சங்கடஹர சதுர்த்தி

gold and red hindu deity figurine

19.05.2022 வியாழன் இன்றைக்கு சங்கடஹர சதுர்த்தி மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம் இன்றைய நாளிலே விரதமிருந்து மாலை நேரத்திலே விநாயகப் பெருமானுக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் அனைத்தையும் செய்து சந்திரனையும் தரிசனம் செய்யும்போது எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் அவையெல்லாம் நிவர்த்தியாகும் காரிய ஜெயம் உண்டாகும்.

காரியத்தடை விலகுவது போல மனதிலே பயம் குழப்பம் கவலை சஞ்சலம் இருந்தால் அதுவும் சரியாகும் சந்திரனுக்கு உண்டான தோஷ பரிகாரமாக இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை விநாயகப் பெருமான் அருளினார், சந்திரன் மனோகாரகன் நம்முடைய மனநலம் நன்றாக இருக்கும் மேலும் விநாயகப்பெருமான் அனுக்கிரகம் இருக்கும்போது நமக்கு நல்ல ஞானம் உண்டாகும்.

சித்தி புத்தி விநாயகராக இருக்கிறார் அதனால் நல்ல ஒரு காரியசித்தி அஷ்டமாசித்தி போன்ற சித்திகள் நமக்கு கிடைக்க புத்திசாலித்தனமாக நாம் செயல்பட்டு வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொள்ள விநாயகப் பெருமானை வழிபடலாம்.

இன்று வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியாக இருக்கிறது விநாயகப் பெருமானை நாம் சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபடும்போது அவருக்கு சர்க்கரை பொங்கல் சுண்டல் நைவேத்தியம் செய்கிறோம் வியாழக்கிழமை என்பதனால் இன்றைக்கு மூக்கடலை சுண்டல் செய்து விநாயகருக்கு படைத்து எல்லோருக்கும் வினியோகிக்க குரு பலமும் உண்டாகும்.

இன்றைக்கு பூராட நட்சத்திரம், பூராட நட்சத்திரம் சுக்கிரனுடைய ஒரு நட்சத்திரம் அதனால் திருமண தடை இருந்தாலோ சுய ஜாதகத்தில் சுக்கிர பலம் இன்றி திருமணத்தடை புத்திர பேறு அடைவதில் பிரச்சனை வாகனம் அடிக்கடி பழுதாகுதல் திருமணமான தம்பதிகளுக்கு ஒற்றுமையின்மை பொதுவாக மனதில் மகிழ்ச்சி இல்லாத ஒரு நிலை இதுவெல்லாம் சரியாகும்.

இன்றைய நாளிலே விநாயகப் பெருமானை வழிபடலாம் அப்படி வழிபட்டு தடைகள் அனைத்தும் நீங்கி தாராளமான நற்பலன்கள் கிடைக்கப் பெறுவோம்.

தினசரி ராசிபலன் நக்ஷத்திர பலன் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading