உங்களுடைய மேஷ ராசிக்கு பத்தாம் இடமான மகரத்தில் இருந்து பதினோராம் இடமான கும்பத்திற்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். 9 மற்றும் 12-ம் இடத்திற்கு குரு பகவான் அதிபதி. பன்னிரெண்டாம் அதிபதி 11ஆம் இடத்திற்கு செல்கிறார் என்பதனால் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த உத்தியோக நிமித்தமான வேலைப்பளு அலைச்சல் நிறைய பயணங்கள் போன்ற விஷயங்கள் இப்போது சரியாகும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி இலாபம் அதிகமாகும்.
வெளி நாட்டில் வசிக்கக் கூடியவர்கள் சொந்த ஊருக்கு வர முயற்சிக்கும் போது அதற்குண்டான வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களுக்கு அதற்குண்டான அனுமதி கிடைக்கும். குருபகவான் பதினோராம் இடத்தில் இருக்கக் கூடிய இந்த காலம் குருபலம் இருக்கக் கூடிய காலம். நீங்கள் விருப்பபடக்கூடிய நல்ல விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும்.
9-ஆம் இடத்திற்கும் இந்த குரு பகவான் அதிபதியாய் இருக்கிறார். ஒன்பதாம் வீட்டிற்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். நீங்கள் உங்களுடைய முக்கியமான கடமைகளை நிறைவேற்றுவதற்கு உண்டான முயற்சிகளை இந்த காலகட்டத்திலே செய்யலாம். பிள்ளைகளுடைய திருமணம், வீடு கட்டுவது இந்த காரியங்களுக்கான முயற்சிகளை செய்யும்போது பலன் கிடைக்கும். இதுநாள்வரை தடைப்பட்ட திருமணம், புத்திரப்பேறு, சொந்த வீடு வாங்குவது இப்படியான விஷயங்கள் இப்போது எளிதாக கைகூடும்.
பதினோராம் இடத்தில் குருபகவான் இருக்கின்ற இந்த காலக்கட்டத்திலே பத்தாமிடத்தில் சனி பகவான் இருக்கிறார். அதனால் உத்தியோக ரீதியாக தற்காலிக பணியில் இருக்க கூடியவர்களுக்கு பணி நிரந்தரம் ஆகக்கூடிய வாய்ப்பானது இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு இப்போது சரியான வேலை கிடைக்கும். கடமைகளை செய்வதற்கு நேரம் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கடமையை செய்யக்கூடிய அனுகூலமான யோகமானது கிடைக்கும்.
ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும் எட்டாம் இடத்தில் கேதுவும் இருக்கிறார்கள். இதுநாள்வரை இரண்டாம் இடத்தில் இருந்த ராகுவை பத்தாம் இடத்தில் இருந்த குருபகவான் பார்த்தார். அதனால் ராகு 2ல் இருந்து உங்களுக்கு பெரிய கெடுதலை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது குரு பகவான் 11-ஆம் இடத்திற்கு வருகிறார். இது சாதகமான அம்சம் எனினும் குரு பகவானுடைய பார்வை ராகுவின் மீது விழவில்லை. அதனால் வாக்கு ஸ்தானத்திலே கவனம் தேவை. சக்திக்கு மீறிய விஷயங்களை செய்வதாக பிறருக்கு வாக்கு கொடுக்கக்கூடாது. வாக்குவாதம் செய்யக் கூடாது. கோபமான பேச்சு கூடாது. குடும்ப நபர்களை உடன் பணியாற்றக்கூடியவர்களை பழகக்கூடியவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும்.
பணம் வரும் போது முதலிலே கடனை அடைப்பது, செய்யவேண்டிய செலவுகளை செய்வது இப்படியானவற்றை செய்துவிட வேண்டும். தம்பதிகள் தங்களுக்கிடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. எட்டாம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். அதனால் குழப்பமான சமயத்திலே முடிவெடுக்கக் கூடாது. எதையும் முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் இந்த காலகட்டத்திலே ஒரு முடிவுக்கு வரக்கூடாது. தேவையற்ற கவலை சஞ்சலம் பயம் போன்ற விஷயங்களை தவிர்க்க தினசரி ஆலய வழிபாடு செய்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களை அவ்வப்போது தவிர்க்க மனதிலே தெளிவு இருக்க தியானம் செய்வது நல்லது. இந்த குருபெயர்ச்சி காலத்திலே தினசரி ஆலய வழிபாடு செய்ய வேண்டும். இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடித்தால் மிகச் சிறந்த பலனை அடைவீர்கள்.
கும்ப ராசிக்கு வரக்கூடிய குரு பகவான் உங்களுக்கு தரக்கூடிய மேலும் பல பலன்களையும், விசேஷமான தகவல்களையும் கீழ்க்கண்ட காணொளியில் விளக்கி இருக்கிறோம். அதையும் பார்த்து பயன்பெறுங்கள்.
ரிஷபம் முதல் மீனம் வரை உள்ள 11 ராசிகளுக்கும் அடுத்தடுத்த பதிவுகளில் பலன்களை பார்க்கலாம்.
ஜாதகம் பார்க்க, வாஸ்து பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவக்கிரக ஹோமம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply