தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுக்கப் போகிறீர்களா கொஞ்சம் இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு கிளம்புங்கள்.தீபாவளியும் புத்தாடையும்

lighted candle lot

தீபாவளிக்கு புத்தாடை எடுக்க திட்டமிடக்கூடிய சமயத்திலே, யார் யாருக்கு எந்த மாதிரியான ஆடைகளை எடுக்க வேண்டும்? எவ்வளவு விலையிலே எடுக்க வேண்டும்? எந்த ஊரில், எந்த கடை வீதியில், எந்த கடையில் எடுக்கவேண்டும்? இப்படியான பல விஷயங்களை திட்டமிடுகிறீர்கள். ஆனால் அந்த புத்தாடை எடுக்கக்கூடிய நாள் மற்றும் நேரத்தை, எப்போது உங்களுக்கு விடுப்பு இருக்கிறதோ ஓய்வு கிடைக்கிறதோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்பதாக விட்டு விடுகிறீர்கள்.

இதிலே நாள் என்பது மிக முக்கியமான ஒன்று. “நாள் செய்வதை நல்லவர்கள் கூட செய்ய முடியாது” என்பதாக ஒரு பழமொழி கூட இருக்கிறது. அதனால், நாம் எப்படி சுபகாரியம் செய்ய, தொழில் வியாபாரம் தொடங்க, வெளிநாடு பிரயாணம் செய்ய நாள் பார்க்கிறோமோ அதுபோல புத்தாடை எடுப்பதற்கும், அதுவும் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதற்கும் கட்டாயம் நாள் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்க்கும்போது, எப்படிப்பட்ட நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படிப்பட்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும்? என்பது முதல்படி. அப்படி தேர்ந்தெடுத்த நாளிலேயே சில குறிப்பிட்ட நேரங்களை தவிர்க்க வேண்டி இருக்கிறது. அதை தவிர்த்து நல்ல நேரத்தில் எடுக்க வேண்டும். இது இரண்டாவது படி.

மேலும் குடும்ப நபர்கள் அனைவருக்கும் புத்தாடை எடுக்க வேண்டுமா? ஒரு சிலர் வேண்டாம் என்றால் அவர்களுக்கு எடுக்காமல் விட்டு விடலாமா? எந்த நிறத்தில் வேண்டுமானாலும் புத்தாடை எடுக்கலாமா? குறிப்பிட்ட நிறங்கள் எதாவது தவிர்க்கப்பட வேண்டுமா? இப்படியான பயனுள்ள தகவல்கள், தீபாவளி புத்தாடை பற்றிய இன்னும் சில விஷயங்கள் கீழ்கண்ட காணொளியில் இருக்கிறது பார்த்து பயன்பெறுங்கள்.

இதுபோலவே தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது, பக்ஷணங்கள் செய்வது, கங்கா ஸ்னானம், கேதாரகௌரி விரதம், லக்ஷ்மி குபேர பூஜை, தீபாவளி அன்றைக்கு வரக்கூடிய அமாவாசை இதிலெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன? இதனுடைய மகத்துவங்கள் யாது? இப்படிப்பட்ட தகவல்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

உங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading