தங்கம் வைரம் வெள்ளி நகை வாங்க, சேர, பெருக – தன திரயோதசியும் தீபாவளியும்

gold and silver round coins on pink box

உங்களுக்கு என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துகள். லக்ஷ்மி கடாக்ஷம் பெற, குறிப்பாக ஆபரணங்கள் சேர உங்களுடைய வசதிக்கு ஏற்ப வைரமோ, தங்கமோ, வெள்ளியோ வாங்க தீபாவளி பண்டிகையில் வரக்கூடிய தன திரயோதசி உகந்த நாளாக இருக்கிறது.

தீபாவளி அன்றைக்கு லக்ஷ்மி குபேர பூஜை என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். தீபாவளி அன்று மாலை இந்த லக்ஷ்மி குபேர பூஜையை செய்வார்கள். இப்படி செய்யும்போது மஹாலக்ஷ்மி தேவிக்கு, புதிதாக வாங்கிய ஆபரணங்களை அணிவித்து பூஜை செய்வது, தங்க வெள்ளி நாணயங்கள் செய்து, வாங்கி அதைக் கொண்டு பூஜிப்பது மிக விசேஷமானது, பலன் தரக்கூடியது .

மஹாலக்ஷ்மி தேவிக்கு வைரம் தங்கம் வெள்ளியில் ஆபரணம் செய்து அணிவிக்கும் போது, அந்த ஆபரணங்கள் நம்முடைய வீட்டிலே மென்மேலும் சேர்ந்து கொண்டே இருக்கும். நிறைய ஆபரணங்களை நாம் வாங்குவோம். அதுவும் சுபகாரியங்கள் செய்ய வாங்குவோம். தங்க வெள்ளி நாணயங்களை வாங்கி, அதைக்கொண்டு லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் போது, அந்த நாணயங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். லக்ஷ்மி கடாக்க்ஷம் பெருகும். நம்முடைய செல்வ நிலை, பொருளாதார நிலையானது உயர்ந்து கொண்டே இருக்கும்.

லக்ஷ்மி குபேர பூஜைக்கு புதிய ஆபரணம், புதிய தங்க வெள்ளி நாணயங்களை கொண்டு பூஜிக்க, இதை வாங்குவதற்கு, தீபாவளிக்கு முன்னதாக வரக்கூடிய திரயோதசி திதி உகந்ததாக இருக்கிறது. இந்த திரயோதசியை தன திரயோதசி என்று சொல்வார்கள்.

லக்ஷ்மி கடாக்ஷம் என்று சொல்லும்போது, பொருள் செல்வம் ஆபரணம் சொத்துக்கள் இது மட்டும் கிடையாது? “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” அதனால் நம்முடைய நோய்கள் அனைத்தும் விலக, நீண்ட காலமாக இருக்கக்கூடிய பிணிகள் கூட நம்மை விட்டு அகல, நாம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற இந்த தன திரயோதசி அன்றைக்கு தன்வந்திரி பகவானுக்கு பூஜை வழிபாடு செய்யவேண்டும்.

தன்வந்திரி பகவான், மகாவிஷ்ணுவுடைய அவதாரங்களிலே, நோயை தீர்க்கக்கூடிய மருத்துவராக, மருத்துவக் கடவுளாக இருக்கிறார். தன்வந்திரி திரயோதசி என்பதாகவும் இந்த நாள் இருக்கிறது.

தீபாவளி பண்டிகை என்று சொல்லும்போது அதற்கு முன்னேயும் பின்னேயும் இது போல மிக விசேஷமான பலன்களை நமக்கு தரக்கூடிய, நம்முடைய தோஷங்களைப் போக்க கூடிய மகத்துவமான நாட்கள் இருக்கிறது. இதைத் தெரிந்து கொண்டு, இயன்ற அளவிற்கு கடைபிடித்து, நல்ல ஆரோக்கியம் பெறுவோம் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுவோம்.

கீழ்க்கண்ட காணொளியில் தீபாவளிக்கு முன்னே, தீபாவளியன்று, தீபாவளிக்கு பின்னே வரக்கூடிய விசேஷமான நாட்களைப் பற்றியும் , தீபாவளி அன்றைக்கு செய்யவேண்டிய அமாவாசை வழிபாடு பற்றியும் சொல்லியிருக்கிறோம். பார்த்து பயன் பெறுங்கள்.

இதுபோல, பண்டிகை விரதம் நோன்பு ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் இப்படியான விஷயங்களைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் தெரிந்து கொள்வோம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம் செய்ய அணுகவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading