மகர குரு பலன்கள் MAGARA GURU PALANGAL

bread food salad red

ஆவணி 29 (14.09.2021) ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு வக்ர கதியிலே பெயர்கின்ற குருபகவான் புரட்டாசி 27 (13.10.2021) ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து ஐப்பசி 27 (13.11.2021) ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஏறக்குறைய இரண்டு மாதகாலம் மகர ராசியிலே சஞ்சரிக்கின்ற குருபகவான், முதல் ஒருமாதகாலம் வக்ரகதியிலும், அடுத்த ஒருமாதகாலம் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும் சஞ்சரிக்கிறார்.

மகர ராசியிலே நீசம் அடைகிறார். சனி பகவான் மகரத்திலே சஞ்சரிப்பதால், குரு நீசபங்கம் அடைகிறார். எனினும் குரு சனியுடைய இணைவு எப்படிப்பட்ட பலன் தரும்?

இரண்டு கிரஹங்கள் பரிவர்த்தனை செய்தாலும், ஒரு கிரஹத்தால் மற்றொரு கிரஹம் நீசபங்கம் அடைந்தாலும் அவ்விரண்டு கிரஹங்களும் நட்பு கிரஹங்களாக இருந்தால் தரும் பலன் ஒன்று, பகை கிரஹங்களாக இருந்தால் தரும் பலன் ஒன்று.

அதுபோலவே சுப கிரஹங்களாக இருந்தால் தரும் பலன் ஒன்று, அசுப கிரஹங்களாக இருந்தால் தரும் பலன் ஒன்று.

இந்த குரு சனியுடைய இணைவானது ஒவ்வொரு ராசிக்கும் எவ்விடத்தில் இருக்கின்றது என்பதையும், இவர்கள் எந்த ஸ்தானத்திற்கு அதிபதிகளாக இருக்கிறார்கள் என்பதையும் பொருத்து பலன்கள் இருக்கும்.

மேலும் காலபுருஷ தத்துவத்தின் பத்தாமிடமாகிய ஜீவன ஸ்தானத்திலே குரு சனி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் மனதில் கொண்டு மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளுக்கும் மகர குரு தரும் பலனையும், பாதக பலனிருந்து தற்காத்துக் கொள்ளவும், சாதக பலனை முழுமையாக அடையவும் உண்டான வழிமுறையையும் அறிந்து கொள்வோம்.

மேலும் 12 ராசி அன்பர்களும் வழிபட வேண்டிய தெய்வம், கடைபிடிக்க வேண்டிய விரதம் இவற்றையும் பார்ப்போம்.

மேஷராசி முதல் மீனராசி வரையிலான 12 ராசிக்குமான புரட்டாசி மாத பலன்களை அடுத்த பதிவிலே பார்ப்போம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading