28.02.2022 திங்கள் அபூர்வமான நாள் தவறவிடாதீர்.

sri mariamman temple in singapore

மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்தராயன புண்யகாலம் சிசிரருது மாசிமாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை திரயோதசி திதி திருவோண நக்ஷத்திரம்.

மகத்துவம் – திரயோதசி திதி இருப்பதால் அன்று பிரதோஷ விரதம். திங்கட்கிழமையில் வருவதால் ஸோமபிரதோஷம்.

ஸ்ரவணம் என்பது சந்திரனுடைய நக்ஷத்திரம். திங்கள் சந்திரனின் கிழமை. சேர்ந்து வருவது விசேஷம். (திருவோணம், ஸ்ரவணம் எனப்படும். எனவே ஸ்ரவண விரதம்)

இப்படியான பிரதோஷமும் ஸ்ரவண விரதமும் சேரந்து ஒன்றாக வருவது, அதுவும் திங்களன்று வருவது கூடுதல் விசேஷம்.

யாரெல்லாம் தவறாது வழிபடவேண்டும் – சந்திரதிசை நடப்பவர்கள் ரோகிணி ஹஸ்தம் திருவோண நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் கடக விருச்சிக ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஜென்ம ஜாதகத்திலே சந்திரன் சனி, சந்திரன் ராகு, சந்திரன் கேது சேர்க்கை இருப்பவர்கள், சந்திரன் 6 8 12 லோ, 7 ஆமிடத்தில் தனித்தோ, அசுப கிரகங்களோடு சேர்ந்தோ இருப்பவர்கள், எந்த கிரக தொடர்புமின்றி தனித்து இருகக்கப் பெற்றவர்கள், தேய்பிறையில் பிறந்தவர்கள் இந்நாளிலே விரதம் வழிபாடு செய்யலாம். இவர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற இந்நாளில் பூஜை பிரார்த்தனை செய்யலாம்.

புண்ய தீர்த்தங்களிலே ஸ்நானம் செய்யலாம். மலைக்கோவில் சென்றுவாரலாம். தியானம் செய்யலாம்.

விரதமிருக்க முடியாதவர்கள் முத்து வெள்ளை வஸ்திரம் நெல் பச்சரிசி தானம் செய்ய சந்திரதோஷம் போகும், சந்திரபலம் கிட்டும். தண்ணீர் பந்தல் நீர்மோர் பானக விநியோகமும் செய்யலாம்.

தான தர்மம் செய்யமுடியாதவர்கள் ஆலயதரிசனம் செய்யலாம்.

ஆலயம் செல்லமுடியாதவர்கள் தாயிடத்திலே ஆசிபெறலாம்.

பலன்கள் மனநலம் உடல்நலம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஞாபகமறதி தூக்கமின்மை சரியாகும். தீய பழக்கத்திலிருந்து விடுபட முடியும். கண்நோய் சுவாச கோளாறுகள் இரத்த கொதிப்பு வலிப்பு வாத நோய்களில் இருந்து மீள முடியும்.

மிக முக்கியமாக, இந்நாளில் விரதம் வழிபாடு செய்ய சிவபெருமானுடைய மகாவிஷ்ணுவுடைய அணுக்ரஹம் கிடைக்கும்.

நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஆன்மீக சந்தேகம் ! பெரும்பாலானவர்கள் கேட்ட கேள்வி ? இதற்கான பதிலை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து நாம் பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading