நாகங்களை நாம் ஏன் வணங்க வேண்டும்? ஏன் பூஜிக்க வேண்டும்? எதற்காக புற்றிலே பாலூற்ற வேண்டும்? அப்பாலை பாம்பு குடிக்குமா? நாகதோஷம் அங்காரக (செவ்வாய்) தோஷம் எதனால் ஏற்படுகிறது? சர்ப்பதோஷத்தின் விளைவு யாது? நாக/சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? பாம்பு பழி வாங்குமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஆடிமாதம் விதை விதைக்கின்ற விவசாயப்பனிகள் தொடங்குகின்ற காலம். விவசாயப்பணிகள் செய்யும்போது பாம்புகளால் ஆபத்து உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று
விதை விதைப்பதற்கான விசேஷ நாளான இந்த நாக சதுர்த்தி நாளிலே நாகராஜ பூஜை வழிபாடு செய்வர்.
முக்கியமாக விளைந்த தானியங்களை எலிகளானது பெரிய அளவில் சேதப்படுத்துகிறது. அவ்வெலிகளை வேட்டையாடுகிற, அதனுடைய பெருக்கத்தை குறைத்து, அதன்மூலம் தானியங்களின் சேத அளவை குறைக்கின்ற பாம்புகளை கொல்லாமல், அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாகங்களை வழிபடுவர்.
எதற்காக புற்றிலே பாலூற்ற வேண்டும்? அப்பாலை பாம்பு குடிக்குமா? பிறக்கும்போது பால் கொடுக்கப்படுவது தொடங்கி இறந்தபின் பாலூற்றுவது வரை நம்முடைய வாழ்க்கையிலே, பாலானது முக்கிய இடம் வக்கிகிறது.அப்பாலை நமக்கு தருவதால் பசுவை கோமாதா என அன்னையாக கொண்டாடுகிறோம். ‘பாலுண்ட வீட்டிற்கு பகை நினைக்காதே’ என்ற சிறந்த வாக்கியமானது வாழ்க்கையிலே கடைபிடிக்கப் படுகிறது.
ஆகையால் இவ்வளவு விசேஷமான இந்த பாலை புற்றிலே ஊற்றுவதால், நாகங்கள் நம்மை அன்னையாக நினைக்கும். நமக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. நாமும் அதற்கு தீங்கு செய்யக்கூடாது. என பரஸ்பர நன்மை கருதி புற்றுக்கு பால் ஊற்றுகிறோம். ஆதலால் பாம்பு பால் குடிக்குமா? குடிக்காதா? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.
மேற்சொன்னதை ஏற்கமுடியாதவர்க்கு இன்னுமொரு எளிய விளக்கம். இல்லத்திலோ திருக் கோவில்களிலோ முன்னோர் வழிபாட்டிலோ நைவேத்யம் படையல் போல நாக வழிபாட்டிலே பால் ஊற்றுகிறோம்.
நைவேத்யம் என்றால் ஸ்வாமிக்கு காட்டிவிட்டு பெரும்பாலும் நாமே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் புற்றுக்கு பால் ஊற்றும்போது அது வீணாகிறதே என்ற கேள்வி எழுகிறவர்க்கு – ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் செய்வதுபோல, என்பதாக நினைத்து புரிந்து கொள்ளலாம்.
பாம்பு பழி வாங்குமா? அடிபட்ட புலி, யானைக்கு ஞாபகசக்தி அதிகம், நாய்க்கு நன்றி அதிகம், நரிக்கு தந்திர குணம் உண்டு, இப்படியாக அடிபட்ட பாம்பு என்றும் சொல்லப்படுகிறது. இதைக்கொண்டு பாம்பு தேடிவந்து பழிவாங்குமா ? என்று சிந்திப்பதைக் காட்டிலும், பாம்பை அடிக்ககூடாது என்பதற்காக சொல்லப்பட்டது.
பாம்பை ஏன் அடிக்ககூடாது? நாகதோஷம் அங்காரக (செவ்வாய்) தோஷம் எதனால் ஏற்படுகிறது? சர்ப்பதோஷத்தின் விளைவு யாது? நாக/சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? இப்பதிவின் ஆரம்பத்திலே நாம் பார்த்தவாறு நாம் வணங்கும் பெரும்பாலான கடவுள்களோடு இந்த நாகங்களானது இருக்கிறது. அதனால் பாம்பை அடிக்கக்கூடாது.
விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிற எலிகளை கட்டுப்படுத்துகிறது என்பதற்காகவும் பாம்பை அடிக்கக்கூடாது.
இவ்வுலகத்திலே இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் இறைவனால் படைக்கப்பட்டவை. ஆகையால் எவ்வுரையும் நாம் கொல்லக்கூடாது. துன்புருத்தக்கூடாது. தொந்தரவு செய்யக்கூடாது. இறந்த உயிரை மீட்கக்கூடிய சக்தியோ, உயிரை படைக்கக்கூடிய சக்தியோ நமக்கில்லாதபோது, உயிரைக் கொல்வது எவ்வகையில் நியாயம்?
மேலும் உயிர்கள் அனைத்தையும் படைத்தவர் ஒருவர் எனும்போது, உலக உயிர்கள் எல்லாம் சமமே,நம் உடன் பிறந்தவையே. ஆகையால் எவ்வுயிரையும் கொல்லுதல் கூடாது.
மீறி உயிர்க்கொலை புரிந்தால், படைத்தது மட்டுமல்லாமல் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறாரே கடவுள் , அந்த பாம்பை அடித்தால், புற்றை இடித்தால் நாகதோஷம், சர்ப்பதோஷம்,காலசர்ப்பதோஷம்,அங்காரக தோஷம் உண்டாகும்.
ஆனால் நம்மை தற்காத்துக் கொள்ளும்பொருட்டும் அச்சமேற்படுத்திய சூழலிலும் வேறு வழியில்லாதபோதும் அடித்திருந்தால் பாவமில்லை,தோஷமில்லை.
நாகதோஷம், சர்ப்பதோஷம்,காலசர்ப்பதோஷம்,அங்காரக தோஷம் இவற்றிற்கு பரிகாரம் – பொதுவாக நாக சதுர்த்தி விரதம் பூஜை வழிபாடு இத்தோஷங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.
ஒவ்வொருவரும் சுயஜாதகம் பார்த்து தோஷம் எவ்வளவு பரிகாரம் எது என்பதை அறிந்து மனமுருகி பயபக்தியோடு பக்தி ஸ்ரத்தையோடு ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு பிராயச்சித்தங்கள் செய்தால் தீராத தோஷம் அனைத்தும் தீரும்.
அனைவருக்கும் ஸகல தோஷமும் அகன்று சந்தோஷம் உண்டாக பிரார்த்திக்கிறேன்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply