது அவரவருடைய சக்தியைப் பொறுத்தது. ஒரு சிலர் ஒரு பொழுது இருப்பார்கள் அன்றைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு மற்ற வேளைகள் சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு சிலர் ஒருவேளை சாதம் சாப்பிட்டு மற்றொரு வேளை சிற்றுண்டி சாப்பிடுவார்கள். ஒரு சிலர் நாள் முழுக்க உபவாசம் இருந்து இரவு பால் பழம் சாப்பிடுவார்கள். இப்படியாக அவருடைய ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு விரதமிருக்கலாம்.
இந்த நாளிலே ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை வருகிறது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சூரிய ஹோரையில் சிவாலயம் சென்று அங்கே சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபடலாம் இரவு 8 மணியில் இருந்து 9 வரை மறுபடி சூரிய ஓரை வரும் அந்த சமயத்தில் சிவாலயத்தில் சிவபெருமானை முருகப்பெருமானை வழிபடலாம்.
உங்களுடைய சுய ஜாதகத்தில் சூரியன் பலமாக இல்லை என்றால் அதாவது சூரியன் ராகுவோடு சேர்ந்து இருந்தால் அல்லது கேது சூரியன் சேர்க்கை சனி சூரியன் சேர்க்கை சனி சூரியன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடியது இப்படியான நிலை இருந்தால், நீங்கள் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் இருந்தால் உங்களுடைய ஜாதகத்தில் சூரியன் துலாத்தில் நீச்சம் பெற்று இருப்பார். சூரிய பலம் பெற இந்த ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய கிருத்திகை விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
அங்காரக தோஷம் என்று சொல்லப்படக்கூடிய செவ்வாய் தோஷம் இருக்கக்கூடியவர்கள் அந்த தோஷம் போக, அந்த தோஷத்தினால் ஏற்பட்ட தடை விலக செவ்வாய் உடைய விசேஷமான பலன்களை பெற கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடலாம். இப்போது சூரியதசை நடக்கக் கூடியவர்கள் செவ்வாய்திசை நடக்கக் கூடியவர்கள் இந்த கிருத்திகை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நல்ல யோகங்கள் கிடைக்கும்.
சூரிய பகவான் காலபுருஷ தத்துவத்தின்படி முதல் ராசியான மேஷத்தில் உச்சம் பெற கூடியவராகவும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் நீச்சம் பெறக்கூடியவராகவும் புத்திர ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார் அப்படிப்பட்ட சூரியன் இப்போது காலபுருஷ தத்துவத்தின்படி ரிஷபத்தில் இருக்கிறார்.
இந்த மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும் செல்வாக்கு கிடைக்கும் பணவரவு திருப்திகரமாக ஏற்படும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும் குறிப்பாக கண் சம்பந்தமான கோளாறுகள் இருந்தால் அது சரியாகும் கண் பரிசோதனை செய்துகொள்ள கண்ணாடி அணிய கண் அறுவை சிகிச்சை செய்து கொள்ள இந்த கிருத்திகை விரதமிருந்து பலனைப் பெறலாம். மேலும் முருகப் பெருமான் நமக்கு குருவாகவும் இருக்கிறார். அவருக்கு உகந்த நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று. விசாகம் குரு உடைய நக்ஷத்திரம் அதனால் நமக்கு நல்ல ஒரு குரு இருந்து வழிகாட்டும் படியாக முருகப்பெருமான் எப்போதும் உள்ளத்திலும் எண்ணத்திலும் உடன் இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும் என்பதாக வேண்டி இந்த கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானுடைய அருளை பெறுவோம்.
தினசரி பஞ்சாங்கம் இன்றைய விசேஷம் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகளை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply