03.10.2021 ஞாயிறு ஸன்யஸ்த மஹாளயம்
பெற்றோரோ தாத்தா பாட்டியோ இருக்கும்போது அவர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டியது எப்படி நம் கடமையோ அதுபோல அவர்கள் இறந்த பிறகும், இறந்த திதி அன்றைக்கு ஸ்ரார்தம் செய்யவேண்டியது மாதந்தோறும் அமாவாசை அன்று தர்ப்பணம் விடவேண்டியது கடமை.
அதுபோல நம் குடும்பத்திலே பிறந்த எந்த ஒரு நபருக்கும் இப்படியான பித்ரு கர்மாக்களை செய்யத் தவறிவிடக்கூடாது. ஒருவேளை இறந்து போனாரா? போயிருந்தால் எந்த திதி அன்றைக்கு இறந்தார்? என்பது தெரியாத நபருக்கும் கூட தென்புலத்தார் வழிபாட்டை செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஸன்யஸ்த மஹாளயம் என்ற இந்த ஒருநாளை மஹாளயபக்க்ஷ காலத்திலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இதைப்பற்றிய கூடுதல் விபரங்களும் இன்னும் சில விஷயங்களும் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. கண்டு பயனடையுங்கள்.
04.10.2021 திங்கள் கஜச்சாயை.கஜச்சாயை என்றால் என்ன? அன்று என்ன செய்ய வேண்டும்?
யானையுடைய நிழல் என்பதாக பொருள்படும். சூரிய சந்திரர்கள் ராகு கேது எனும் நிழலால் கிரஹணம் அடைவது போல நம் முன்னோருக்கு அவர்களுடைய ஆத்மாவிற்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க அவர்கள் நற்கதி அடைய அதன்மூலம் நாம் ஆசிபெற இந்த கஜச்சாயை நாளிலே தர்ப்பணம் திவசம் தானம் தர்மம் செய்யவேண்டும். இப்படியான இன்னும் சில தகவல்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
05.10.2021 செவ்வாய் ஸஸ்த்ரஹத மஹாளயம்
இயற்கையாக மரணம் அடைந்த முன்னோருக்கு தர்ப்பணம் திதி கொடுப்பது போல துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாமா? கூடாதா? அவர்களின் படத்தை நம்வீட்டிலே வைத்துக்கொள்ளலாமா? கூடாதா? இப்படியான நிறைய கேள்விகள் இருக்கிறது.அதற்கு தனியாக ஒரு பதிவு போடுகிறோம்.
இப்படியான அகால மரணம் அடைந்தவருக்கு ஸஸ்த்ரஹத மஹாளயம் அன்று எந்த ஒரு தயக்கமும் பயமும் இன்றி ஸ்ரத்தையாக திதி தர்ப்பணம் கொடுக்கலாம். கொடுக்கவேண்டும். இதைப்பற்றிய மேலும் சில கருத்துகள் கீழ்க்கண்ட கானொளியில் உள்ளது. கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply