மாத்திரை சாப்பிட பிடிக்காது ஊசின்னா பயம் டாக்டர் கிட்ட போகவே கூடாது ஹாஸ்பிடல் பக்கம் மழைக்கு கூட ஒதுங்க கூடாது இப்படி சொல்பவர்களா நீங்கள்? உங்களுக்காகதான் இந்த பதிவு. படித்து நோயற்ற வாழ்வை சாத்தியமாக்குங்கள் .
உலகத்தில் எல்லோருக்கும் தேவைப்படக் கூடியது எது? எல்லோரும் விரும்புவது எது ? எது இல்லை என்றால் நிம்மதி போய்விடும் ? பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்? இவ்வுலகில் வாழவே முடியாது? இந்த கேள்விக்கு பெரும்பாலானவர்கள் பணம் பொருள் சொத்து மனை வீடு வண்டி வாகனம் நகை ஆபரணங்கள் சேமிப்பு செல்வம் இப்படியான பதிலைத்தான் சொல்வார்கள். ஆனால் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” இதுவே உண்மையான செல்வம் என்று முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.
அப்படி நோய் இன்றி நம்மால் வாழ முடியுமா? வியாதியே வரக்கூடாது என்றால் அது சாத்தியமா? அதுவும் இப்போது இருக்கக்கூடிய காலகட்டத்திலே இந்த அவசர யுகத்திலே நாம் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியமா? உடம்பு என்று இருந்தால் வியாதி என்பது வரத்தான் செய்யும். வைத்தியம் பார்த்து அதை சரி செய்து கொள்ள வேண்டும் நோயே இல்லாதவர் என்று யாரும் இருக்க முடியாது வியாதி/ நோய் வந்தே தீரும். மூக்கு இருக்கும் வரை ஜலதோஷம் இருக்கத்தான் செய்யும். இப்படி எல்லாம் நினைத்து நாம் ஆறுதல் அடைவோம் நம்மை தேற்றிக் கொள்வோம் ஆனால் வியாதி இல்லாமல் நோய் ஏற்படாமல் ஆரோக்கியமாக நிம்மதியாக நாம் வாழ்வதற்கு வழி இருக்கிறது. அது என்ன?
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக வியாதி ஏன் வருகிறது? நோய் ஏற்பட காரணம் என்ன? என்பதை பார்த்துவிடுவோம். பிறவி மூலமாக தாய் தந்தை நம்முடைய முன்னோர் இந்த வகையில் மரபணு டிஎன்ஏ ஜீன் என்பதனால் நோய் ஏற்படுகிறது இது முதல் காரணம். அடுத்து பிறந்தவுடன் முதன் முதலாக தாய்ப்பால் புகட்டப்படுகிறது அதிலிருந்து தொடங்கி நாம் நம்முடைய வாழ்நாள் முழுக்க அனுதினமும் ஆகாரம் எடுத்துக் கொள்கிறோம் இப்படியான உணவின் மூலமாக வியாதி ஏற்படுகிறது நாம் சாப்பிடக்கூடிய பதார்த்தங்கள் தானியங்கள் காய்கறி பழங்கள் சிற்றுண்டி சாப்பாடு நொறுக்குத்தீனி இப்படியானவற்றின் மூலமாக நோய் ஏற்படுகிறது இது இரண்டாவது. உடற்பயிற்சி இன்மை உடல் உழைப்பின்மை அதனால் நோய் ஏற்படுகிறது அதாவது நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் எப்படி கொஞ்ச நாள் பயன்படுத்தாமல் இருந்தால் பழுதடைந்து விடுகிறதோ இரும்பு எப்படி துருப்பிடிக்கிறதோ அது போல நம்முடைய உடல் உறுப்புகளை நாம் மிகச் சரியான முறையிலே இயக்கா விட்டால் அதன் மூலமாக நமக்கு நோய் ஏற்படுகிறது. இது மூன்றாவது.
அடுத்தது தீய பழக்கங்கள். தீய பழக்கங்கள் என்று சொல்லக்கூடியதன் மூலமாக நம்முடைய ஆரோக்கியம் கெடுகிறது. நமக்கு நோய் உண்டாகிறது. உடல் மட்டுமல்ல மனதும் சேர்ந்து கெடுகிறது. அந்த தீய பழக்கம் நம்மை மட்டும் கெடுக்கவில்லை, நம்மை சார்ந்தவர்கள் நம்மை சுற்றி இருக்கக் கூடியவர்கள் குடும்ப நபர்கள் இவர்களையும் கெடுக்கிறது, இவர்களுக்கு கேடு விளைவிக்கிறது. உதாரணமாக பொது இடங்களில் ஒருவர் புகை பிடிக்கிறார் என்றால் அவர் பீடியோ சிகரெட்டோ சுருட்டோ ஏதோ ஒன்றை பிடிக்கிறார் அதை இழுத்து வெளியே விடும் போது அந்த புகை அந்த சாலையில் செல்வோர் போவோர் வருவோர் அவர் அருகிலேயே இருப்போர் அனைவரும் சுவாசிக்க கூடியதாய் இருக்கிறது அதனால் புகை பிடிக்காதவர் கூட இந்த புகையினால் பாதிக்கப்படுகிறார்கள்
அதன் பிறகு சரியான தூக்கமின்மை. பொதுவாக 6 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம். இது குறைந்தால் முதலில் உடல் கேட்டு பிறகு மூளை மனம் கெடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அடுத்து, உழைப்பு பயிற்சி உடலுக்கு தேவைதான் அதுபோல ஓய்வும் தேவை, வேலை செய்ய வேண்டியதுதான் ஆனால் அதிக வேலை பளு, கடினமான ஓய்வில்லாத, சத்தான உணவில்லாத உழைப்பு இதுவெல்லாம் பலகீனம் நோய் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நோய் வருவதற்கான காரணங்கள் சிலவற்றை பார்த்தோம். சரி, இந்த அனைத்து வகை காரணிகளையும் சரி செய்துவிட்டால் நாம் நோய் ஏற்படாமல் இருக்கலாம், இருக்க முடியும்.
இதைத் தாண்டி நோய் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது. அதை சொல்லி, நோயில்லாமல் வாழ்வதற்கான வழி வகையை உங்களுக்கு தெரிவிக்க போகிறோம். மேலே சொன்ன காரணிகளால் நோய் ஏற்படுவதை தவிர்க்க கூடியதாக கூட இப்போது சொல்லக்கூடிய வழிமுறை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். அது என்ன? நம்முடைய எண்ணம் சிந்தனை மனம் மூளை அறிவு இது நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இதை சரி செய்துவிட்டால் நோய் இல்லாமல் நூறாண்டு காலம் ஆரோக்கியமாக நிம்மதியாக ஆனந்தமாக நாம் வாழ முடியும். சரி, நம்முடைய எண்ணம் சிந்தனை அறிவு இது எப்படி நோயை ஏற்படுத்துகிறது என்றால்…. முதலில் நோய் வியாதி பற்றிய பயம் கவலை அது நமக்கு நோயை ஏற்படுத்தும். எப்போதும் வியாதியை பற்றியே நோய் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது, நோயை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்று. அதனால் முதலில் நோயைப் பற்றிய பயம் இல்லாமல் இருக்க வேண்டும். வியாதி பற்றி கவலைப் படக்கூடாது. நமக்கு வந்துவிடுமோ என்பதாக என்ன கூடாது.
இதைவிட முக்கியமானது நோய் ஏற்படுவதற்குண்டான முதன்மையான மிக முக்கியமான காரணி, எதிர்மறை எண்ணங்கள் தீய எண்ணங்கள் இதுதான். இதில் இரண்டு வகை இருக்கிறது. நம்மைப்பற்றி நாம் எதிர்மறையாக நினைப்பது நமக்கு உடல் பலகீனம் வந்துவிடுமோ? வியாதி வந்துவிடுமோ? இப்படியாக. அதுபோல பிறர் நமக்கு ஏதாவது செய்து விடுவார்களோ? செய்து விட்டார்களோ? ஏவல் பில்லி சூனியம் எதையாவது நம்மீது நம் வீட்டினமீது ஏவி விட்டார்களோ? என்பதாக நினைப்பது நம்புவது பயப்படுவது இதனால் நோய் ஏற்படும்.
இதையும் தாண்டி இன்னொரு முக்கியமான காரணி இருக்கிறது. நம் கோபம் நமக்கு நோயை ஏற்படுத்துகிறது. அந்த கோபம், ஆத்திரம் படபடப்பு கைகால் நடுக்கம் கண்கள் சிவப்பது வெறிபிடித்தவர் போல் ஆவது இந்த அளவிற்கு செல்லும்போது அந்த கோபம் நியாயமானதாக இருந்தாலும் கூட அதனால் நாம் பாதிப்படைவோம். நாம் கோபப்பட்டு பிறரை தண்டிக்கும் போது கண்டிக்கும் போது யேசும்போது திட்டும்போது அதிகமாக பாதிப்பு நமக்கே ஏற்படுகிறது. பிறரை நாம் ஏதாவது திட்ட வேண்டும் என்று சொன்னால் முதலிலே அதை நாம் மூளையிலே கொண்டு வருகிறோம் சிந்திக்கிறோம், பிறகு அதை நாம் வாய் மூலமாக வெளிப்படுத்துகிறோம், அதாவது சொல்கிறோம் பேசுகிறோம், அப்போது அதை நாம் காதால் கேட்கிறோம்.
எதிராளி ஒரு முறைதான் பாதிக்கப்படுகிறார், நாம் அவரை திட்டும்போது ஒருமுறை அதை கேட்கிறார். ஆனால் நாம் அதை சிந்தித்தும் பேசியும் கேட்டும் மூன்று முறை நமக்கு பாதிப்பு வருகிறது. அதாவது எதிரொலி என்று சொல்லக்கூடிய ஒன்று நமக்குத் தெரியும் நாம் சொல்லக்கூடிய ஒன்று மீண்டும் மீண்டும் மீண்டும் திரும்ப எதிரொலிப்பது மலை மீது உயரமான இடங்களில் இதை நாம் கண்டிருக்கிறோம் கேட்டிருக்கிறோம் அப்படி தீயவை கெட்டவை பலமுறை எதிரொலித்து நம்மை வந்து சேருகிறது. அதனால் நமக்கு நோய் ஏற்படுகிறது.
நோய் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணி இருக்கிறது. இதை நீங்கள் தெரிந்து கொண்டால் புரிந்து கொண்டால் நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழமுடியும், வியாதியே உங்களை அண்டாது. ஒருவேளை நாம் ஆரம்பத்திலே சொன்னவாறு உங்களுடைய மரபணு மூலமாக ஜெனிடிக் என்று சொல்கிறார்களே பரம்பரை வியாதிகள் ஏற்பட்டிருந்தாலும், உணவு பழக்க வழக்கம் சரியில்லாது நோய் ஏற்பட்டிருந்தாலும் அதிலிருந்து சீக்கிரமாக நீங்கள் விடுபடமுடியும். அது எப்படி? அதாவது நாம் பிறரை தவறாக நினைப்பது பிறரை குறை கூறுவது பிறரிடத்தில் இருக்கக்கூடிய குறையை தேடித்தேடி பார்ப்பது குத்திக்காட்டுவது புறம் பேசுவது சபிப்பது சாபமிடுவது திட்டுவது பிறருக்கு துரோகம் விளைவிப்பது பிறரைப் பார்த்து பிறர் முன்னேற்றம் பார்த்து சொத்து சுகம் பெயர் புகழ் பார்த்து பொறாமை படுவது ஏங்குவது பெருமூச்சு விடுவது பிறர் மீது வஞ்சம் வைப்பது குரோதம் ஆத்திரம் பழி வாங்க கூடிய எண்ணம் காழ்ப்புணர்ச்சி இப்படியான வற்றின் மூலமாக நாம் நோய்க்கு ஆட்படுகிறோம்.
இன்னும் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு ஆலயம் செல்கிறோம் ஒரு அருவிக்குச் செல்கிறோம் கடற்கரைக்கு செல்கிறோம் ஒரு ரம்மியமான குளிர்ந்த மலை, இயற்கை எழில் சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு செல்கிறோம். அவ்விடங்களில் நம்முடைய மனது ஆறுதல் அடைகிறது நமக்கு நல்ல ஒரு நிம்மதி கிடைக்கிறது, அமைதி கிடைக்கிறது ஆனந்தம் ஏற்படுகிறது. ஆனால் நாம் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஒரு சாலையில் செல்லும் போது ஒரு மருத்துவமனைக்கு போகும்போது மயானபூமிக்கு சென்றுவரும்போது நமக்கு ஒரு சோர்வு தளர்ச்சி கவலை துக்கம் இப்படியானவை ஏற்படுகிறது.
அது போல நாம் நல்லவற்றை பேசும் போது பிறரை பற்றி உயர்வாக நினைக்கும் போது பிறருக்கும் நல்லது நினைக்கும் போது பிறருக்கும் நல்லது நடக்க காரணமாயிருக்கும்போது பிறரை சகோதர பாசத்தோடு நினைக்கும் போது பிறர் மீது அன்பு செலுத்தும் போது பிறருக்கும் சேர்த்து பிரார்த்திக்கும்போது பிறர்க்காக உழைக்கும்போது பிறருக்கு உதவும் போது தான தர்மம் செய்யும் போது பிறரையும் நம்மைப் போன்று நினைக்கும் போது நமக்கு நல்ல மனநிலை இருக்கும். அது நமக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். நமக்கு நோயே ஏற்படாது ஏற்படுவதற்கு நம்மணம் நம்முடல் இடம் தராது. நோய் இருந்தாலும் அதைப் போக்கிவிடும்.
ஆனால் நாம் மேலே பார்த்தவாறு பிறர் மீது காமம் கோபம் குரோதம் லோபம் மதம் மாச்சரியம் பழி உணர்ச்சி பொறாமை தவறான எண்ணம் தீய எண்ணம் இப்படியானவற்றை கொண்டிருக்கும் போது பிறர் பொருளை அபகரிக்கும் போது பிறருக்கு துன்பம் ஏற்படுத்தும் போது தீராத நோய்க்கு ஆட்படுகிறோம். செயலினால் பிறருக்கு துன்பம் விளைவித்தால் அது தவறு என்பது நமக்குத் தெரியும் அதற்கு தண்டனை கூட உண்டு. அது போல சொல்லினால் பிறருக்கு நாம் தவறு இழைக்கும் போது அதுவும் கூட தண்டனைக்கு உரியதாக இருக்கிறது இதுவும் நமக்கு தெரியும் ஆனால் சிந்தனையால் எண்ணத்தால் பிறரை நாம் தவறாக நினைததால் பிறர் கெட்டுவிட வேண்டும் அழிந்துவிட வேண்டும் என்று எண்ணினால் விரும்பினால் பிரார்த்தனை செய்தால் அதுகூட பாவத்தை ஏற்படுத்தும்.
மனம் வாக்கு காயத்தால் செய்யக்கூடிய பாவங்களுக்கு உண்டான விளைவுகளை நாம் அதன் வழியிலேயே அனுபவிக்கிறோம் என்பது பெரியவர்கள் வாக்கு, சித்தர்கள் வாக்கு முன்னோர்கள் வாக்கு அதனால்தான் சில சமயத்திலே நமக்கே தெரியாமல் நமக்கு சோர்வு உண்டாகிறது தளர்ச்சி உண்டாகிறது கவலை பயம் கோபம் உண்டாகிறது. கெட்ட கனவுகள் வருகிறது இனம் புரியாத சோகம் ஏற்படுகிறது. அதாவது மனதால் செய்த பாவத்தை மனதால் அனுபவிக்க அது வழி.
நாம் பிறரை உயர்வாக நினைத்தால் நாம் நல்லவர் உயர்ந்தவர் அதுமட்டுமல்ல நாம் ஆரோக்கியசாலி. ஆனால் பிறரை தாழ்வாக தவறாக குறைவாக நினைக்கும் போது நாம் தீயவர் தாழ்ந்தவர் நோயாளி. ” தருமரின் கண்ணுக்கு எல்லோரும் நல்லவராகவும் துரியோதனன் கண்ணுக்கு எல்லோரும் தீயவராகவும்” தெரிந்தார்கள். நீங்கள் யார் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். அதிகம் பிறரை திட்ட திட்ட திட்ட நமக்குள்ளே நோய் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பிறர் என்னவாக ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறோமோ முதலிலே அது நமக்கு நடக்கும் அதை நாம் சரியாக புரிந்து கொண்டு பிறர்மீது சகோதரபாசம் அன்பு கொண்டு நம்முடைய மனதை விசாலம் ஆக்கி தயாள குணத்தை கைக்கொண்டால் விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பான்மை சகிப்புத்தன்மை கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் நல்லவராக இருக்கலாம். பிறருக்கு நண்பராக இருக்கலாம் நம்முடைய நட்பு உறவு குடும்பம் இது நமக்கு இன்னும் நன்றாக இருக்கும் பலப்படும் அதுபோல நாம் ஆரோக்கியமாக இருப்போம்.
ஆராய்ச்சியில் செல்கிறார்கள் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஒரு டம்ளரில் தண்ணீரை எதிர்மறை எண்ணங்களோடு பார்த்து கோபமாக பேசிவிட்டு பின் மற்றொரு டம்ளர் தண்ணீரை எடுத்து நல்ல எண்ணங்கள் கொண்டு நல்ல வார்த்தைகள் அன்பான வார்த்தைகள் பேசி தெய்வ நாமாக்களை ஸ்லோகங்களை மந்திரங்களை சொல்லி ஆராய்ச்சி செய்து பார்த்தால் பரிசோதனை செய்து பார்த்தால் நாம் அன்பாக பேசிய அந்த டம்ளரில் தண்ணீர் நன்றாகவும் சத்து உள்ளதாகவும் நல்ல பாக்டீரியாக்கள் கொண்டதாகவும், நாம் திட்டி கோபத்தை ஆத்திரத்தை வெளிப்படுத்திய அந்த டம்ளர் தண்ணீர் கெட்டுப்போனதாக கிருமிகள் உள்ளதாக ஆகியிருக்கும் என்பதை இப்போது பரிசோதனைகள் செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதாவது நம்முடைய மந்திரங்களுக்கு உண்டான சக்தி இது என்பதாக கூட ஒரு பரிசோதனை முடிவு வந்ததாக படித்திருக்கிறோம். அப்படி நாம் பிறரை திட்டும் போது நம்முடைய மனம் கெட்டு அதனால் உடல் கெடுகிறது பிறர் மீது அன்பு செலுத்தும் போது நம்முடைய மனம் லேசாகி நம்முடைய உடல் பலம் ஆகிறது அதனால் நோயற்ற வாழ்வு வாழ ஆரோக்கியமாய் வாழ பலவானாக இருக்க நீண்ட ஆயுள் வாழ நாம் முதலில் அன்பு செலுத்துவோம். அன்பே சிவம் அந்த அன்பு சிவமாய் இருந்து நமக்கு துணைவரும். சிவம் என்று சொல்லும்போது அழிக்கும் கடவுளாக இருக்கிறார். நம்முடைய நோயை வியாதியை அழிக்கும் கடவுளாக இருக்கிறார். அப்படியாக அந்த சிவம் மீது சிவத்தின் மீது நாம் கொண்டுள்ள பக்தியை பிறரிடத்திலே அன்பாக வெளிப்படுத்துவோம்.
இந்த இடத்திலே மனிதர்கள் மீது அன்பாக இருக்க வேண்டும் பாசமாக இருக்க வேண்டும். நண்பர்களாக சகோதரர்களாக தாயாக குழந்தைகளாக குருவாக நாம் எல்லோரையும் நினைக்க வேண்டும் என்று பார்த்தோம் மரம் செடி கொடிகள் என்ற தாவரங்கள் விலங்கினங்கள் பறவையினங்கள் இடத்திலும் கூட நாம் அன்பாக இருக்கவேண்டும். அதுபோல பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடியது நம்மை காக்க கூடியதாய் இருக்கிறது அதனால் அதிகமாக மழை பொழிந்தாலும் கூட நாம் அந்த மழையை திட்டக்கூடாது அதிக வெயில் வந்தாலும் திட்டக்கூடாது காற்றே இல்லை என்றோ அதிக காற்று வீசுகிறது என்றோ நாம் ஒருபோதும் வாயுவை திட்டக்கூடாது. இப்படி பஞ்சபூதங்கள் ஜீவராசிகள் குடும்ப நபர்கள் குழந்தைகள் சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தாய்மார்கள் உறவினர்கள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
பதியப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
இதுபோல பயனுள்ள தகவல்களையும் ஜோதிடம் வாஸ்து மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான அற்புதமான தகவல்களையும் தொடர்ந்து இந்த வலைத்தளத்திலே பதிவிடுவோம். படித்து பயன்பெறுங்கள்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்ககணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply