வைரம் வெள்ளி தங்கம் வாங்க சேமிக்க உகந்த நாட்கள் எவை?

gold plated accessories

ஆபரணங்கள் சேர வெள்ளி விளக்கு தட்டு டம்ளர் சொம்பு என வெள்ளி பொருட்கள் பெருக செல்வம் குவிய செல்வந்தராக கடைபிடிக்க வேண்டியவை என்ன ? எக்காலத்திலே ஆபரணங்களை, இரத்தினங்களை வெள்ளி பொருட்களை வாங்கலாம் ? எப்போது வாங்க அது சேரும் ? எப்படி சேர்க்க வேண்டும்? இப்படியான மிக முக்கியமான தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

திதிகள் – துவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி

வாரம் – வியாழன் வெள்ளி புதன் திங்கள்

நக்ஷத்திரம் – 1) திருவாதிரை திருவோணம் பூசம் மிருகசீரிஷம் அனுஷம் சதயம் அவிட்டம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி

2) கிருத்திகை மூலம் ஹஸ்தம் மகம்

யோ கம் – சித்தயோகம் அமிர்தயோகம்

கரணம் – பவம் பாலவம் கௌலவம் தைதுலை

மேற்கண்ட திதி வார நக்ஷத்திர யோக கரணம் வரக்கூடிய நாளிலே இன்ன பிற அனைத்து அம்சங்களும் கூடிவர தங்கம் வெள்ளி வைரம் நவரத்தினங்கள் வாங்கலாம். சேமிக்கத் தொடங்கலாம். இவை தவிர, வாங்கக் கூடிய நேரத்தை சுப முகூர்த்த லக்னம் நிச்சயிப்பது போல குறிப்பிட்ட லக்னத்திலே வாங்க அந்த லக்னத்திற்கு கிரக நிலைகள் இருக்கக்கடிய நிலைக்கு ஏற்றவாறு சர ஸ்திர உபய ராசிகள் இவற்றையும் பார்த்து குரு சுக்கிரன் இவர்களுடைய அஸ்தமனம் போன்ற விஷயங்களை கவனித்து ஜாதகரீதியாக மிகச் சரியான ஒரு லக்னத்தை தேர்ந்தெடுத்து அந்நேரத்தில் தங்கம் வெள்ளி வைரம் ரத்தினங்கள் வாங்க அது நம்மிடத்தில் நிலைக்கும். மென்மேலும் நம்மால் வாங்க முடியும். ஆபரணங்கள் நம்மிடத்தில் சேர்ந்து கொண்டிருக்கும். செல்வ வளம் பெருகும். நாம் செல்வந்தர் ஆகலாம். லக்ஷ்மி கடாக்ஷம் என்றென்றும் நம்மிடத்தில் இருந்து கொண்டே இருக்கும். திதி வார நட்சத்திர யோக கரணங்கள் என்று மேலே குறிப்பிட்டவை பொதுவானவை.

ஆபரணம் வாங்கும்போதும் வாங்கிய பிறகும் பயன்படுத்தும்போதும் வீட்டிலே அதை வைத்திருக்கும் போதும் செய்ய வேண்டிய தவிர்க்க வேண்டிய விஷயங்களை தெரிந்துகொண்டு, அவற்றையும் கடைபிடிக்க செல்வ வளம் பெருகும். ஆபரணம் சேரும். தங்கம் வெள்ளி வைரம் இரத்தினங்கள் வாங்குவதற்கு சேமிக்க தொடங்குவதற்கு அதை பத்திரப்படுத்துவது பொக்கிஷ அறை கஜானா போன்றவற்றை வீட்டின் எந்த பகுதியில் எதிலே எப்படி சேமிக்க வேண்டும்? செல்வ வளம் பெருக செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டியது இப்படியான இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது இவற்றை அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்து கொண்டு எல்லோரும் செல்வ வளம் பெற்று வளமாக வாழ்வோம். எல்லோருக்கும் லக்ஷ்மிகடாக்ஷம் கிடைக்கட்டும்.

மேலும் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றையும் இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading