புரட்டாசி மாத ராசிபலன்கள்

low angle photo of brown temple

புரட்டாசி மாதம் என்பது சூரிய பகவான் கன்னி ராசியிலே சஞ்சரிக்கின்ற மாதம். கன்னி ராசி என்பது காலபுருஷ தத்துவப்படி ஆறாம் ராசி. ஆறாமிடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். அதாவது நோய் கடன் எதிரி. இதிலே நோய்கள் ஏற்படக்கூடிய மாதமாக இப்புரட்டாசி மாதம் அமைகிறது. உதாரணமாக தட்ப வெப்ப நிலை நம்முடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இப்புரட்டாசி மாதத்தை “பொன்னுருக காயும் மண்ணுருக பேயும்” ( பொன் உருகும் அளவு வெய்யிலும் மண் கரையும் அளவு மழையும் ) என்பார்கள். இதைக்கொண்டு சீதோஷ்ண நிலையிலே மாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பது தெரிகிறது.

பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரையுள்ள காலம் மஹாளயபக்க்ஷம். (பதினைந்து நாட்கள்) பித்ருக்களுக்கான தர்ப்பணம் திவசம் தான தர்மம் செய்யவேண்டும். அமாவாசையிலிருந்து தசமி வரையுள்ள காலம் நவராத்திரி/விஜயதசமி. (பத்து நாட்கள்) துர்கா லக்ஷ்மி சரஸ்வதி தேவியருக்கு விரதமிருந்து கொலுவைத்து வழிபட வேண்டிய காலம். புரட்டாசி சனிக்கிழமைகள் ஏழுமலையானுக்கு மாவிளக்கு பாதயாத்திரை குடை என்று கொண்டாட வேண்டிய நாட்கள். (நான்கு நாட்கள்) இப்படி மாதம் முழுக்க பூஜை விரதம் வழிபாடு என வருவது புரட்டாசி மாதத்தின் சிறப்பு.

இப்படியாக பித்ரு கடமைகள், நவராத்திரி பூஜை, புரட்டாசி சனிக்கிழமை விரதம் என இம்மாதம் முழுவதும் வழிபாடு செய்ய வேண்டியதாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் முன்னோர் ஆசியும் இறை அருளும் நமக்கு கிடைக்கின்றது.

இப்படியான ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருப்பது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கே. எப்படி என்றால் வழிபாடு என்று வந்து விட்டாலே கட்டுப்பாடுகள் விரதம் என்பது முக்கியமானதாக ஆகிவிடுகிறது. அவற்றை நாம் கடைபிடித்தால் நிலையற்ற சீதோஷ்ண நிலை இருந்தாலும் பாதிப்புக்கு உள்ளாக மாட்டோம். பலமாக இருப்போம்.

முக்கியமாக அசைவ உணவை தவிர்க்க வேண்டியதாக இம்மாதம் இருக்கின்றது. இதுவும் நம் நலன் கருதிதான் சொல்லப்பட்டது. வியாதிகளை தடுக்க விரதங்கள் அறிவுறுத்தப்பட்டது.

வியாதி தவிர்க்க விரதம் இரு

விரத நாளிலே விதியை மீறாதே

புரட்டாசியிலே புலால் உண்ணாதே

மஹாளயபக்க்ஷம் நவராத்திரி புரட்டாசி சனி இவற்றை கடைபிடிப்போம் கடைத்தேருவோம்.

இனி புரட்டாசி மாத ராசிபலன்களை பார்ப்போம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading