நம்முடைய வாழ்க்கையிலே மிக நெருக்கமான தொடர்பை பெற்ற சில விலங்கினங்கள் பறவையினங்களில் காக்கைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குழந்தைகளுக்கு முதன்முதலாக சூரியனை சந்திரனை காண்பிப்பதுபோல காக்கையை காண்பிக்கும்போது ஏற்படுகிறது முதல் சம்பந்தம்.
அன்னையானவள் நிலாவை காட்டி சோறூட்டுவதுபோல காக்கை குருவிகளை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவாள். பெரும்பாலானவர்கள் அமாவாசை அன்றும் முன்னோருக்கு திவசம் கொடுக்கும்போதும் காகத்திற்கு அன்னம் வைப்பார்கள். பலர் பண்டிகை நாட்களில் பூஜை ஆனவுடன் காகத்திற்கு முதலில் வைத்து பிறகு சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிலர் தினசரி காக்கைக்கு அன்னம் வைப்பதை இன்றளவும் பழக்கமாக கொண்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை நம்மிடத்திலே இருக்கிறது. பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பது பலருக்கும் தெரியும், அதுபோல காக்கை எத்திசையிலிருந்து எத்திசை நோக்கி பறக்கிறது? என்பதை வைத்தும் சகுனம் தெரிந்து கொள்வார்கள்.
யானைகளுக்கு, வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கு பெயர்சூட்டி அழைப்பது நம் வழக்கம். சில விலங்கினங்களை அதன் பெயரல்லாது வேறுவிதமாக அழைப்போம். அதாவது குரங்கை ராமா என்றும் பசுவை அம்மா எனவும் அழைப்பதுபோல கோழியை, நாயை ஒவ்வொருவிதமாக அழைப்போம். காக்கையை அதன் பெயர் சொல்லியே அழைப்போம்.
காக்கையை பித்ருக்களாகவும் சனி பகவானின் வாகனமாகவும் அறிந்திருக்கிறோம், அதுபோல எமதர்மராஜாவும் காக்கையாக இருக்கிறார். ஒரு சாபத்தினால் காக்கையாக மாறி சிவபூஜை செய்து சாப விமோசனம் பெற்றார். இப்படிப்பட்ட காகம் தலையை உரசிச்சென்றால் தோஷம். தலையில் அடித்தாலும் தோஷமாகும். தலையிலோ உடலிலோ எச்சம் போட்டாலும் தோஷமே. இதை காகபுரீஷம் என்பார்கள்.
பலன் – பெற்றோர் குடும்ப நபர் உறவினார்களில் யாருக்காவது ஏற்படவிருக்கிற தீமையை உணர்த்தும் சகுணாமாக காகம் தலயை உரசிக்கச்செல்லுதல், தலையில் அடித்தல், எச்சம் போடுதல் (காகபுரீஷம்) இருக்கிறது.
பரிகாரம் – ஸ்நானம் செய்தல், குறிப்பிட்ட சில நாட்களிலே (நக்ஷத்திங்களிலே) உடுத்திய ஆடையோடு குளிக்க வேண்டும். ஆடைகளை மாற்றிக்கொள்ளுதல், நம்மை சுத்திகரித்துக் கொள்ளுதல் முதலானவற்றை செய்து பெற்றோர் குடும்ப நபர் உறவினர்களுக்கு ஏதும் தீங்கு நேரக்கூடாது என வேண்டி இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும். வயோதிகர்கள் உடல்நிலை சரியில்லாதர்களை அக்கறையோடு பார்த்துக்கொள்ளுதல் அவர்களுக்கு சேவை செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
காக்கை வீட்டிற்குள் வரலாமா? – நம்முடைய வீட்டுக்குள்ளே காக்கா வரலாமா என்று கேட்டால்? வரக்கூடாது என்பதுதான் பெரியவர்களுடைய கருத்து. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதிலே ஆன்மீக ரீதியான காரணங்களை முதலில் பார்ப்போம். காக்கையை நம்முடைய முன்னோர்களாக பித்ருக்களாக நாம் பார்த்தாலும் அமாவாசை அன்றோ ஸ்ரார்த்த நாளிலோ வீட்டிற்கு வெளியே சென்று காக்கைக்கு உணவளிக்கிறோமே தவிர வீட்டிற்குள்ளே காகத்தை அழைப்பதில்லை.
காக்கை சனி பகவானுடைய வாகனமாக இருக்கிறது. ஆலயம் செல்லும்போதும் நேராக நவகிரக சன்னதி சென்று முதலில் சனிபகவானை தரிசிப்பதோ, கடைசியாக சனிபகவானை தரித்துவிட்டு அப்படியே வீட்டிற்கு வருவதோ கிடையாது. ஆஞ்சநேயரையோ வேறு கடவுளையோ பார்த்துவிட்டோ,அல்லது சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டோதான் இல்லத்திற்கு வருகிறோம்.
எமதர்மராஜாவும் காகமாக இருந்தார். அவரை தர்மராஜா என்று வழிபடுகிறோம். ஈரேழு பதினான்கு லோகத்திலும், முன்பும் இப்போதும் எப்போதும் தர்மத்தை நிலைநாட்டுபவராகவும் தர்மத்திற்கே ராஜாவாகவும் அவர் இருக்கிறார். பல கோவில்களிலே எமதர்மருக்கு சன்னதியும் உண்டு. ஆதலால் காகம் நம் வீட்டிற்குள்ளே வரக்கூடாது என்றாலும் வந்துவிட்டால் அதை துன்புருத்தாமல் அதற்கு தீங்கு நேராவண்ணம் வெளியேற்ற வேண்டும்.
அறிவியல் ரீதியாக பார்த்தமேயயானால், ஒரு சிலவற்றை நாம் அன்றாட வாழ்க்கை மூலமாகவே எளிதாக புரிந்துகொள்ள முடியும்.காக்கா OMNIVORE வகையை சார்ந்தது. அதனால் காகம் எச்சம் போட்டாலோ (காகபுரீஷம்) தலையில் அடித்துச் சென்றாலோ, உரசிச் சென்றாலோ கிருமி தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஆடைமாற்றுதல் ஸ்நானம் செய்தல் போன்றவற்றை செய்யவேண்டும்.
மேலும் அது சாப்பிடுவாதற்காக மாமிசத்தையோ ஏதாவது ஜீவராசியையோ தூக்கி செல்லும்போது அதை நம்மீது போட்டுவிட்டால் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சகுணமாக தோஷமாக நம் முன்னோர்கள் காக்கை சம்பந்தமான பலன்கள் பரிகாரங்களை சொல்லியிருக்கலாம். ஆக மொத்ததில் முன்னோர் சொன்னதை, மருத்துவர் சொல்வதுபோல அறிவியலாளர் ஆராய்ச்சியாளர் சொல்வதுபோல அராசாங்க சட்டம் போல நாம் கடைபிடக்கவேண்டும் அது நமக்கு நன்மை பயக்குமே தவிர ஒருக்காலும் தீமை பயக்காது.
இதுபோல நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஆன்மீக சந்தேகம் ! பெரும்பாலானவர்கள் கேட்ட கேள்வி ? இதற்கான பதிலை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து நாம் பார்ப்போம்.
ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply