தந்தை தாயார் இறந்த திதி அன்று இறைவழிபாடு இல்ல பூஜைகள் செய்ய வேண்டுமா? கூடாதா? வழிபடலாம் எனில் எது முதலில்? பித்ரு கர்மாவா? கடவுள் பூஜையா?
அமாவாசை தர்ப்பணம் பெற்றோருடைய திவசம் செய்யும்போது நெற்றிக்கு இட்டுக் கொள்ளலாமா? பூஜையறையிலே விளக்கேற்றலாமா? வாசலில் கோலமிடலாமா? இப்படியான நிறைய சந்தேகங்கள் கேள்விகள் இருக்கிறது. தர்ப்பணம் ஸ்ரார்தம் போன்ற பித்ரு கர்மாக்களை செய்து முடித்த பிறகு மேலே கேட்டவற்றை செய்யலாம்.
பெற்றோருடோய திதி வரும் நாளிலே பண்டிகையோ நோன்போ வந்தால் அதை தவிர்க்கவேண்டுமா? செய்யலாமா? செய்யலாம் எனில் எது முதலில்? பண்டிகையை தவிர்க்க வேண்டிய அவசியமில்ல. முதலில் முன்னோர் வழிபாட்டை செய்து பிறகு தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் அவற்றிற்கான பதில்கள் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. கண்டு அறிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் திதி தர்ப்பணம் கொடுக்கலாமா? கூடாதா? பித்ரு கர்மாக்களை பெண்கள் செய்யலாமா? குருவின் வயது ? மனைவி கணவனுக்கு திவசம் செய்யலாமா? தர்ப்பணம் விடலாமா? குருவின் வயது என்ன?
நமது சனாதன தர்மத்திலே ஆண்களுக்கென்று சில கடமைகளையும் பெண்களுக்கென்று சில கடமைகளையும் வகுத்திருக்கிறார்கள். இதிலே ஆண்களின் கடமையாக தர்ப்பணம் திதி கொடுப்பது போன்றவை உள்ளது. ஆனால் சில சமயங்களிலே பெண்கள் செய்யலாம். இது சம்பந்தமான விளக்கமும் மேலும் சில விஷயங்களும் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. கண்டு அறிந்து கொள்ளுங்கள்.
பெற்றோர் திதியை மஹாளயத்திலே சேர்த்து விடலாமா? பெற்றோருக்கு மஹாளயத்தில் திதி கொடுத்தால் இறந்த திதி செய்ய வேண்டாமா? இறந்த திதி கொடுத்தால் மஹாளயத்திலே செய்ய வேண்டாமா? மஹாளய பக்க்ஷத்தின் சிறப்பு எது?
பெற்றோர் இறந்த திதி மஹாளயபக்க்ஷம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? மறந்தவர்க்கு மஹாளயம் என்பதின் பொருள் யாது? இப்படியான இன்னும் சில கேள்விகளும் அவற்றிற்குண்டான பதிலும் கீழ்க்கண்ட கானொளியில் இருக்கிறது. கண்டு அறிந்து கொள்ளுங்கள்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply