மனநலம் உடல்நலம் பெற… என்ற கடந்த பதிவிலே சந்திர தரிசனத்தின் மகத்துவத்தை பார்த்தோம். குறிப்பிட்ட நாளில் சந்திரனை பார்க்காகக்கூடாது என்றும் சொன்னோம். அது எந்தநாள்? அன்று ஏன் சந்திரணை பார்க்கக்கூடாது? பார்க்க நேர்ந்தால் அதற்கான பரிகாரம் என்ன? என்பனவற்றை இப்பதிவிலே பார்ப்போம்.
நான்காம் பிறையை தான் பார்க்கக்கூடாது. இதற்கு இரண்டு புராண கதைகள் உண்டு. அவற்றை சுருக்கமாக இப்போது பார்ப்போம்.
ஒன்று – சதுர்த்தி அன்று கணபதியின் உருவம், மூஞ்சூறு வாகன பயணம், நடனம் கண்டு ஏளனம் செய்த சந்திரனுக்கு தேயும்படியான சாபம் கிடைத்தது. பின் தவறுக்கு வருந்தி பூஜை விரதம் வழிபாடுகளை கடைபிடித்து சாப விமோசனம் பெற்றார்.
இரண்டு – அபராஜித் என்னும் மன்னன், கேட்டதை எல்லாம் கொடுக்கும் அற்புதமான ஸ்யமந்தகமணி யை வைத்திருந்தான். ஸ்யமந்தகமணி பற்றிய இரகசியம் கண்ணனுக்கு மட்டுமே தெரியும். ஒருநாள் அபராஜித்தின் தம்பி வேட்டையாட காட்டிற்கு சென்றபோது இம்மணியை அணிந்து சென்றான். ஒரு சிங்கத்திடம் அகப்பட்டு மாண்டு போனான். இதை அறியாத அபராஜித், கண்ணனே ஸ்யமந்தகமணிகக்கு ஆசைப்பட்டு தன் தம்பியையையும் கொன்று, மணியையும் களவாடிவிட்டான். என்று பழி சுமத்தினான்.
கண்ணன் மீது சுமத்தப்பட்ட இந்த வீண்பழிக்கு காரணம், அவர் நான்காம் பிறையை கண்டதுதான் என்றும், அதற்குண்டான பரிகாரத்தையும் நாரதமகரிஷி எடுத்துக்கூறினார். நாரதமகரிஷி அறிவுறுத்தியதைபோல. கணபதியை வழிபட்டு, மூன்றாம் பிறையை தரிசிக்க விரதமிருந்து,
அபாராஜித்தின் தம்பியை காடு மலை என்று பலவிடங்களில் தேடிக் கொண்டிருந்த கண்ணனுக்கு கானகத்தில் ஒரு குகையிலிருந்து தெய்வீக ஒளி வருவது கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்க்க, ஜாம்பவான் இருந்தார். ஜாம்பவானின் மகளிடம் அந்த ஸ்யமந்தகமணி இருந்தது. நடந்ததை கண்ணனிடம் கேட்டு அறிந்துகொண்ட ஜாம்பவான், ஒரு சிங்கத்தை கொன்றபோது அதனிடம் இம்மணி இருந்தது என கூறி . மணியை கொடுத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
ஸ்யமந்தகமணியை அபராஜித்திடம் கொடுத்து வீண்பழியிலிருந்து மீண்டார். கண்ணன். எனவே நான்காம் பிறையை நாம் பார்க்கக்கூடாது. தெரியாமல் பார்த்துவிட்டால் கணபதி வழிபாடு, அடுத்து வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி விரதம் , மூன்றாம் பிறை தரிசனம், ஸ்யமந்தகமணி புராணம் படித்தல் கேட்டல் சொல்லுதல் இவற்றில் இயன்றதை செய்தால் தோஷம் போகும். கணேசனுடைய, கிருஷ்ணனுடை அருள் கிட்டும்.
முக்கிய குறிப்பு – எல்லாம் அறிந்த கண்ணனுக்கு நான்காம் பிறையை பார்க்கக்கூடாது என தெரியாதா? பகவானுக்கே தோஷம் வருமா? கண்ணன் கணபதியை வழிபட்டாறா ? என்ற எண்ணம், கேள்வி வரக்கூடியவர்களுக்கு.
பெரும்பாலும் நம்முடையாய புராணங்கள் இதிகாசங்கள் சடங்கு சம்பிரதாயங்கள் அனுபவ ஆராய்ச்சி அறிவியல் காரணங்களை கொண்டு, நம் நலத்திற்காக ( மனநலம்/உடல்நலம் ) வளத்திற்காக சொல்லப்பட்டது. முன்னோர் சொல்லிய, கடைபிடிக்க அறிவுறுத்திய ஒவ்வொன்றும் அற்புதமானவை. என்று இப்போது மெத்த படித்தவர்கள், அறிவியல் அறிந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வியந்து பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
அதுபோல, நான்காம் பிறை பற்றியும். அன்று நடக்கும் வானியல் மாற்றங்கள் , நம் உளவியல் மாற்றங்கள் குறித்தும் சொல்லுவார்கள். அதனால், ரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் நம் பாட்டி தாத்தா சொன்னவற்றை கடைபிடிப்போம். மூட நம்பிக்கை என்று கேலி கிண்டல் செய்து , பின்னாளில் அதன் மகத்துவம் தெரியவரும்போது அடடா.. இவ்வளவு காலம் பயன்தரும் நல்லனவற்றை செய்யாமல் விட்டு விட்டோமே? கேடுதரும் தீயனவற்றை செய்து மனதையும் உடலையும் கெடுத்துக்கொண்டேமே? என்று ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை. இதுபோல பயனுள்ள தகவலை அடுத்த பதிவிலே தொடர்வோம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரக ஹோமம் , கிரஹபிரவேசம் திருமணம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply