பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை ✿ கல்வியில் சிலருக்கு நாட்டம் இருக்கும் சிலருக்கு இருக்காது சிலர் உத்தியோகம் பார்ப்பார்கள் சிலர் சுய தொழில் புரிவார்கள் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும் மற்றவருக்கு திரைப்படம் பார்ப்பது பிடிக்கும் வேறு சிலருக்கு ஊர் சுற்றுவது சுற்றுலா செல்வது தேச சஞ்சாரம் போன்ற விஷயங்கள் பிடித்தமானதாக இருக்கும் சிலருக்கு நண்பர்களோடு சேர்ந்து இருக்க பிடிக்கும் சிலருக்கு தனிமை பிடிக்கும் உடற்பயிற்சி செய்வதிலேயே சிலருக்கு விருப்பம் இருக்கும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது சிலருக்கு பிடித்ததாயிருக்கும் 🌸
இப்படி இவ்வுலகத்திலே ஒருவருக்கு பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஒருவருக்கு தேவைப்படக்கூடியது மற்றவருக்கு வேண்டாததாக இருக்கலாம் ஆனால் இந்த பாரில் உள்ள அனைவருக்கும் பிடித்த ஒன்று தேவையான ஒன்று அத்தியாவசியமான ஒன்று பணம் 🌷 அந்த பணம் இருந்தால்தான் இந்த கலியுகத்திலே எதுவும் கிடைக்கும் எதுவும் நடக்கும் எதுவும் சாத்தியம் பணம் இல்லையேல் வாழ்வதே இயலாத காரியமாகி விடுகிறது பிறப்பிலிருந்து வாழ்க்கை முடியும் வரை பணம் தேவைப்படுகிறது அதனால் எல்லோரும் எப்போதும் பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம் 💮
அப்படி பாடுபட்டு பொருளீட்டி தன்னுடைய கடமைகளை செய்து குடும்ப தேவைகளை குடும்ப நபர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்து பிள்ளைகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து மருத்துவ செலவுகள் செய்து அந்த பணம் கரைந்து விடுகிறது பணம் வருவதற்கு முன்னமேயே செலவு தயாராக இருக்கிறது காசு தபாலிலே வந்தால் செலவு த ந்தியிலே வரும் என்பார்கள் இப்படியாக எல்லோருமே உழைத்தாலும் பாடுபட்டாலும் பொருளை ஈட்டினாலும் கூட 🏵️. செல்வந்தர் ஆவது சிலர்தான் ஆனால்…. செல்வந்தர் ஆக வேண்டும் கோடீஸ்வரனாக வேண்டும் 💲 குபேரன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.
சிலர் மட்டும் ஏன் செல்வந்தர் ஆகிறார்கள் 💸 பலரால் ஏன் ஆக முடியவில்லை ? உங்களால் செல்வந்தர் ஆக முடியுமா ? செல்வம் சேர்க்க முடியுமா 💳 கோடீஸ்வரனாக குபேரனாக நீங்கள் ஆக முடியுமா 💵 இதை எப்படி தெரிந்து கொள்வது ? ஜோதிட சாஸ்திரம் தெளிவாக நமக்கு வழிகாட்டுகிறது.
இந்த பூமியிலே ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தின் கோள்சார நிலை அந்த குழந்தையின் ஜனன ஜாதகமாக அமைகிறது அந்த ஜாதகம் நவகிரகங்களை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது 12 வீடுகளை பிரதானமாக கொண்டுள்ளது இவற்றின் கூட்டணி தான் ஒருவருடைய வாழ்க்கையிலே அவர் பொருள் சேர்ப்பாரா? மாட்டாரா ஒருவருக்கு கையில் காசு தங்குமா ? சொந்த வீடு அமையுமா ? அமையாதா வாகனயோகம் ஆடம்பர வசதிகள் கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தீர்மானிக்கிறது.
இந்த 12 வீடுகளில் ஒருவருடைய பிறவி ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டாம் இடம் 5-ஆம் இடம் 8ஆம் இடம் பதினோராம் இடம் இவைகளே பணத்தை தரக்கூடியதாக பணம் பற்றி சொல்லக் கூடியதாக இருக்கிறது. இந்த வீடுகளை பணபர ஸ்தானம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதனால் உங்களுடைய ஜாதகத்திலே லக்னத்திலிருந்து 2 5 8 11-ஆம் இடங்கள் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து அதற்கு ஏற்றவாறு பொருளை 💴 ஈட்டினால் சேமித்தால் செல்வந்தர் ஆக முடியும் 💰 செல்வம் உங்களுடைய கையில் தங்கும் 💰
அடுத்து நவகிரகங்கள், இந்த 2 5 8 11 ஆம் இடங்களுக்கு அதிபதிகளாக வரக்கூடிய கிரகங்கள் எவை ? அந்த கிரகங்கள் எப்படி இருக்கிறது ? பலமாக இருக்கிறதா பலவீனமடைந்துள்ளதா யோகத்தை தரக்கூடிய அளவிற்கு விசேஷ பலம் பெற்றுள்ளதா அந்த கிரகங்கள் உடைய தசைகள் நடந்து கொண்டிருக்கிறதா முடிந்துவிட்டதா இனி வரப்போகிறதா? மேலும் இந்த 2 5 8 11 ஆம் இடங்களிலே இருக்கக் கூடிய கிரகங்கள் எவை ? இந்த வீடுகளை பார்க்கக்கூடிய கிரகங்கள் எவை ? இப்படியான விஷயங்களை உங்கள் ஜாதகப்படி நீங்கள் தெரிந்து கொண்டு அதன்படி நீங்கள் பொருளீட்டுவது அந்த பொருளை சேமிப்பது சேமித்த தொகையை முதலீடு செய்வது சொத்துக்கள் வாங்குவது இப்படியானவற்றை செய்ய , நீங்கள் செல்வந்தராக ஆகலாம்💲
பணபர ஸ்னங்கள் சாதகமாய் இருந்தால் அந்த ஸ்தான அதிபதிகள் விசேஷ பலம் பெற்றிருந்தால் கோடீஸ்வரன் ஆவது சுலபம் 🏧 மத்திம பலன் பெற்று சராசரியாக இருந்தால் கொஞ்சம் கஷ்டப்பட்டு முயற்சி செய்தால் நல்ல நிலையை அடையலாம் 💰கிரகநிலை மிகவும் மோசமாக இருந்தாலும் தகுந்த வழிமுறைகளை கையாண்டு அந்த கிரகங்களை பலப்படுத்தி பலனை பெற முடியும் $
மேலும் உங்களுடைய ஜாதகப்படி நீங்கள் எந்த வழியிலே செல்வத்தை சேர்த்தால் அது சேரும் என்ற ஒரு சூட்சமம் இருக்கிறது அதாவது நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவேண்டுமா? பணமாக சேர்க்க வேண்டுமா வெள்ளியாக 💵 தங்கமாக 💰வைரமாக 💸 சேர்க்க வேண்டுமா மனை வாங்க வேண்டுமா இதில் எது கைகொடுக்கும் என்பதை இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்
அதையும் படித்து இப்போது சொன்ன இந்த பணபரம் சம்பந்தமாகவும் நீங்கள் ஜோதிட ரீதியாக சரியாக அறிந்து கொண்டு பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம். ஜோதிடரீதியாக உங்களுக்கு உதவ அடியேன் தயாராக இருக்கிறேன்.
இதற்கு முன்னே நீங்கள் எவ்வளவு பாடுபட்டும் கூட பொருளை சேமிக்க முடியவில்லை என்றால் இப்போது சொன்ன இந்த வழி முறையை கையாண்டால் கட்டாயமாக உங்களால் பொருளாதார உயர்வு மேம்பாட்டை அடைய முடியும் இது உறுதி இப்படியான வழியை காண்பிப்பது ஜோதிட சாஸ்திரம். ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு அருளியவர்கள் ரிஷிகள் முனிவர்கள் அதனால் அவர்களுடைய வழியானது வாக்கானது பொய்யாகாது நம்பிக்கையோடு நீங்கள் உழையுங்கள் சேமியுங்கள் செல்வந்தர் ஆவீர்கள். நல்வாழ்த்துக்கள் 💰💰💰💰💰💰💰💰💰
மேலும் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றையும் இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply