மஹாளய பக்க்ஷ காலம் எது? மஹாளயபக்க்ஷ விரதத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும்? ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? மஹாளயபக்க்ஷ காலத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவையெவை? பித்ரு தோஷமும் மஹாளயபக்க்ஷம் மூலம் தீர்வும்! மற்றும் மஹாளயபக்க்ஷ மகத்துவங்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
மஹாளய பக்க்ஷ காலம் எது? புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவசை. இதற்கு முந்தைய பக்க்ஷம் மஹாளயபக்க்ஷம். இவ்வாண்டு (பிலவ வருஷம்) புரட்டாசி 5 ஆம் (21.௦9.2௦21) தேதி செவ்வாய் அன்று மஹாளயபக்க்ஷம் தொடங்குகிறது. புரட்டாசி 2௦ (௦6.1௦.2௦21) புதன்கிழமை அன்று மஹாளய அமாவாசை.
மஹாளயபக்க்ஷ விரதத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும்? முன்னோர் வழிபாடு என்றாலே தந்தை இல்லாதவருக்கு மட்டும்தான். தந்தை இருப்பவர்களுக்கும் மஹாளயபக்க்ஷ விரதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.
ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? இறந்தபோன நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலே இருப்பர். அவர்கள் தங்களுடைய சந்ததியினரை பார்க்க, பிள்ளைகள் கொடுக்கக்கூடிய தர்ப்பணம் திதி மூலமாக திருப்தியடைய, ஏற்படுத்தப்பட்ட, அனுமதிக்கப்பட்ட காலமே மஹாளயபக்க்ஷம்.
கிரஹங்களும் பூமியும் சதாசர்வ காலமும் சுற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த சுற்றின் காரணமாக பித்ருலோக முன்னோர்களின் தொடர்பு அருகாமையிலே ஏற்படலாம். உதாரணமாக வருடத்தில் புரட்டாசி ஐப்பசி மாதங்களில் ( ஐப்பசி பௌர்ணமி) சந்திரன் பூமிக்கு அருகாமையில் இருக்கும்.
கன்னி ராசியிலே சூரியன் சஞ்சரிக்கின்ற மாதம் புரட்டாசி மாதம். இக்கன்னி ராசி காலபுருஷ தத்துவத்தின் ஆறாம் ராசி . ஜோதிட சாஸ்திரத்திலே ஆறாமிடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். புரட்டாசி மாதம் பொன்னுருக காயும் மன்னுருக பேயும் என்று சொல்லப்படக்கூடிய சமனில்லாத சீதோஷ்ண நிலையைக்கொண்ட நோய்நொடிகளை ஏற்படுத்தக்கூடிய மாதம்.
நாம் நோய்க்கு ஆளாகாமல் இருக்கவும், நல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கவும் மஹாளயபக்க்ஷத்திலே முன்னோரையும், அதையொட்டி நவராத்திரியிலே இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தியாகிய முப்பெருந் தேவியர்களையும், சனிக்கிழமைகளிலே பெருமாளையும் வேண்டி வழிபடுகிறோம்.
விரதம் பூஜை வழிபாடு என்று தொடங்கிவிட்டாலே உடல்தூய்மை மனத்தூய்மை உணவுக்கட்டுப்பாடு சுத்தம் சுகாதாரம் என்பது அத்தியாவசியம் ஆகிவிடுகின்றது. இதன்மூலம் நோயை தடுக்கலாம். பலஹீனததிற்கு இடந்தராமல் மனோபலம் தேகபலம் பெறலாம்.
மஹாளய பக்க்ஷ காலம் எது? மஹாளயபக்க்ஷ விரதத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும்? ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? என்பனவற்றை இப்பதிவிலே பார்த்தோம். இதன் தொடர்ச்சியை மேற்கண்ட கேள்விகளுக்குண்டான விளக்கங்களை அடுத்த பதிவிலே பார்ப்போம்.
இதுபோன்று, தொடர்ச்சியாக வரக்கூடிய விரதங்கள் பண்டிகைகள் ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை இவ்வலைத் தளத்திலே குருவருளால் திருவருளால் தொடர்ந்து பதிவிடுவோம். படித்து பயன் பெறுங்கள்.
கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, ஸ்ரார்தம் (திவசம்) செய்து வைக்க அணுகவும் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply