முன்னொரு காலத்திலே அழகான ஒரு கிராமத்தில் கந்தன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனுடைய பக்கத்து வீட்டிலே நந்தன் என்பவன் இருந்தான் இந்த கந்தனுக்கு கடவுள் பக்தி அதிகம் எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக்கொண்டு இருப்பான் காலை எழும் போதும் குளிக்கும் போதும் சாப்பிடும் முன்னும் ஒரு பணியை தொடங்கும் போதும் படுக்கப்போகும் போதும் முருகா முருகா என்று சொல்லக்கூடியது அவனுடைய வழக்கமாயிருந்தது தினசரி கோவிலுக்கு சென்று வருவான் விரதங்கள் இருப்பது போன்ற விஷயங்களை செய்து வருவான் பக்கத்து வீட்டில் இருக்கக்கூடிய நந்தனுக்கு கடவுள் பக்தி என்பது பெயருக்கு கூட இல்லை கந்தனை எப்போதும் கேலி செய்யக்கூடியதை நந்தன் வழக்கமாகக் கொண்டிருந்தான் ஒவ்வொரு கடவுளைப் பற்றியும் அவருடைய புராணத்தை பற்றியும் அவதூறு பேசுவது மட்டுமல்லாது கோவில் செல்லக் கூடியவர் வழிபாடு செய்யக்கூடியவர்களையும் கூட கிண்டலாக பேசுவது எள்ளி நகையாடுவது என்பது அவனுடைய வாடிக்கையாக இருந்தது.
கந்தன் பொறுமையாக இருந்து நந்தன் கேட்கக்கூடிய கடவுள் பற்றிய ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்கள் பற்றிய ஒவ்வொரு கிண்டலுக்கும் விளக்கம் அளித்துக் கொண்டு இருப்பான் ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளாது அனைத்தையும் விதண்டாவாதம் செய்து வந்தான் நான்தான் நாளடைவில் கந்தனுக்கு இது ஒரு பிரச்சினையாகவே மாறிவிட்டது ஒவ்வொருமுறை நந்தன் இதுபோல கடவுளை கேலி செய்யும்போதும் கந்தனுக்கு கோபம் வருவது ஆத்திரம் வருவது நந்தன் மீது பகை அதிகமாவது நிம்மதியாக பூஜை வழிபாடு செய்ய முடியாமல் போவது தன்னுடைய வேலைகளில் கூட கவனம் வைக்க முடியாது போனது உடல் ஆரோக்கியம் கெடக்கூடிய அளவிற்கு பாதிக்கப்பட்டு விட்டான் கந்தன்
அச்சமயத்தில் தான் அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார் அந்த முனிவரிடத்திலே அந்த ஊரில் இருக்கக்கூடிய நபர்கள் அனைவரும் சென்று தங்களுடைய பிரச்சனைகளை கூறி தீர்வுகளை தெரிந்து வருவது அவரது ஆசி பெறுவது அவரை உபசரிப்பது அவருக்கு சேவைகள் செய்வது இப்படி ஆக இருந்தார்கள் கந்தனும் அந்த முனிவரிடத்திலே சென்று ஆசி பெற்று அவருக்கு தொண்டுகள் செய்து வந்தான் அப்படி செய்து கொண்டிருக்கும்போது இந்த நந்தனை எப்படியாவது இந்த முனிவரிடத்திலே அழைத்துவந்து இவருடைய உபதேசங்களைக் கேட்க வைத்து கடவுள் மறுப்பை கைவிடச் செய்து கடவுள் நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும் என்று ஒரு ஆவல் கந்தனுக்கு ஏற்பட்டது அதனால் முனிவரிடம் இது போல தனக்கு ஒரு நண்பன் இருக்கிறான் அவன் இப்படியாக நடந்து கொள்கிறான் அவனை மாற்றவேண்டும் திருத்த வேண்டும் என்பதாக கந்தன் முறையிட்டான் அனைத்தையும் கேட்ட அந்த முனிவர் சிரித்துவிட்டு கந்தனைப் பார்த்து பேச தொடங்கினார்.
கந்தா உன்னையும் உன்னுடைய நண்பனையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது உன்னைவிட அவனுக்கே சிறந்த பக்தி இருக்கிறது அவனே சிறந்த ஒரு ஆஸ்திகன் பக்திமான் அவன் அளவிற்கு நீ இன்னும் பக்திமார்க்கத்தில் ஈடுபட வில்லை உன்னிடத்திலே கடவுள் பற்றிய நிறைய சந்தேகம் இருக்கிறது கடவுள்மீது நம்பிக்கை உனக்கு குறைவாக இருக்கிறது என்று முனிவர் சொன்னார் கந்தன் திடுக்கிட்டுவிட்டான் அதிர்ச்சி அடைந்துவிட்டான் ஒருவேளை தான் சொல்லியதை முனிவர் சரியாக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது அவர் சொல்லுவது நமக்கு சரியாக புரியவில்லையா? என்பதாக குழப்பம் ஏற்பட்டுவிட்டது இதை புரிந்து கொண்ட முனிவர் நீ சொல்லியதும் எனக்கு புரிந்தது நான் சொல்லியதுவும் உனக்கு சரியாகத் தான் புரிந்தது ஆனால் உனக்கு உண்மை தான் புரியவில்லை என்றார்
யார் உண்மையிலேயே பக்திமான்? கந்தனா நந்தனா முனிவர் என்ன சொல்லப் போகிறார்?
தொடரும்..

Leave a Reply