மாட்டுப் பொங்கல் கொண்டாடலாம் வாங்க

cows under a roof in captivity

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில்தான் விசேஷமாக இருக்கும். எனினும் நகரங்களிலும் பெரும்பாலும் பொங்கலிட்டு சூரிய நாராயணரை பூஜிகிக்கிறோம். ஆனால் மாட்டுப்பொங்கல், அரும்பசியை போக்கும் பிராணனை காக்கும் விவசாயம் செழிக்கும் கிராமங்களில்தான் கோலாகலமாக இருக்கும். அக்கிராமங்களிலும் மாடு வைத்திருப்பவர்கள் வீட்டிலே கொண்டாட்டமாக இருக்கும்.

அப்படியெனில் நகரங்களில் வசிப்பவர் , வீட்டில் மாடு வளர்க்காதவர் எப்படி மாட்டுப்பொங்கலை கொண்டாடுவது?

நம் வீட்டிலே பசு கன்று எருது இல்லாவிட்டாலும் இருப்பவரோடு சேர்ந்து வழிபடலாம். அவர்களுக்கு மாட்டுப்பொங்கலை கொண்டாட உதவலாம். கோஷாலைகள் தேடி சென்று பூஜை வழிபாடு பராமரிப்புக்கான உதவி மாட்டுத்தீவனம் போன்ற கைங்கரியம் செய்து புண்யம் தேடிக்கொள்ளலாம்.

பெருமாள் கோவில்களிலே காமதேனுவாகவும் சிவாலயங்களிலே நந்தியாகவும் அருள் புரியக்கூடிய பசு காளையை பூஜிக்கலாம். பூஜிக்க கைங்கர்யம் செய்யலாம்.

அதிலும் இவ்வாண்டு ஸ்ரீ பிலவ வருஷ மாட்டுப்பொங்கல் பிரதோஷத்தன்று வருகிறது. அதிலும் சனிக்கிழமை வருவதால் சனிப்பிரதோஷம் . அதனால் கூடுதல் சிறப்பு. மகத்துவம்.

பிரதோஷம் என்றாலே ஆரம்பத்தில் நந்திக்கு அபிஷேகமும் அப்புறம் ரிஷபாரூடராக சிவபெருமான் ரிஷப ( எருது/காளை ) வாகனத்திலே எழுந்தருளி தரிசனம் தந்து நமக்கு அருள் புரியக்கூடிய அற்புதமான நாள்.

இவ்வளவு மகத்துவமான நன்னாளிலே ஆலய தரிசனம் செய்ய முடியாது போனாலும் பிரதோஷ காலத்திலோ மாலை வேளையிலோ இல்லத்திலிருந்தே எம்பெருமான் சிவபெருமானையும் ரிஷபத்தையும் கோமாதாவையும் பூஜித்து வழிபட்டு மாட்டுப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

தானங்களிலே சிறந்ததாக கோதானமும் இருக்கிறது. கோதானம் ஆவினங்களை பராமரிப்பது கோ சம்ரக்ஷணம் கோஷாலை இப்படியான புண்ய காரியங்களை பொருள் இருக்கும் பாக்கியவான்கள் செய்யட்டும்.

எளியவர்கள் அனுதினமும் தாய் தந்தையாய் இருக்கின்ற கோமாதாவான பசுவையும் நந்தியாக இருக்கின்ற எருதையும் வழிபடுவோம்.

மிக முக்கியமாக வம்ச விருத்தியே இல்லாத தோஷத்தையோ அல்லது பல தலைமுறைக்கு பாவத்தையோ ஏற்படுத்தக்கூடிய பரிகாரமே இல்லாத கோ சாபத்தை உண்டாக்கும், பசுவதை கறவை நின்றபிறகு அடிமாட்டிற்கு விட்டுவிடுவது இப்படியான செயல்களை செய்யாதிருக்க இந்நாளிலே உறுதி ஏற்போம்.

மாட்டுப்பொங்கலும் சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரக்கூடிய இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றையும் இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading