சந்திரன் சூரியனை அடையும்போது அமாவாசை உண்டாகிறது. மாதந்தோறும் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. கடகத்திலே சூரிய சந்திரன் இணைய ஆடி அமாவாசை. இதில் சந்திரன் தன் வீட்டில் இருக்கிறார். இது தக்க்ஷாணாயன புண்யகால ஆரம்பம். இம்மாதம் அதிக காற்று வீசும் மாதம் . “ஆடிக்காற்றிலே அம்மியும் பறக்கும்”. நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள காலம். விவசாயம் தொடங்கும் காலம். “ஆடிப்பட்டம் தேடி விதை”.
மகரத்திலே சூரிய சந்திரன் இணைய தை அமாவாசை. இதில் சந்திரன் தன்வீட்டை பார்க்கிறார். இது உத்தராயண புண்யகால தொடக்கம். அறுவடை செய்யும் காலம். “தை பிறந்தால் வழி பிறக்கும்”.
கன்னி இராசியிலே சூரிய சந்திரன் இணைய புரட்டாசி அமாவாசை/மஹாளய அமாவாசை. இந்த கன்னி இராசி காலபுருஷனின் ஆறாம் வீடு. ஆறாமதிபதி புதன் ஆட்சியோடு மூலத்திரிகோணம், உச்சபலம் அடையும் இடம். நவகிரஹங்களிலேயே முழுமையான சுபர்களான குரு சுக்ரன், மனை வீடு மணப்பேறு தரும் அங்காரகன் மூவருக்கும் பலம் குறையும் இடம்.
கன்னியிலே சுக்ரன் நீசம். குரு பலம் குறைவு. அங்காரகனோ “கன்னி செவ்வாய் கடலையே வற்ற வைக்கும்” என கடல் போன்ற சொத்துக்களையும் கரைத்து விடுகிறார்.
ஆறாமிடம் கொடிய நோய்கள் கடன் விபத்து எதிரிகளை தருமிடம் இவ்வதிபதி பலம்பெறுவது, சொத்து சுகம் திருமணம் புத்திப்பேறு தரவேண்டிய கிரஹங்கள் பலம் குறைவது. இப்படியான தோஷங்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இறையருளோடு பித்ருக்களின் ஆசியும் தேவை.
மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் திதி தான தர்மம் செய்து முன்னோர் ஆசி பெறுங்கள்.
மஹாளய அமாவாசை கடமைகள் மகத்துவங்கள் பற்றிய மேலும் சில பயனுள்ள தகவல்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. கண்டு கேட்டு பயனடையுங்கள்.
இறந்துப்போன நம் முன்னோர் இன்னொரு பிறவி எடுத்துவிட அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கவேண்டியது அவசியமா? இதற்கான விளக்கம் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. பார்த்து அறிந்து கொள்ளுங்கள் .
மஹாளய பக்க்ஷம் மஹாளய அமாவாசை பற்றியும் இறந்த நம் முன்னோர் வழிபாடு சம்பந்தமான நிறைய தகவல்களை இப்பதிவிலும், கடந்த ஆறு ( 6 ) பதிவுகளிலும் பார்த்தோம்.
நவராத்திரி நவராத்திரி கொலு சம்பந்தமான பயனுள்ள அறிய தகவல்களை இனி வரும் பதிவுகளிலே பார்ப்போம்.
கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க அணுகவும் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply