மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் பங்குனி 7 மார்ச் 21 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலா ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி 12 ராசியில் பிறந்தவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் என்ன? ஏற்றமான பலன்கள் என்ன? பாதக பலன்கள் என்ன? இப்படியான தகவல்களை இப்பதிவிலே பார்ப்போம்.
பெயர்ச்சி பலனை பார்ப்பதற்கு முன்னதாக ஓரளவிற்கு ராகு கேதுவைப் பற்றி முதலில் அறிந்து கொள்வோம். பொதுவாக ராகு கேது என்று சொன்னாலே இவர்கள் கெடு பலனை மட்டுமே தரக்கூடியவர்கள். இவர்கள் இயற்கை அசுப கிரகங்கள். சாயா கிரகங்கள் சர்ப்ப கிரகங்கள் அதனால் ராகு கேது என்று சொன்னாலே தோஷங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள். தடைகளை ஏற்படுத்த கூடியவர்கள் தானும் பலன் தராது மற்ற கிரகங்களையும் பலன்தர விடாது தடுக்க கூடியவர்கள் இப்படியான எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே ராகு கேது என்று சொன்னாலே அவருடைய பயிற்சி என்று சொன்னாலே நிறைய பேருக்கு அச்சம் உண்டாகிறது.
ஆனால் உண்மை நிலைமை அப்படி கிடையாது. நவகிரகங்களில் முழுமையான சுபரென்று குரு பகவானை சொல்கிறோம். இவருக்கு அடுத்ததாக சுக்கிரனை சொல்கிறோம். இந்த வரிசையில் வளர்பிறைச் சந்திரன் தனித்த அல்லது சுவரோடு சேர்ந்த புதன் இவர்கள் வருகிறார்கள். இவர்கள் தவிர சூரியன் செவ்வாய் சனி ராகு கேது இவர்கள் இயற்கை அசுப கிரகங்கள். இப்படி சொல்லப்பட்டால் கூட சுபகிரகங்கள் சுபபலனை மட்டுமே அசுப கிரகங்கள் அசுபபலனை மட்டுமே தரும் என்பது இதற்குப் பொருள் கிடையாது. இதைத்தாண்டி லக்ன சுபர் லக்ன அசுபர் என்பதாக அடுத்த நிலை இருக்கிறது.
அனைத்து கிரகங்களும் நற்பலனையும் தரும் தீயபலனையும் தரும். ஜாதகர் பிறக்கும் போது அந்த ஜாதகருக்கு அந்த கிரகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றது? அதாவது ஒரு குழந்தை பிறக்கும்போது அன்றைய நாளின் கிரக நிலை என்ன? அப்போது எந்தெந்த கிரகங்கள் பலமாக இருக்கிறது எந்த கிரகங்கள் பலவீனம் அடைந்து உள்ளது? அந்த குழந்தையினுடைய ஜென்ம ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராசியிலிருந்து கிரகங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய நிலை என்ன? கிரகங்கள் ஒன்றோடொன்று தொடர்பு பெற்று சேர்ந்து இருக்கிறதா? என்ன நட்சத்திரத்திலே இருக்கிறது? உச்சம் பெற்றிருகக்கிறதா? நீசமடைந்து இருக்கிறதா? மறைவிடங்களில் இருக்கிறதா? கேந்திர திரிகோணங்களில் இருக்கிறதா ? இப்படியெல்லாம் இருப்பதை பொறுத்தே பலன்கள் உண்டாகும்.
அதனால் ராகு கேதுக்கள் என்று சொன்னாலே கெடு பலனை மட்டும் தரக்கூடியவர்கள் கிடையாது. “ராகுவை பார்த்து யோகத்தை சொல்லு” என்பதாக ஜோதிட ரீதியாக ஒரு பழமொழி கூட இருக்கிறது. கேது ஆன்மீகத்தை தரக்கூடியவர் மோட்ச காரகன் கீர்த்திகாரகன் இப்படியான ஒரு அம்சமும் இருக்கிறது. அதிலும் கேது குருவோடு சேர கோடீஸ்வர யோகம் கூட ஏற்படுகிறது. அதனால் ராகு-கேதுக்கள் நற்பனையும் தரவல்லவர்கள். இந்த ஒரு எண்ணத்தோடு நாம் இனி பலன்களைப் பார்க்கலாம்.
ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த பெயற்சியானது ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசியிலிருந்து மீனத்திற்கு ராகுவும் துலா ராசியில் இருக்கின்ற கேது கன்னிக்கும் பெயர்ச்சி ஆவர்கள். இந்த இடைப்பட்ட ஒன்றரை ஆண்டு காலத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படுகிற பலனை நாம் பார்க்க வேண்டும்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் இந்த ராகு கேது பெயர்ச்சி தரக்கூடிய பலன்கள் என்ன? சாதக பலன்களை முழுமையாக அடைவதற்கான வழி என்ன? பாதக பலனிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? எப்படி தவிர்ப்பது? இப்படியான தகவல்களும் ஒவ்வொரு ராசி அன்பர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? செல்ல வேண்டிய கோவில் எது? இப்படியான தகவல்களும் அடங்கிய காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக பார்த்து நீங்கள் பயன் பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ராகு கேது நிலை சாதகமாக இல்லாது போனாலும் கூட நீங்கள் கவலைப்பட வேண்டாம். அடுத்ததாக பங்குனி மாதம் 30 ஆம் தேதி ஏப்ரல் 13 குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயரச்சி பலனை நாம் அடுத்து பார்ப்போம். ராகு-கேது சஞ்சரிக்கக் கூடிய நிலை சாதகமாக இல்லாத போது குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்கள் நற்பலனை அடையலாம். பொதுவாக ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியை கடவுள் நமக்கு திறப்பார்.
எனவே நம்பிக்கை இழக்காமல் பயம் கவலை கொள்ளாமல் நீங்கள் சரியாக உங்களுடைய வாழ்க்கை பயணத்தை திட்டமிட்டு வழிபாடு தானதர்மம் போன்றவற்றை சக்திக்கு ஏற்றவாறு செய்து உங்களுடைய கல்வி உத்தியோகம் கடமைகள் போன்றவற்றை விடாமுயற்சி செய்து கடினமாக உழைத்து நீங்கள் அடைய முற்படும் போது கட்டாயம் உங்களுக்கு கடவுளுடைய துணை இருக்கும்.
இதுபோன்ற பெயர்ச்சி பலன்கள் மாதந்தோறும் வரக்கூடிய பண்டிகை விரத நாட்கள் அதனுடைய மகத்துவங்கள் கடைபிடிக்கக் கூடிய வழிமுறை ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்களை இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து நாம் பதிவிடுவோம். பார்த்து நீங்கள் பயன்பெற வேண்டும்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply