மனநலம் உடல்நலம் பெற எளியவழி…1 நாளுக்கு 2 நிமிஷம் போதும்.

waxing moon shining in cloudy sky

ஒரு மாதத்திற்கு மொத்தமாக 60 நிமிடம் செலவழித்தால் போதும். தினமும் ஒருமுறை மட்டுமே செய்தாலும் கூட பலன்தரும்.

குனிந்த தலை நிமிராமல் பெண்மணிகள் நடப்பதும், ஆண்கள் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை என்றிருப்பதும் கொஞ்ச காலத்திற்கு முன்வரை எல்லோரும் கடைபித்த விஷயம். இப்படியான அக்கால நடைமுறைகள் பலவற்றிற்கு அனுபவ, அறிவியல் காரணங்கள் பல இருந்தது. தலைப்பிற்கு வருவோம்.

இக்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் அனைவரும் குனிந்த தலை நிமிராமல் நடக்கிறோம், இருக்கிறோம், பயணிக்கிறோம்,வாழ்கிறோம். அடக்கமோ பணிவோ காரணமல்ல. நம் கையிலிருக்கும் கைத்தொலைபேசியே ( SMART PHONE ) காரணம்.

இப்படி CELL PHONE ஐ எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களுக்கும், மூளைக்கும் குறிப்பாக மனதுக்கும் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் எப்போதும் குனிந்து கொண்டே இருப்பதால் ( MOBILE ஐ பார்ததாவாறு ) கழுத்து தொடங்கி நம் உடலுக்கு எவ்வளவோ பாதிப்புகள் ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள். டாக்டர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சரி இதற்கு என்னதான் தீர்வு.

எளிய தீர்வு இருக்கிறது. நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பல அறிய பொக்கிஷங்களில் ஒன்றான ஜோதிட சாஸ்திரம் இதற்கு தீர்வை அளிக்கிறது.

ஆம் . ஜோதிடம் என்றாலே பிரதானம் நவகிரகங்கள் , நவகிரகங்கள் என்றாலே பிரதானம் சூரியன். இந்த சூரியனை தினமும் தரிசித்தாலே ( சூரிய நமஸ்காரம் ) கண் நோய் , உடல் உபாதைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியமாக வாழலாம். சரி மனநலம் பெற வழி என்ன?

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடம் சந்திரனுக்கு. மாதத்தில் சந்திர தரிசனம் என்று ஒருநாள் வரும் . அந்நாளில், இயன்றவர்கள் விரதமிருந்து (இயலாதவர்கள் எளிய உணவு எடுத்துக்கொண்டு ) மாலை சந்த்ரோதயம் ஆகும்போது அம்பாளை ( ஏதாவது ஒரு பெண் தெய்வம் ) வழிபட்டு சந்திரனை தரிசித்து வர, சஞ்சலம் குழப்பம் பயம் கவலை எதையும் கவனிக்க முடியாமை மறதி முடிவெடுக்க முடியாமை கெட்ட பழக்கத்திலிருந்து மீள இயலாமை தீய/எதிர்மறை எண்ணங்கள்….. இவற்றிலிருந்து விடுபட்டு,

தெளிவு துணிவு உறுதி நம்பிக்கை மனோதிடம் வைராக்கியம் ஞாபகசக்தி நேர்மறை எண்ணம் நல்ல உள்ளுணர்வு உற்சாகம் … பெறமுடியும்.

மாலையிலிருந்து இரவுக்குள்ளாக நேரம் கிடைக்கும்போதோ இரவு படுக்கும்போதோ வான மண்டலத்தை நக்ஷத்திரங்களை சந்திரனை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கூட போதும்.

மனநலம், கிரக, நக்ஷத்திர, தெய்வ அருள் பெற்று பரிபூரண வாழ்வை பெறமுடியும்.

முக்கிய குறிப்பு – சந்திரனை குறிப்பிட்ட நாளில் பார்க்கக்கூடாது. பார்த்தால் தோஷம் ஏற்படும்.

அது எந்த நாள் ? அன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது? என்ற தகவல்களை அடுத்த பதிவில் அறிந்து கொள்வோம்.

சூரிய நமஸ்காரம் எப்போது? எப்படி செய்யவேண்டும் என்றும் ஒரு பதிவிலே பார்ப்போம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரக ஹோமம் , கிரஹபிரவேசம் திருமணம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading