பரிகாரம் செய்தும் பலன் கிடைக்கலையா? பரிகாரங்களும் பலன்களும் PART 2

வது/வரன் கிடைக்க திருமணம் நடக்க புத்திரப்பேறு கிடைக்க கல்வியில் தேர்ச்சிபெற உத்தியோகம் கிடைக்க பதவி உயர்வு உண்டாக சுயதொழிலில் சாதிக்க வியாபாரத்தில் வெற்றிபெற கடன்தீர வழக்கு முடிய நோய் அகல வெளிநாடு செல்ல மனை வாங்க வீடு வாங்க/கட்ட வாகனயோகம் கிடைக்க ஆபரணம் வாங்க/தங்க செல்வம் சேர பிரிந்தவர் இணைய தம்பதிகள் அந்யோன்யமாக இருக்க சகோதர ஒற்றுமை நிலைக்க கலைகளில் தேர்ச்சிபெற பூர்வீக சொத்து கைவந்துசேர குலதெய்வம் தெரியவர ஜனவசியம் பணவசியம் தொழில்வசியம்-விரும்பியது வசமாக பயம்விலக துணிவுபிறக்க எதிர்மறை/தீய எண்ணங்கள் விலக தாய் தந்தையர் நன்றாக இருக்க அரசாங்க பதவி/அனுகூலம் கிடைக்க கடமையை நிறைவேற்ற தொட்டது துலங்க எதிலும் லாபம்/வெற்றி உண்டாக பெயர் புகழ் பிரபல்யயோகம் கிடைக்க நல்ல தூக்கம்வர ஆன்மீக நாட்டம் உண்டாக நல்ல குரு கிடைக்க முக்தி/மோட்சம் பெற……. நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலன்தராமல் போக காரணங்கள் யாவை? தீர்வு என்ன?

பரிகாரம் பலன்தரலையா? பரிகாரம்-கேள்வி பதில்கள் என்ற தலைப்பிலே கடந்த பதிவில் பரிகாரங்கள் பலன்தர பல வழிகளை பார்த்தோம்.

பரிகாரங்கள் பலன்கள் பற்றிய மேலும் சில பயனுள்ள தகவல்களை இனி பார்ப்போம்.

பரிகாரங்களை செய்கின்ற ஒவ்வொருவரும் கொஞ்ச காலம் பார்த்திருந்துவிட்டு காத்திருந்துவிட்டு தான், பரிகாரங்கள் பொய்யா? பிராயச்சித்தங்கள் பித்தலாட்டமா? இராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரம் விடாதா? காசிக்கே போனாலும் கர்மம் தொலையாதா? என்ற இக்கேள்விகளை கேட்கிறீர்கள்.

முதலில் பரிகாரங்கள் பலனை தரும் சூக்க்ஷுமத்தை அறிந்து கொள்ளுங்கள். விபத்திலிருந்து மீண்டுவர வியாதி குணமாக நோய் தீர செய்யப்படும் வைத்தியமானது, நோயாளியுடைய உடல்தன்மை, நோயின் ஆரம்பநிலை / நோய் முற்றிய நிலை, அதற்கேற்ற சிகிச்சை, முக்கியமாக நோயாளியின் கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, பத்தியங்களை சரியாக கடைபிடிப்பது இவற்றின் மூலம் பலன்தரும்.

குறிப்பாக அறுவைசிகிச்சைக்கு முன்னும் பின்னும் செய்யவேண்டிய/தவிர்க்கவேண்டியவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி கடைபிடிக்கக்கூடிய நோயாளிக்கு சிறந்த பலன் கிடைக்கும். அதுபோல

தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் பரிகாரமானது, தோஷத்தின் அளவு / தீவிரம் / காலம் அதாவது தோஷம் குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா? , தோஷம் லக்னத்திலிருந்தா? இராசியிலிருந்தா?, தோஷம்பெற்ற கிரஹ தசை நடக்கிறதா?, கோசார ரீதியாக தோஷமா? போன்றவற்றை பொருத்து பலன்தரும். முக்கியமாக…

பரிகாரம் எப்போது செய்யப்படுகிறது? அதாவது தோஷத்தின் விளைவு தொடங்கிய பிறகா? முன்பா? அதாவது மணவயது தொடங்கும்போதே களத்திர தோஷம் நிவர்த்தி செய்துவிடுவது. புத்திர தோஷமிருந்தால் திருமணத்திற்கு முன்பே பரிகாரம் செய்துவிடுவது. இப்படியாக தடை தாமதம் பிரச்சனை ஏற்படும் முன்பே பரிகாரம் செய்தால் சிறந்த பலன் தகுந்த காலத்திலேயே கிடைக்கும். மிக முக்கியமாக…

தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் பரிகாரத்தையொட்டி அதற்குப்பின்னே, அசுபபலன் தரும் கிரஹத்தின் வீரியத்தை குறைக்கும் பொருட்டும், சுபபலன் தரும் கிரஹத்தின் பலனை கூட்டும்பொருட்டும், கடைபிடிக்கவேண்டிய விரதங்கள் போகவேண்டிய கோவில்கள் செய்யவேண்டிய வழிபாடுகள் மேலும் அன்றாட வாழ்க்கையிலே அவசியம் செய்யவேண்டியது, கட்டாயம் தவிர்க்கவேண்டியது இப்படியானவற்றை பரிகாரம் சொல்லக்கூடிய ஜோதிடரிடத்திலே குருவிடத்திலே பெரியோரிடத்திலே கேட்டறிந்து கடைபிடித்தால் பரிகாரமானது கட்டாயம் பலன்தரும் இது உறுதி.

இனி போவதற்கு கோவிலே பாக்கியில்லை புதிதாக கட்டினால்தான், செய்வதற்கு பரிகாரமே மீதல்லை ஏதாவது கண்டுபிடித்தால்தான் என்ற அளவிற்கு நிறைய கோவில் குளம் சென்றவர் பரிகாரம் செய்தவர் ஒருபலனையும் அடையவில்லை என்ற விரக்தி வெறுப்பிலே நம்பிக்கை அற்றுப்போய் இருப்பர். அப்படிப்பட்டவர்கூட இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற ஒன்றை கூறுகிறேன் கேளுங்கள்.

உங்களுடைய கடனை முழுவதுமாக நீங்கள் அடைத்துவிட்டீர்கள். ஆம். உங்கள் தோஷமானது முற்றிலுமாக கழிந்துவிட்டது. அப்படியெனில் எதற்காக பலன் கிடைக்கவில்லை? என்று கேட்கிறீர்களா. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்துவிட்டாலும், அதற்கு மருத்துவரின் பரிந்துரைகளை தவறாது பின்பற்றவேண்டும் என ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறோம். அதாவது

கடன்பட்டு இருந்தீர்கள் அது தோஷம், பாடுபட்டு உழைத்து பொருளீட்டி வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி சிக்கனாமாய் இருந்து கடனை அடைத்து விட்டீர்கள் அது பரிகாரம். இந்நிலையிலே கடனுமில்லை, கையிலே பெரும்பொருளும் இல்லை. அதாவது நீங்கள் செல்வந்தர் ஆகவில்லை. அதாவது பலன் கிடைக்கவில்லை.

இனி கொஞ்சம் கொஞ்சமாய் பொருள்சேர்த்து நல்ல நிலையை அடையவேண்டும். அதாவது

(தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் பரிகாரத்தையொட்டி அதற்குப்பின்னே, அசுபபலன் தரும் கிரஹத்தின் வீரியத்தை குறைக்கும் பொருட்டும், சுபபலன் தரும் கிரஹத்தின் பலனை கூட்டும்பொருட்டும், கடைபிடிக்கவேண்டிய விரதங்கள் போகவேண்டிய கோவில்கள் செய்யவேண்டிய வழிபாடுகள் மேலும் அன்றாட வாழ்க்கையிலே அவசியம் செய்யவேண்டியது, கட்டாயம் தவிர்க்கவேண்டியது இப்படியானவற்றை பரிகாரம் சொல்லக்கூடிய ஜோதிடரிடத்திலே குருவிடத்திலே பெரியோரிடத்திலே கேட்டறிந்து கடைபிடித்தால் பரிகாரமானது கட்டாயம் பலன்தரும் இது உறுதி).

தோஷம் என்பது MINUS ( -) .

MINUS ( -) ல் இருந்து ZERO ( ௦ ) பூஜ்ஜியத்திற்கு வருவது தோஷ பரிகாரம்.

PLUS ( + ) 1 2 3 என உயர்வது பலன்.

அப்பலனை அடைய , மேற்சொன்னதை கடைபிடிக்கவேண்டும்.

பரிகாரம் செய்த உடனேயே பலன் கிடைக்குமாறு பகவான் செய்யக்கூடாதா? என்றால் நம்முடைய கர்ம வினைகளை கழிக்க வேண்டுமல்லவா. அதற்காக கலியுகத்திலே கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால் நம்பிக்கையோடு வழிபாடு செய்யங்கள் நல்லதே நடக்கும்.

க்ரஹண தோஷம் பித்ருதோஷம் புனர்பூதோஷம் பாபகத்தரி தோஷம் செவ்வாய் தோஷம் குருசண்டாள தோஷம் புத்திர தோஷம் களத்திரதோஷம் 7 1/2, அஷ்டம சனி தோஷம் நாகதோஷம் தாரதோஷம் காலசர்ப்பதோஷம் பிரம்மஹத்தி தோஷம் …… இப்படியான பலமான தோஷங்களுக்கும் பலன்தரும் பரிகாரங்களை அறிந்து பயனடைய தொடர்பு கொள்ளுங்கள்.

பரிகாரங்கள் பலன்தரும் காலம் எது? எந்த பரிகாரங்கள் எப்போது பலன்தரும்? DO’S & DON’TS OF BEFORE AND AFTER PARIGARAM ? பலன்தரும் பரிகாரங்களை பற்றிய மேலும்பல அறிய இரகசிங்களை தொடர்ந்து அடுத்த பதிவிலும் அறிந்துகொள்வோம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading