மஹாளயபக்க்ஷம் மஹாளய அமாவாசை – PART 3

PART 1 பதிவிலே – மஹாளய பக்க்ஷ காலம் எது? மஹாளயபக்க்ஷ விரதத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும்? ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? என்பனவற்றை அறிந்து கொண்டோம்.

பார்ட் 2 பதிவிலே – மஹாளயபக்க்ஷ விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? மஹாளயபக்க்ஷ காலத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவையெவை? பித்ரு தோஷமும் மஹாளயபக்க்ஷம் மூலம் தீர்வும்! மற்றும் மஹாளயபக்க்ஷ மகத்துவங்களை தெரிந்து கொண்டோம்.

இப்பதிவிலே மேலும் பல பயனுள்ள தகவல்களை பார்ப்போம் வாருங்கள்.

ஒருதாய் தந்தைக்கு பிறந்த பிள்ளைகளிலே எந்த பிள்ளை (மகன்) அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கவேண்டும்? தாய்க்கு தலைமகன் தந்தைக்கு இளையமகன் திவசம் கொடுக்கவேண்டும் என்பதாக சிலர் கடைபிடிக்கிரார்கள். மூத்தமகனே இதற்கு பொறுப்பு. அவரே தாய் தந்தை இருவருக்கும் ஸ்ரார்தம் கொடுக்கவேண்டும் என்பதாக சிலர் கடைபிடிக்கிறார்கள். ஆனால் தலைமகனோ கடைமகனோ நடுமகனோ பாகுபாடில்லாமல் ஒருதாய் தந்தைக்கு பிறந்த எல்லா பிள்ளைகளும் (எத்தனை மகன் இருந்தாலும்) அவர்களுக்கு மஹாளயபக்க்ஷகடமை, அமாவாசை தர்ப்பணம், வருடாந்திர திதி என அனைத்தையும் தவறாது முறைப்படி செய்யவேண்டும்.

சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பெற்றோருக்கு திவசம் செய்யவேண்டுமா? தனித்தனியாக செய்யவேண்டுமா? பெரும்பாலானவர்கள் மூத்த சகோதரன் வீட்டிலே ஒன்றாக கூடி தங்களின் பெற்றோருக்கான ஸ்ரார்தத்தை செய்கிறார்கள். அடுத்து பெற்றோர் இருந்த வாழ்ந்த வீட்டிலே அனைவரும் சேர்ந்து திவசம் கொடுக்கிறார்கள். அதுபோல பெற்றோர் கடைசியாக எந்த மகனிடத்திலே இருந்தார்களோ அந்த வீட்டிலே கூடி திதி கொடுக்கிறார்கள். மேலும் பெற்றோர் இறந்த வீட்டில் பிள்ளைகள் அனைவரும் கலந்து ஸ்ரார்தம் செய்கிறார்கள். ஆனால் ஒருதாய் தந்தைக்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அத்தனை பேரும் அவரவருடைய வீட்டிலே தங்கள் பெற்றோருக்கு மஹாளயபக்க்,ஷ வருட ஸ்ரார்தம் செய்யவேண்டும்.

பெற்றோருக்கான திவசத்தை வீட்டிலே செய்ய வேண்டுமா? புண்ய க்ஷேத்ரம் புண்ய தீர்த்தத்திலே செய்ய வேண்டுமா? மிகச்சிலர் பித்ரு காரியங்களை எதோ அசுபகாரியம் என நினைத்து தந்தை தாய் இறந்த திதி அன்று புண்ய க்ஷேத்ரம் சென்று புண்ய தீர்த்தத்திலே அவர்களுக்கான திவசத்தை செய்கிறார்கள், ஆனால் அப்படி கிடையவே கிடையாது. இது புண்ய காரியம். சிலர் வீட்டிலே செய்து பழக்கமில்லை என்று பொது இடங்களிலே செய்கிறார்கள், அதுவும் உத்தமம் அல்ல. பலர் வீட்டிலே ஸ்ரார்தத்திற்கான ஏற்பாடுகளை,சமையலை செய்ய ஆளில்லை என்று வெளி இடங்களிலே செய்கிறார்கள், இயன்றவரை முயன்று வீட்டில் செய்வது நல்லது.

தந்தையோ தாயோ இறந்த திதி அன்றுதான் அவர்களுக்கு திவசம் செய்யவேண்டுமா? அமாவாசை, அதுபோல தர்ப்பணம் விடவேண்டிய ஏனைய நாட்களில் மட்டும்தான் தர்ப்பணம் விடவேண்டுமா? எப்போதெல்லாம் ஸ்ரார்தம் செய்யலாம் என்று தோன்றுகிறதோ, விருப்பம் வருகிறதோ,செய்துவைக்க தகுதியான வேத வித்தாக இருக்கக்கூடிய வாத்தியார் கிடைக்கிறாரோ,திதி கொடுப்பதற்கான உயர்ந்த சிறந்த சூழல் அமைகிறதோ அப்போதெல்லாம் திவசம் செய்யலாம். தர்ப்பணம் விடலாம்.

மஹாளயபக்க்ஷம், அமாவாசை,பெற்றோர் ஸ்ரார்தம் சம்பந்தமாக இதுபோன்ற பயனுள்ள தகவகள் நிறைய இருக்கிறது. அவற்றை அடுத்தடுத்த பதிவுகளிலே அறிந்துகொள்வோம்.

மேலும் தொடர்ச்சியாக வரக்கூடிய விரதங்கள் பண்டிகைகள், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை இவ்வலைத் தளத்திலே குருவருளாலும் திருவருளாலும் தொடர்ந்து பதிவிடுவோம். படித்து பயன் பெறுங்கள்.

கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, ஸ்ரார்தம் (திவசம்) செய்து வைக்க அணுகவும் .

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading