உங்க வீட்டு கொலுவுக்கு அம்பாள் எப்படி வருவாள் தெரியுமா? கொலுவிலே அத்தியாவசியமானவர் யார்? நவராத்திரி கொலுவிற்கு அவசியம் அழைக்கப்பட வேண்டியவர் யார்? கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவர் யார்?
நவராத்திரி பூஜை கொலுவிற்கு ஒருவரை அழைக்க வேண்டுமென்றால் அதற்குண்டான தகுதி என்று ஏதாவது இருக்கிறதா? ஆம் இருக்கிறது. அது,மெத்தப்படித்தவர் பெரிய பதவியிலே இருப்பவர் செல்வந்தர் முக்கியஸ்தர் இப்படியான தகுதிகள் கிடையாது. இதுவெல்லாம் இருக்கிறதோ இல்லையோ அவர் ஆஸ்திகாராக இருந்தால் போதுமானது.
அதுபோல வீட்டிற்கு , கொலுவிற்கு வரக்கூடிய நபர்களிடையே, அவர்களை நாம் கவனிப்பதிலோ தாம்பூலம் கொடுப்பதிலோ உயர்ந்தவர் சாதாரணமானவர் என்ற பேதம் பார்க்கக்கூடாது. பெண்கள் அனைவரும் அம்பிகையின் அம்சமே.
இப்படியான தகவல்கள் கீழ்க்கண்ட காணொளியிலே சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.
கணவனை இழந்த பெண்களை நவராத்திரி பூஜை, கொலுவிற்கு அழைக்கலாமா? கூடாதா? கொலு நவராத்திரி பூஜைக்கு பெண் குழந்தைகளை மட்டும்தான் அழைக்கணுமா? ஆண் குழந்தைகளை கூப்பிடக்கூடாதா?
பிறப்பு இறப்பு தீட்டுகளின்போது புன்யாஹவாஜனம் செய்து தீர்த்தம் மூலம் தோஷங்களை கிருமிகளை அப்புறப்படுத்துவோம். வீடுகட்ட தொடங்கும்போது , வீடுகட்டி குடியேறும் முன்பு அஷ்டதிக் பலி பூஜை வாஸ்து பூஜை செய்து துர்சக்திகளை விரட்டுவோம்.
பூஜைகளின்போது பூஜைமணி அடிப்பது போன்ற சடங்குகளால் ராக்க்ஷசர்களை தீய சக்திகளை வரவிடாது தடுத்து அப்புறப்படுத்துவோம்.
ஆனால், அறியாமையால் சிலர் அழைக்கப்பட வேண்டியவர்களை தவிர்க்கிறார்கள்.
நம்முடைய சனாதன தர்மத்திலே மனிதகுலம் பிறக்க வளர வாழ தன்னுயிரையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்பு தியாகங்கள் பல செய்து, காரணாமாக இருக்கின்ற ஆதிபராசக்தி அம்சமான பெண்மணிகள் கணவனை இழந்துவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை ஒதுக்கினால் தவிர்த்தல் புறக்கணித்தால் அவமரியாதை செய்தால் பிராயச்சித்தமே இல்லாத தோஷம் பாவம் ஏற்படும் என்று சொல்கிறது. எனவே இவர்களின் ஆசியானது நமக்கு மிக மிக முக்கியமானது என்பதை அறிவோம்.
இதுபற்றிய கூடுதல் தகவல்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. அறிந்து கடைபிடியுங்கள்.
இந்த பொருட்களை தாம்பூலமாக கொடுத்தால் லக்ஷ்மி கடாக்ஷம் போய்விடும்… தோஷம் ஏற்படும் ….இந்த பொருட்களை தாம்பூலமாக கொடுத்து அம்பிகையின் அருளை பெறுங்கள்-கொலுவுக்கு வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள்
தாம்பூலம் என்பது கொடுப்பவருக்கு மட்டுமல்லாமல் பெறுபவருக்கும் சௌபாக்கியத்தை தரவல்லது. எனவே இதிலே தவறு நேர்ந்தால் இரு சாராருக்கும் தோஷம் ஏற்படுகிறது. பிறருக்கு தோஷம் ஏற்பட காரணமாக இருந்தோம் என்பதால் அது கூடுதல் தோஷத்தை தருகிறது. அதனாம் தாம்பூலம் கொடுப்பதிலே மிக கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
தாம்பூலம் என்று சொன்னாலே மங்கலப் பொருட்களைத்தான் கொடுக்கவேண்டும். அதனால் தரவேண்டியது எது ? தவிர்க்க வேண்டியது எது என்பதை தெரிந்து ,கொடுத்து சகல சௌபாக்கியமும் பெறுங்கள். இதுபற்றிய தகவல்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. பார்த்து பயன்பெறுங்கள்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply