மிதுன ராசி முதல் மீன ராசி வரை குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் 2021-2022

purple and black galaxy illustration

மிதுன ராசி அன்பர்களே. உங்களுடைய ராசிக்கு இதுநாள்வரை அஷ்டம குருவாக இருந்தவர், இப்போது பாக்கிய குருவாக பெயர்ச்சி ஆகிறார். தர்ம கர்மாதிபதிகளான சனி குரு இருவருமே அஷ்டம ஸ்தானத்தில் இருந்தார்கள். இப்போது அதிலிருந்து குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு வறுகிறார்.

உங்களுடைய ராசிக்கு 7 மற்றும் 10-ஆம் இடத்திற்கு அதிபதியானவர் குரு பகவான். ஏழாம் அதிபதி என்ற வகையிலே, அவர் எட்டிலே சென்று மறைவது, நீசம் பெறுவது, சனியோடு சேர்ந்தது அதனால் மணமானவர்களுக்கு வாழ்க்கை துணையிடத்திலே, பொதுவாக உடன் பணியாற்றக் கூடியவர்கள், பழகக்கூடியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் இப்படியானவர்கள் இடத்திலே பகை விரோதம் சண்டை சச்சரவு வம்பு வழக்கு ஏற்பட்டிருந்தால், அவை எல்லாம் இப்போது சரியாகும்.

மணவயது வந்தும் கூட வரன் அமையாமல், திருமணமாகாமல் இருக்கக் கூடியவர்களுக்கு இப்போது எதிர்பார்த்ததை விட சிறந்த வரன் கிடைக்கும், திருமணம் நடக்கும். அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறதே? இந்த சமயத்தில் திருமணம் செய்யலாமா? என்றால், தாராளமாக செய்யலாம். ஒன்று குரு பகவான் இப்போது உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். குரு பலம் இருக்கிறது மற்றது சனிபகவான் உங்களுக்கு அஷ்டமத்திலே இருந்தாலும் அவரே அஷ்டமாதிபதி, பாக்கியாதிபதி. ராசிநாதன் புதனுக்கு நட்பு கிரகம். மூன்றாவது அஷ்டம சனி நடக்கும் போது திருமணம் செய்யக் கூடாது, என்று எங்கும் சொல்லப்படவில்லை.

அடுத்து, குரு பகவான் உங்கள் இராசிக்கு ஜீவனாதிபதி. அவர் எட்டாம் இடத்தில் நீசகதி அடைந்து மறைந்து இருந்தார். அதனால் உத்தியோக ரீதியாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு, சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், தடைபட்டிருந்தால் அதுவெல்லாம் இப்போது கிடைக்கும்.

நல்ல கல்வி திறமை அனுபவம் இருந்தும் கூட வேலை இல்லாதவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் கட்டாயம் உத்தியோகமானது கிடைக்கும். உங்களுடைய கடமைகளை செய்து முடிக்க முடியவில்லையே என்ற ஒரு கவலை, ஆதங்கம் இப்போது தீரும். பிள்ளைகளை நன்றாக படிக்க வைப்பது, உயர் கல்வி சம்பந்தமாக உங்களுக்கு பொருள் உதவி கிடைப்பது, பிள்ளைகளுடைய திருமணத்தை நடத்தி வைப்பது, பெற்றோருக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, குலதெய்வ வழிபாடு, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் இப்படியான கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

மேலும் குரு பகவான் 9-ஆம் இடத்தில் இருக்கும்போது ராசியை பார்க்கிறார். 3, 5 ஆம் இடங்களை பார்க்கிறார். இதிலே ராசியைப் பார்ப்பது விசேஷமானது. எதிர்மறை எண்ணங்கள், தேவையற்ற கவலைகள், பயம், சஞ்சலம், தீய எண்ணங்கள், தீய பழக்கங்கள் இவை அனைத்தும் உங்களை விட்டு அகலும்.

ஐந்தாம் இடத்திற்கு குருபார்வை கிடைப்பதினால், மணமாகிய தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்காமல் தடை தாமதம் ஏற்பட்டு இருந்தால் அந்த தோஷமானது சரியாகி புத்திரப்பேறு கிடைக்கும். கல்வி கேள்விகளில் விருப்பம் ஈடுபாடு அதிகமாகும். தடைபட்ட கல்வியை தொடரமுடியும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களை பாக்கியசாலியாக மாற்றப் போகிறது. எனினும் அஷ்டமசனி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் பாக்கியத்தில் இருந்து குரு தரக்கூடிய பலனை நீங்கள் மிகச் சரியாக திட்டமிட்டு, முயற்சித்து, கவனமாக இருந்து அடைந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் அவசரம், வேகம் கூடாது. விவேகம் வேண்டும். அஷ்டம சனியில் என்னென்ன விஷயங்களில், எப்படியெல்லாம் கவனமாய் இருக்க வேண்டுமோ, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பது நல்லது.

ராகு கேதுக்களை பொறுத்தவரைக்கும் ஆறாம் இடத்தில் கேதுவும், பன்னிரண்டாம் இடத்தில் ராகுவும் இருக்கிறார்கள். 6 ல் கேது – நோய் கடன் எதிரி சம்பந்தமான விஷயங்களில், நல்ல ஆலோசனை, நிதானமாக கவனமாக முடிவுகளை எடுப்பது, பிரச்சினைகளைக் சாமர்த்தியமாக கையாள்வது, இறைவழிபாடு இப்படியான விஷயங்களை கடைபிடிகும்போது சாதகமான பலன் கிடைக்கும்.

12ல் ராகு இருக்கும்போது, உயர்கல்வி நிமித்தமாகவோ, உத்தியோக நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் முயற்சிக்கலாம், பலன் கிடைக்கும்.

இயன்ற போதெல்லாம் ஆலயவழிபாடு, குறிப்பாக தான தருமங்கள் செய்வது நல்லது.

கும்பத்திலே வரக்கூடிய குரு பகவான் உங்களுக்கு தரக்கூடிய பலன் , நீங்கள் செய்யவேண்டிய வழிபாடு இவற்றை கீழ்க்கண்ட கானொளியில் விளக்கி இருக்கிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

மேலும்

கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களையும்,

நற்பலன்களை முழுமையாக அடையும் வழி முறையையும், பாதகமான பலன்களை தவிர்க்க, தற்காத்துக்கொள்ள சூட்சுமங்களையும், வழிபட வேண்டிய தெய்வம், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்றவற்றையும் ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக சொல்லி இருக்கிறோம்.

அக்காணொளிகளுடைய இணைப்பையும் கீழே கொடுத்திருக்கிறோம் பார்த்து பயன்பெறுங்கள்.

ஜாதகம் பார்க்க, வாஸ்து, திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்ரஹ ஹோமம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading