மஹாளயபக்க்ஷம் DO’S & DON’TS பகுதி 5

வருடா வருடம் பெற்றோருக்கு திதி கொடுக்கனுமா? ஒருமுறை கயையில் திதி கொடுத்துவிட்டால் போதுமா? கயையிலே ஒருமுறை கொடுத்தால் நூறுமுறை கொடுத்த மாதிரியா? திவசத்தை full and final settlement செய்யலாமா?

கையிலே ஸ்ரார்தம் செய்யவேண்டும் என்பது கடமை.செய்வது என்பது அரிது. எல்லோருக்கும் அப்பேறு எளிதில் கிடைத்துவிடுவது இல்லை. அப்படி கொடுத்து விட்டாலும் பெற்ரோர் இறந்த திதி அன்று வருடா வருடம் கட்டாயம் ஸ்ரார்தம் செய்யவேண்டியது அவசியம் என்பதின் விளக்கத்தையும் மேலும் சில விஷயங்களையும் கீழ்க்கண்ட கானொளியில் சொல்லி இருக்கிறோம். கேட்டு கடைபிடிக்க வேண்டுகிறோம்.

மத்யாஷ்டமி- திதி தெரியாதவருக்கு திவசம் செய்வது எப்படி? ஸ்ரார்தம் தடைபட்டால் மீண்டும் செய்யலாமா,எப்போது? திதி கண்டுபிடிக்க முடியவில்லையா? இதோ வழி.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம். பதினைந்து திதிகளிலே நடுவிலே வரக்கூடியதாக அஷ்டமி திதி இருக்கிறது. அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருக்கிறார்கள். பௌர்ணமி அன்று சமசப்தமமாக ஒருவருக்கொருவர் நேரெதிராக உள்ளனர். இதிலே அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் நடுவிலே இருக்கக்கூடியதாக அஷ்டமி திதி இருக்கிறது. அதனாலும் மேலும் பல காரணங்களாலும் திதி தெரியாதவருக்கு மத்யாஷ்டமி அன்று திவசம் செய்யலாம்.

அதுபோலவே எக்காரணம் கொண்டும் பெற்றோருக்கு செய்யவேண்டிய ஸ்ரார்தத்தை விட்டுவிடக்கூடாது. தவிர்க்க இயலாத நிலையிலே தடை பட்டாலும் அதை செய்துவிடவேண்டும். அப்படி செய்வதற்கு இந்த அஷ்டமி திதி விசேஷமானதாக இருக்கிறது. இப்படியான விளக்கங்களும் மேலும் பல விஷயங்களும் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. பார்த்து பயன்பெறுங்கள்.

அவிதவா நவமி-திருமணத்தடை விலக, பெண்கள் சகல சௌபாக்கியமும் பெற இந்நாளை தவறவிடாதீர்… தாயாருக்கு திதி கொடுக்கலையா? விளைவு எது? பரிகாரம் என்ன?

திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு முன்னதாக சுமங்கலி பூஜை செய்வது நம் வழக்கம். சுமங்கலியாக இறந்தவர்கள் ஆசிபெறும் பொருட்டும் இது கடைபிடிக்கப்பட்டது. இக்காலங்களிலே சுமங்கலி பிரார்த்தனை அறவே குறைந்துவிட்டது. அதனால் நிறைய குடும்பங்களிலே திருமணத்தடை, புத்திரப்பேறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

எனவே சுமங்கலியாக இறந்தவர்களுக்கான வழிபாடுகளை செய்து சகல சௌபாக்கியம் பெறமுடியும். இப்படியான தகவல்களும் இன்னும் பல செய்திகளும் கீழ்கண்ட இணைப்பிலே (link) இருக்கிறது. பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

https://www.facebook.com/1682506325327738/posts/3075930942651929/

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading