சனி தோஷ பரிகாரங்கள்-மகரம் கடகம் மிதுனம் தனுசு கும்பம் துலாம்

brown monkey

கிரகங்களுடைய அதிதேவதை பிரத்யதிதேவதை இரத்தினம் தானியம் சமித்து திசை வாகனம் மண்டலம் புஷ்பம் திதி வாரம் நக்ஷத்திரம் நிறம் க்ஷேத்ரம் உலோகம்… இப்படியான பலவற்றின் மூலம் கிரக தோஷங்களை போக்கிக்கொண்டு யோகபலன்களை அடைய முடியும்.

மேற்சொன்னவற்றில் எதை எப்படி பயன்படுத்தி பலனடைய வேண்டும் ? என்ற சூக்க்ஷூமங்களை, இந்த வலைத்தளத்திற்கு தொடர்ச்சியாக வரக்கூடியவர்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

இன்றைக்கு. ஜென்ம சனி நடக்கும் மகர ராசி, கண்டக சனி பார்வை பெரும் கடகராசி, அஷ்டம சனி காலத்தில் இருக்கும் மிதுன ராசி, அர்த்தாஷ்டம சனி பார்வை பெரும் துலாராசி, ஏழரை சனி நடந்து கொண்டிருக்கும் கும்ப, தனுசு ராசிக்காரர்கள், கஷ்டங்களில் இருந்து மீண்டு வர, நலம் பெற சில எளிய வழிபாடுகளை பார்ப்போம்.

மிகச்சிறந்த பலன்தரும் சனிவார விரதம் இருக்க வேண்டும் . விரதமிருக்க முடியாதவர் ஒருபொழுது இருக்கலாம். அதுவும் இயலாத வியாதியஸ்தர் வயோதிகர் கர்ப்பஸ்திரீகள் எளிய ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம். அன்று பெருமாள் கோவிலுக்கோ, சிவாலயத்திற்கோ சென்றுவர வேண்டும்.

பெருமாள் கோவில் சென்றால் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமஜெயம் எழுதி அதையோ, வாழைப்பழத்தையோ துளசியையோ மாலையாக அணிவிக்கவேண்டும். பிறகு முடிந்த அளவிற்கு, பிரதக்க்ஷிணம் ( வலம் வருதல்) செய்யவேண்டும். அன்றைய நாளோ, இயலும்போதோ குரங்கை. “ராமா” என அழைத்து வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

சிவாலயம் சென்றால் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை (வெள்ளெருக்கு, தும்பைப்பூ ) சாற்றி, இயன்றவர்கள் தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும். அன்றோ இயலும்போதோ பசுவை. “அம்மா” என அழைத்து புல்லோ , கீரையோ கொடுக்க வேண்டும்.

பிரதோஷ விரதமோ, ஏகாதசி விரதமோ அனுஷ்டிக்கலாம்.

இயன்ற போதெல்லாம் காலார நடந்து மலையேறி, மலைமீதுள்ள ஸ்வாமியை வழிபட்டு வரலாம்.

மேற்கண்டவற்றில், இயன்றதை பக்தியோடு செய்துவர சனிதோஷம் விலகும், நன்மையெல்லாம் நடக்கும்.

ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading