தங்கம் வெள்ளி வைர நகைகள் இரத்தினங்கள் வாங்கப் போகிறீர்களா !தப்பித்தவறி கூட இந்த நாட்களில் வாங்கிவிடாதீர். எந்த நாட்களில் வாங்கவே கூடாது?

golden precious oriental jewelry placed on table

செல்வம் சேர லக்ஷ்மி கடாக்க்ஷம் கிடைக்க செல்வந்தராக என்ன செய்ய வேண்டும் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பதிவில் தங்கம் வெள்ளி வைரம் வாங்க மென்மேலும் சேர நிலைக்க பெருக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

நாம் ஒரு பொருளை சேர்க்க வேண்டும் என்று சொன்னால் முதலில் எந்த காலத்தில் எந்த நாளில் எந்த நேரத்திலே வாங்க வேண்டும் ? எப்படி வாங்க வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தவறு செய்துவிடக்கூடாது. அதாவது கூடாத ஆகாத நாளிலேயே செய்யக்கூடிய காரியங்கள் பலன் தருவது கிடையாது. முக்கியமாக தங்கம் வெள்ளி வைரம் போன்ற ஆபரணங்கள் இரத்தினங்கள் இவற்றை எப்போது வாங்க வேண்டும் என்பதை தெரிந்து வாங்க அது மென்மேலும் நாம் வாங்கக் கூடியதாக இருக்கும். நம்மிடத்தில் நிலைக்கும் பெருகும். ஆனால் தகாத கூடாத நாட்களிலே இவற்றை இவற்றை வாங்கி விட்டால் அது நம் கையிலே தங்காது. நம் வீட்டிலே நிற்காது. நம்மை விட்டு போய்விடும். அதனால் முதலில் இப்பதிவிலே எந்த நாட்களில் தங்கம் வைரம் வெள்ளி நகைகள் ஆபரணங்கள் இரத்தினங்கள் வாங்க கூடாது என்பதை பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரத்திற்கு மிக முக்கியமானதாக, அடிப்படையாக இருக்கக் கூடியது பஞ்சாங்கம். திதி வார நட்சத்திர யோக கரணங்கள் என்ற பஞ்ச அங்கங்கள் சேர்ந்ததே பஞ்சாங்கம். இதிலே முதலில் தங்கம் வெள்ளி வைரம் வாங்குவதை தவிர்க்க வேண்டிய திதிகளைப் பார்த்து விடலாம் – சதுர்த்தி திதி நவமி திதி சதுர்த்தசி திதி அமாவாசை பௌர்ணமி இந்தத் திதிகளில் வாங்கக்கூடாது.

வாரம் – செவ்வாய் சனி ஞாயிறு இந்த வாரங்களில் இன்ன பிற அனைத்து அம்சங்களும் சேர்ந்து வந்தாலே ஒழிய ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

நட்சத்திரம் – அஸ்வினி பரணி ரோகிணி மிருகசீரிஷம் புனர்பூசம் ஆயில்யம் பூரம் சித்திரை சுவாதி விசாகம் கேட்டை பூராடம் பூரட்டாதி ரேவதி இந்த நட்சத்திரங்களில் இன்ன பிற அனைத்து அம்சங்களும் மிகச் சரியாக பொருந்தி வந்தாலே ஒழிய ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

யோகம் – யோகங்களில் இருவகை உண்டு. விஷ்கம்பம் என்று தொடங்கக்கூடிய 27 யோகங்கள். அமிர்தயோகம் சித்தயோகம் மரணயோகம் என்பதாக வரக்கூடிய நட்சத்திரம் கிழமை சேர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய யோகம். இதிலே மரண யோகம் என்று சொல்லக்கூடிய நாளிலே ஆபரணம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கரணம் – சகுனி என்ற கரணத்தில் ஆபரணங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பத்திரை என்ற கரணத்தில் விஷ்டி என்று சொல்லக்கூடிய பாகம் ,ஆபரணம் வாங்க கூடாது. விஷ்டி என்பது பத்திரை கரணத்தின் பாதி வரை இருக்கக்கூடியது. இதிலே பகல் நேரத்திலே விஷ்டி என்று சொல்லக்கூடியது பத்திரை கரணத்தின் ஆரம்பத்திலே வரும். அதாவது முன்பாதி. இரவு நேரத்திலேயே பத்திரை கரணத்தின் முடிவிலே வரும். அதாவது பின்பாதி. விஷ்டி என்று சொல்லப்படும் இச்சமயத்தில் ஆபரணங்களை வாங்கக்கூடாது.

இப்பதிவில் தங்கம் வெள்ளி வைர ஆபரணங்கள் இரத்தினங்கள் வாங்குவதற்கு ஆகாத கூடாத திதி வார நட்சத்திர யோக கரணங்களை பார்த்தோம்.

செல்வம் பெருக செல்வந்தராக கடைபிடிக்க வேண்டியவை என்ன ? எக்காலத்திலே ஆபரணங்களை இரத்தினங்களை வாங்கலாம் ?எப்போது வாங்க அது சேரும் ? எப்படி சேர்க்க வேண்டும்? இப்படியான மிக முக்கியமான தகவல்களை அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.

தங்கம் வைரம் வெள்ளி ஆபரணங்கள் இரத்தினங்கள் வாங்க சேர்க்க உகந்த அதிர்ஷ்ட காலத்தை உங்கள் ஜாதகரீதியாக தெரிந்து கொள்ள அணுகவும்.

மேலும் இந்த இணையதளத்தில் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் பண்டிகை விரத நாட்களில் கடைபிடிக்க வேண்டிய மிகச் சரியான வழிமுறைகள் ஆன்மீகம் சம்பந்தமான சந்தேகம் விளக்கங்கள் கேள்வி பதில்கள் இப்படியானவற்றை தொடர்ந்து நாம் தெரிந்துகொள்வோம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிடநிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading