சரஸ்வதி பூஜை துர்காஷ்டமி நவராத்திரி கொலு கலசம் PART 4

art festival travel statue

கொலு-கலசத்தில் என்ன சேர்க்கணும்? பூஜைக்கு பிறகு அதை என்ன செய்யனும்?

கலசம் வைத்து பூஜை ஹோமங்கள் செய்து அக்கலச தீர்த்தத்தை ஸ்வாமிக்கு, கும்பத்திற்கு அபிஷேகம் செய்வது என்பது மிக விசேஷமானது. அதுபோல மனிதர்களுக்கும் கிரஹ தோஷங்கள் போக, பாவ கர்மாக்கள் தொலைய கலச அபிஷேகம் செய்வதும் நடைமுறையில் விசேஷமான பலன்களை தரக்கூடியதாய் இருக்கிறது.

புரோஹிதர் மூலமாக கலசம் வைப்பது உத்தமம். கலசம் வைத்தால் பிரதி தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை நைவேத்யம் செய்யவேண்டும். மடி விரதம் ஆசார அனுஷ்டானங்களை விதிப்படி கடைபிடிக்க வேண்டும்.

கலசத்திற்குள்ளே இருக்கவேண்டியது பூஜைக்குப்பின் அதை என்ன செய்வது என்பதை கீழ்க்கண்ட கானொளியில் சொல்லியிருக்கிறோம். பார்த்து பிறருக்கும் பகிருங்கள்.

13.10 புதன் துர்காஷ்டமி தேவி பாகவதம் சண்டி ஹோமம் துர்காஷ்டமி அன்று என்ன செய்ய வேண்டும்? எந்த தோஷங்கள் போகும்? எவ்வித யோகங்கள் கிடைக்கும்? About Dhurgashtami

கணபதி ஹோமம் தொடங்கி எவ்வளவோ ஹோமங்கள் இருக்கிறது. அதில் சண்டி ஹோமம் மகத்தானது. ஆனால் அவ்வளவு எளிதல்ல. பெரும்பாலும் நவராத்திரி காலங்களிலே செய்வர். அதுபோல தேவி பாகவதம் மிக மிக விசேஷமானது. இதுவும் பெரும்பாலும் நவராத்திரி காலத்திலே பாராயணம் செய்யப்படுவது. துர்காஷ்டமி நாளிலே இவற்றை செய்யக்கூடிய பேறு பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

துர்காஷ்டமி பற்றிய சில தகவல்களை கீழ்க்கண்ட கானொளியில் கூறியிருக்கிறோம். கண்டு அன்னையின் அருள் பெறுங்கள்.

14.10 வியாழன் மஹாநவமி / சரஸ்வதி பூஜை அறிந்ததும் அறியாததும் கல்வி கலை விளையாட்டு அரசியல் வியாபாரம் சுயதொழிலில் வெற்றிபெற என்ன செய்யவேண்டும்? வெற்றிக்கு பின் என்ன செய்யக்கூடாது?

லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்தவை என பல பொருட்கள் இருக்கிறது. அவற்றை கொடுக்கும்போதும் பெறும்போதும் பயன்படுத்தும்போதும் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கிறது. அதுபோல உலகிலே இருக்கின்ற அனைத்து பொருட்களிலும் சரஸ்வதி தேவியின் அருள் இருக்கிறது. எந்த ஒரு பொருள் உருவாக வேண்டும் என்றாலும் அதை கண்டுபிடிக்கக் கூடிய தயாரிக்கக் கூடிய கலைத்திரனானது வித்தையானது சரஸ்வதி தேவியின் அணுக்ரஹம் மூலமாகவே சாத்தியம் ஆகின்றது. ஆகவே

நன்றி செலுத்தும் விதமாக கல்வி கலை வித்தையை மென்மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாக சரஸ்வதி பூஜையை விசேஷமாக கொண்டாடுவோம்.

சரஸ்வதி பூஜை பற்றிய மேலும் பல தகவல்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கின்றது. பார்த்து பயனடையுங்கள்.

சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading